செய்திகள் :

போலீஸ் ரெய்டு: குக்கரில் சாதத்துடன் கஞ்சாவை அவித்த இளைஞர் - காட்டிக்கொடுத்த விசில்!

post image

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட பிறகு போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்கும் விதமாக 'ஆப்ரேஷன் தூஃபான்' செயல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றவாளிகள் தற்போது என்னச் செய்கிறார்கள் என கண்காணிக்கும்படி திருச்சூர் சிட்டி போலீஸ் கமிஷனர் நகுல் ராஜேந்திர தேஷ்முக் உத்தரவிட்டிருந்தார்.

போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் இப்போது என்ன வேலை செய்கிறார்கள், அவர்கள் கேரளத்துக்கு வெளியே பயணம் செய்கிறார்களா என்பது போன்ற பல விபரங்களை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர்.

அந்த வகையில், திருச்சூர் குன்னங்குளம் அருகே உள்ள அடுப்புட்டி பகுதியைச் சேர்ந்தவர் பினீஷ் (40) என்பவரையும் போலீஸார் கண்காணித்து வந்தனர். இவர் போதைப்பொருள் வழக்கு மற்றும் மதுவிலக்கு போலீஸாரை கத்தியைக்காட்டி மிரட்டிய வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டவர் ஆவார்.

பினீசை கண்காணித்ததில் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக குன்னங்குளம் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் பினீஷின் வீட்டிற்குச் சென்று திடீர் சோதனை நடத்தினர்.

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட பினீஷ்

பினீசின் வீட்டுக்கு உள்ளேயும், வெளிப்பகுதியிலும் தேடியும் கஞ்சா கிடைக்கவில்லை. ஆனால், அவர் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் உறுதியானது என்பதால் போலீஸார் அவரை வீட்டுக்குள் வைத்தே விசாரணை நடத்தினர். வீட்டில் கஞ்சா இல்லை என்று தொடர்ந்து கூறிவந்தார் பினீஷ். 

அந்த சமயத்தில், சமையல் அறையில் திடீரென குக்கர் விசில் அடிக்கும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து, வீடு முழுவதும் கஞ்சா வாசனை பரவியது. குக்கரில் என்ன சமைக்கிறாய் என போலீஸார் கேட்டதற்கு, சாதம் வைப்பதாக சொன்னார் பினீஷ்.

சந்தேகம் அடைந்த போலீஸார் சமையல் அறைக்குச் சென்று, அடுப்பை அணைத்ததுடன் குக்கரை கீழே இறக்கினர். குக்கரில் உள்ள நீராவி முழுவதையும் வெளியேற்றிவிட்டு திறந்து பார்த்தனர். குக்கர் நிறைய சாதம் வெந்த நிலையில் இருந்தது.

சந்தேகத்தின்பேரில் சாதத்தை கைகளில் அள்ளியபோது, உள்ளே பிளாஸ்டிக் கவர் ஒன்று தட்டுப்பட்டது. அதை எடுத்து பிரித்து பார்த்தபோது, 400 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

குக்கரில் இருந்து மீட்கப்பட்ட கஞ்சா பொட்டலம்

குக்கருக்குள் கஞ்சா சென்றது எப்படி என பினீசிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதற்கு பினீஷ், "போலீஸ் வருவது தெரிந்ததும் கஞ்சாவை எங்கு மறைத்து சைப்பது என தெரியவில்லை. குக்கரில் சாதம் வைக்க அரிசி போட்டிருந்தேன். திடீரென யோசனை தோன்றியதால், கஞ்சா பொட்டலத்தை குக்கருக்குள் போட்டு மூடி வைத்துவிட்டேன். குக்கர் விசில் அடித்ததால் கஞ்சா வாசனை வெளியறிது. அதனால், நான் சிக்கிவிட்டேன்" என்றார் அப்பாவியாக.

இதையடுத்து கஞ்சா விற்பனை வழக்கில் பினீஷ் கைதுசெய்யப்பட்டார். அரைக் கிலோவுக்கும் கீழ் கஞ்சா பிடிக்கப்பட்டதால் சட்ட நடவடிக்கைகளுக்குப்பின் பினீஷ் ஜாமினில் விடுவிக்கப்பாட்டார். போலீஸை கண்டதும் கஞ்சாவை குக்கரில் சாதத்துடன் வேகவைத்த இளைஞரின் செயலும், குக்கர் விசிலடித்ததால் அவர் மாட்டிக்கொண்டதும் சினிமா காமெடியை விஞ்சும் வகையில் அமைந்துள்ளது.

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க

சேலம்: பண உதவி செய்வதாக ஏமாற்றி 30 பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த தவெக நிர்வாகி - அதிர்ச்சி பின்னணி

சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அருகில் உள்ள புத்தூர் அக்ரஹாரம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் 40 வயதான மணிகண்டன். த.வெ.க ஒன்றிய நிர்வாகியான மணிகண்டன், வீட்டின் அருகில் கடை நடத்தி வரும் நிலையில... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி : 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ வழக்கில் 16 வயது சிறுவன் கைது!

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஓசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்சோகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில... மேலும் பார்க்க