செய்திகள் :

"சிங்கப்பெண் படையின் முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா?" - தூத்துக்குடி சம்பவத்திற்கு பழனிசாமி கண்டனம்

post image

தூத்துக்குடியில் நடந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இன்றைய முதலமைச்சரின் ரசிகையான பெண் ஒருவர் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

ஸ்ரீவைகுண்டம் தவெக எம்.எல்.ஏ சரவணன் ஆதரவில், இந்தக் கொடூரத்தை ஆளுங்கட்சியைச் சேர்ந்த இருவர் அரங்கேற்றியுள்ளதாக தெரிகிறது.

மேலும், இதனை மறைக்க, தவெக எம்.எல்.ஏ சரவணனே அந்த பெண்ணிடம், “அமைச்சரிடம் பேசி வேலை வாங்கித் தருவதாக” சமரசம் பேசியதாக செய்திகள் வருகின்றன.

சிங்கப்பெண் அதிரடிப்படை
சிங்கப்பெண் அதிரடிப்படை

சிங்கப்பெண் அதிரடிப் படைக்கான முதல் வழக்கே ஆளுங்கட்சி வழக்கா? அதுவும், ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ இப்படி கேடுகெட்டத்தனமான செயலுக்குச் சமரசம் பேசுவதை இன்றைய முதல்வர் ஏற்றுக்கொள்கிறாரா?

உங்களை திரையில் ரசித்து வளர்ந்த பெண்ணுக்கு, உங்கள் ஆட்சியில், உங்கள் கட்சியினரால் நடைபெற்றுள்ள இந்தக் கொடுமைக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளதை உணர்கிறீர்களா?

“அமைச்சருக்கு தெரியும்; மேலிடத்திற்கு தெரியும்” என்றெல்லாம் தெனாவட்டு பேச்சுகள் வருகின்றன என்றால், அப்படி என்ன மேலிடம்? யார் அது? முதல்வரா? அல்லது, முதல்வரைத் தாண்டிய ஏதேனும் பவர்சென்டர்-ஆ?

சிங்கப்பெண் அதிரடிப் படை துவக்க விழாவில் சிங்கிள் டேக்கில் பேசிய வசனங்களை எல்லாம் உங்கள் கட்சியினரைப் பார்த்து பேசுங்கள் முதல்வரே!

பாலியல் வன்கொடுமைக்கு வக்காலத்து வாங்கி சமரசம் பேசி மறைக்க முயன்ற உங்கள் கட்சி எம்.எல்.ஏ-வை பதவி ராஜினாமா செய்ய வைத்து கைது செய்ய இன்றைய முதல்வருக்கு தெம்பு, திராணி இருக்கிறதா?

மேலும், வேறொரு பெண்ணுக்கும் இக்கொடுமை நடந்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

அதனால், இந்த வழக்கை எந்த அரசியல் இடையூருக்கும் இடமின்றி விசாரித்து, குற்றம் இழைத்தவர்கள் மீதும், குற்றத்திற்கு துணை போனோர் அனைவர் மீதும், அது யாராக இருந்தாலும் சரி, எந்த எம்.எல்.ஏவாக, அமைச்சராக இருந்தாலும் சரி, கைது செய்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்றைய பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்" என்றார்.

'முதல்வர் விஜய்யா.. ஸ்டாலினா?' டு 'எனக்கு எந்த அதிகாரமும் இல்லங்க' தவிக்கும் மாண்புமிகு! | கழுகார்

பதக்கத்தால் வெடிக்கும் பஞ்சாயத்து!'முதல்வர் விஜய்யா.. ஸ்டாலினா..'தமிழக காவல்துறை பணியில் பத்து ஆண்டுகள் நிறைவு செய்து, எந்தவித தண்டனையும் பெறாமல் தூய பணிக் காலத்தை கொண்ட காவல் அதிகாரிகளுக்கு, முதல்வர்... மேலும் பார்க்க

அரசு கேபிளில் மீண்டும் ஒளிபரப்பாகும் பாலிமர், நியூஸ் தமிழ், தமிழ் ஜனம் - சர்ச்சைக்கு முடிவா ?

தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிபரப்பில் இருந்து பாலிமர் நியூஸ், நியூஸ் தமிழ் மற்றும் தமிழ் ஜனம் ஆகிய மூன்று செய்தி சேனல்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் நீக்கப்பட்டிருந்தது சர்ச... மேலும் பார்க்க

’திமுக கூட்டணியில் இப்போதைய சூழலில் இடம்பெற இயலாது!’ – சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதிரடி

கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “நீட், சிபிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து மக்... மேலும் பார்க்க

`எங்கள் வாடிக்கையாளர்கள் அமெரிக்காவில்.!' - இந்திய ஊழியர்களை ஒரே மெயிலில் பணிநீக்கம் செய்த ஓபன்டோர்

உலகத்தையே தொழில்நுட்பம் ஒரு கிராமமாகச் சுருக்கிவிட்டது என்று நாம் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், அந்தத் தொழில்நுட்ப உலகின் ஒரு மூலையில் இருந்து வந்த ஒரு வாக்கியம், இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள... மேலும் பார்க்க

கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்: '3 இந்தியர்கள் உயிரிழப்பு' - இந்திய அரசு என்ன சொல்கிறது?

ஓமன் வளைகுடாவில் ஈரான் எண்ணெயை ஏற்றிச் சென்ற பாலாவ் (Palau) கொடி ஏந்திய எண்ணெய் கப்பல் செட்டபெல்லோ மீது கடந்த 9-ம் தேதி தாக்குதல் நடத்தியது அமெரிக்க ராணுவம். அந்தக் கப்பலில் இருந்து மூன்று இந்தியர்களை... மேலும் பார்க்க

`15 வருட ராஜ்ஜியம்... 35 நாளில் சரிந்தது' திரிணாமூலை காங்கிரஸோடு இணைக்க மம்தா பேச்சுவார்த்தை?

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அக்கட்சியை சேர்ந்த பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களும், எம்.பிக்க... மேலும் பார்க்க