செய்திகள் :

கிருஷ்ணகிரி : 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ வழக்கில் 16 வயது சிறுவன் கைது!

post image

16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஓசூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போக்சோ
போக்சோ

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டாரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயதான சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை தெரிந்துகொண்ட அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமி கூச்சலிட அங்கிருந்து சிறுவன் வெளியே ஓடியுள்ளார்.

போக்சோ வழக்கு

அதன் பின் நடந்த சம்பவத்தை தன் பெற்றோரிடம் சிறுமி தெரிவிக்க, உடனே அவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதன்பின்பு தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி தரப்பில் புகார் செய்தனர்.

புகாரை விசாரித்த தேன்கனிக்கோட்டை மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவனை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

காய்கறிகளுக்கு இடையே ரகசியமாக கஞ்சா செடி வளர்ப்பு – ஒடிசா மாநில தொழிலாளி சிக்கியது எப்படி?

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மாதாபெனந்தா ஜெனா (46) என்ற நபர், கடந்த 27 ஆண்டுகளாக கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக தடாகம் அருகேயுள்ள பன்னிமடை கணேஷ் நகர் பகுதியில் உள்... மேலும் பார்க்க

மைசூரு டு கோவை: பூண்டு லோடில் பதுக்கி கொண்டு வரப்பட்ட 440 கிலோ குட்கா மூட்டைகள் - பிடிபட்டது எப்படி?

தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள குட்கா, பான் மசாலா பொருள்கள் அண்டை மாநிலமான கர்நாடகாவில் எந்தவித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. கர்நாடகாவில் இருந்து கிலோ கணக்கில் குட்கா பொருள்களை பதுக... மேலும் பார்க்க

திருத்தணி: சிறுவன் கொலை; 4 மாதங்களுக்கு பிறகு உண்மையைக் கூறிய அம்மா - தம்பதி சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு என்ற இடத்தில் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் வெண்ணிலா என்பவர் வேலை ச... மேலும் பார்க்க

தந்தையின் வீட்டைக் காலி செய்ய கோர்ட் உத்தரவு; கோபத்தில் 82 வயது தந்தையைக் குத்திக்கொன்ற மகன்

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் வசித்தவர் ஜாபர் பட்டேல்(82). ஒய்வுபெற்ற அரசு ஊழியரான ஜாபர் பட்டேலை அவரது மகன் அப்துல் ரஹ்மான் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி அடித்து உதைத்து திட்... மேலும் பார்க்க

`சல்மான் கானுடன் பழகுபவர்களுக்கு எச்சரிக்கை!' - ஜிம் உரிமையாளரை சுட்டுக்கொன்ற பிஷ்னோய் கேங்க்

டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பிஷ்னோய் கூட்டத்தினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பைக்கில் மோதிய சரக்கு வாகனம்; தாத்தா, பேரப்பிள்ளைகள் பலியான சோகம்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்துள்ள ஓச்சேரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 60). இவர், அதே பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்தார். இவரின் பேரப்பிள்ளைகள் அஜய் (9), குணஸ்ரீ... மேலும் பார்க்க