நீங்களும் ஆகலாம் பிக்பாஸ் போட்டியாளர்! 'பிக்பாஸ் தி காமன் மேன்' எதற்கு தெரியுமா?
இளம்பெண் கூட்டு பாலியல் கொடுமை வழக்கு; `எம்.எல்.ஏ சரவணனை ஏன் கைது செய்யவில்லை?' - வலுக்கும் கண்டனம்!
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர், பாலமுருகன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். அவரது நண்பர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயபால். இவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக உள்ளார். இவர்கள் இருவரும் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் (தவெக நிர்வாகி) ஒருவரிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவரை காரில் அழைத்துச் சென்றுள்ளனர்.

ராமநாதபுரம் அருகே ஏர்வாடி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, இருவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர், அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்த போதுதான், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அவருக்குத் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் உடனே இந்தச் சம்பவம் தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் பாலமுருகன் மற்றும் ஜெயபால் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவுசெய்ததுடன் கைதுசெய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், “ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ சரவணன் கூறியதன் பெயரிலேயே பாலமுருகன் என்னை அழைத்துச் சென்றார். அதனை நம்பிதான் பாலமுருகனுடன் காரில் சென்றேன். ராமநாதபுரத்தில் இருந்து ஒருவர் வந்து கொண்டிருக்கிறார்.

அதுவரை இந்த அறையில் இருங்கள் எனச் சொல்லிவிட்டு என்னை அங்கு உட்கார வைத்தார் பாலமுருகன். பின்னர் சிறிது நேரத்தில் கூல்டிரிங்க்ஸ் கொடுத்தார். சிறிது நேரத்தில் மயக்கமானேன். அதன் பின்னர்தான் நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது. நான் கண் விழித்துப் பார்க்கும்போது அறையில் யாருமே இல்லை. அழுது கொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினேன். பின்னர் நான் அளித்த புகாரின்பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டாலும் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் சொல்லித்தானே என்னை அழைத்துச் சென்றார்கள்.
அப்போது ஏன் சரவணனை விசாரிக்கவில்லை? இது குறித்து கட்சி தலைமையிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு சொந்தக் கட்சி நிர்வாகியால் கட்சியின் பெண் உறுப்பினருக்கே இந்த நிலைமையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார், அந்தப் பெண். இந்த நிலையில், `ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணனைக் கைதுசெய்ய வேண்டும், தலைமைக்கும் இந்த விவகாரம் தெரியும் என அந்தப் பெண் கூறுகிறார். அப்படியென்றால் யார் அந்த தலைமை. ஒரு பெண் அமைச்சருக்கும் தெரியும் என்கிறார்.

அப்படியென்றால் யார் அந்த பெண் அமைச்சர்?' என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது எக்ஸ் தளத்தில் பதிவுசெய்துள்ளனர். அத்துடன் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.















