செய்திகள் :

திருத்தணி: சிறுவன் கொலை; 4 மாதங்களுக்கு பிறகு உண்மையைக் கூறிய அம்மா - தம்பதி சிக்கிய பின்னணி

post image

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு என்ற இடத்தில் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் வெண்ணிலா என்பவர் வேலை செய்து வருகிறார்.

வெண்ணிலாவுடன் அவரின் மகன்கள் சுரேஷ் (15) சூர்யா (7) தேவா ( 4) ஆகியோரும் பண்ணையிலேயே தங்கியிருந்தனர். இந்தநிலையில்தான் திருத்தணி காவல் நிலையத்துக்கு வந்த வெண்ணிலா, என்னுடைய மூத்த மகன் சுரேஷை மூன்று மாதங்களுக்கு முன்பு பண்ணை உரிமையாளர் பாலமுருகன் அடித்தே கொலை செய்து பண்ணையிலேயே புதைத்துவிட்டதாக கண்ணீர்மல்க புகார் ஒன்றைக் கொடுத்தார்.

இந்தக் கொலைக்கு பாலமுருகனின் குடும்பத்தினரும் பாலமுருகனின் நண்பர் வினோத்தும் உடந்தை என்றும் குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து திருத்தணி போலீஸார், வெண்ணிலாவை அழைத்துக் கொண்டு பண்ணைக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது சுரேஷை கொலை செய்து புதைத்த இடத்தையும் வெண்ணிலா போலீஸாரிடம் காண்பித்தார். சிறுவன் சுரேஷை புதைத்த இடத்தைச் சுற்றி சிமெண்ட் கற்களால் கல்லறை போன்று கட்டி வைக்கப்பட்டிருந்தது.

பாலமுருகன்

இதையடுத்து சுரேஷின் சடலத்தை வருவாய் துறையினர் முன்னிலையில் போலீஸார் ஜே.சி.பி மூலம் தோண்டியெடுத்தனர். பின்னர் அங்கேயே பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார், சிறுவன் சுரேஷை கொலை செய்து சடலத்தை பண்ணையிலேயே புதைத்த குற்றத்துக்காக பண்ணையை நடத்தி வரும் பாலமுருகன், அவரின் மனைவி புவனேஸ்வரி, பாலமுருகனின் நண்பன் வினோத் ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணைக்குப்பிறகு மூன்று பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி விவேகானந்த சுக்லா கூறுகையில், , ``கோழி பண்ணையில் வேலைப்பார்த்த வெண்ணிலாவுக்கு உதவியாக அவரின் மூத்த மகன் சுரேஷ் என்பவரும் இருந்திருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதத்தில் அவர் உயிரிழந்து விட்டதாக வெண்ணிலா எங்களுக்கு தகவல் கொடுத்தார். அதன்அடிப்படையிலேயே விசாரணை நடத்தி வருகிறோம்" என்றார்.

திருத்தணி போலீஸாரிடம் விசாரித்தபோது, ``வெண்ணிலாவின் மூத்த மகன் சுரேஷை சுத்தியலால் அடித்தே பாலமுருகன், அவரின் நண்பர் வினோத் ஆகியோர் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்தக் கொலைக்கு பாலமுருகனின் மனைவி புவனேஸ்வரிக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. அதனால் மூன்று பேரை கைது செய்திருக்கிறோம். சிறுவன் சுரேஷ் கொலை செய்யப்பட்ட தகவலை ஏன் இவ்வளவு நாள் அவரின் அம்மா வெண்ணிலா மறைத்தார் என்று விசாரித்து வருகிறோம்" என்றனர்.

வினோத்

பாலமுருகன், வினோத் ஆகியோரின் பின்னணி குறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸார் கூறுகையில், ``பாலமுருகனும் வினோத்தும் நண்பர்கள். பாலமுருகனின் பண்ணையில் கோழிகளை பராமரிக்கும் வேலைக்கு தன்னுடைய சித்தி வெண்ணிலாவை வினோத் அழைத்து வந்திருக்கிறார். பண்ணையில் வேலைக்கு வருவதற்கு முன்பு ரயிலில் வியாபராம் செய்து குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார் வெண்ணிலா. சரிவர ஆடுகளை மேய்க்காததால் பக்கத்து இடத்துக்கு ஆடுகள் சென்றது தொடர்பாக வெண்ணிலாவின் மகன் சுரேசிடம் விசாரித்திருக்கிறார் பாலமுருகன். அப்போதுதான் அங்கு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. அதனால் ஆத்திரமடைந்து சுரேஷை தாக்கியதில் அவர் உயிரிழந்திருக்கிறார். ஆனால் அந்தத் தகவலை முழுமையாக வெண்ணிலாவிடம் தெரிவிக்காமல் உன் மகன் இறந்துவிட்டான். அவன் இடத்தில் நான் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என தன்னுடைய சித்தியிடம் வினோத் கூறி சமரசப்படுத்தியிருக்கிறார்'' என்றனர்.

சிறுவனின் அம்மா வெண்ணிலா கூறுகையில், ``என்னுடைய மகனை பிப்ரவரி மாதமே கொலை செய்து பண்ணையிலேயே புதைத்து விட்டார்கள். இந்தத் தகவலை வெளியில் சொல்லக்கூடாது என என்னையும் என்னுடைய மற்ற இரண்டு குழந்தைகளையும் மிரட்டி வைத்திருந்தார்கள். அவர்களின் பிடியிலிருந்து தப்பி வந்து இப்போதுதான் உண்மையை என்னால் சொல்ல முடிந்தது" என்று கண்ணீர்மல்க கூறினார்.

வெண்ணிலாவிடம் உங்களையும் குழந்தைகளையும் அறைக்குள் அடைத்து சித்ரவதை செய்தார்களா என்று கேட்டபோது அவர் பதற்றத்துடன் காணப்பட்டார். மேலும் அதுதொடர்பாக அவரால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. அதனால், வெண்ணிலாவிடம் முழுமையாக விசாரித்தால் இன்னும் பல தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது என்கிறார்கள் வழக்கை விசாரிக்கும் காவல்துறையினர்.

தந்தையின் வீட்டைக் காலி செய்ய கோர்ட் உத்தரவு; கோபத்தில் 82 வயது தந்தையைக் குத்திக்கொன்ற மகன்

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் வசித்தவர் ஜாபர் பட்டேல்(82). ஒய்வுபெற்ற அரசு ஊழியரான ஜாபர் பட்டேலை அவரது மகன் அப்துல் ரஹ்மான் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி அடித்து உதைத்து திட்... மேலும் பார்க்க

`சல்மான் கானுடன் பழகுபவர்களுக்கு எச்சரிக்கை!' - ஜிம் உரிமையாளரை சுட்டுக்கொன்ற பிஷ்னோய் கேங்க்

டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பிஷ்னோய் கூட்டத்தினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பைக்கில் மோதிய சரக்கு வாகனம்; தாத்தா, பேரப்பிள்ளைகள் பலியான சோகம்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்துள்ள ஓச்சேரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 60). இவர், அதே பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்தார். இவரின் பேரப்பிள்ளைகள் அஜய் (9), குணஸ்ரீ... மேலும் பார்க்க

மும்பை: அழகிப்போட்டியில் பங்கேற்ற பெண்ணிடம் ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்சா; விமான நிலையத்தில் கைது

மும்பையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் ஹன்சா சன்னி. இவர் கடந்த ஆண்டு அழகிப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் வந்தார். அவர் பாங்காக் சென்றுவிட்டு மும்பைக்குத்... மேலும் பார்க்க

டி.எஸ்.பி உடையில் அலறவிட்ட பெண்; ஆண் நண்பரை `இம்ப்ரஸ்’ செய்ய தில்லாலங்கடி! - சிக்கியது எப்படி?

வேலூர் கோட்டை வளாகத்தில், நேற்று முன்தினம் மாலை வடக்கு காவல் நிலையப் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதில்சுவர் நடைபாதை பகுதியில் `டி.எஸ்.பி சீருடை’யில் பெண் ஒருவர் பிறந்த நாள் கேக்... மேலும் பார்க்க

சபரிமலை: தடிமனாகப் பூசிய தங்கத்தைத் திருடிவிட்டு மெலிதாகப் பூசி மோசடி; ஆய்வக சோதனையில் அதிர்ச்சி

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிற்பம் மற்றும் கருவறை திருக்கதவுகள் ஆகியவற்றில் தங்கம் பதித்ததில் நடந்த மோசடி குறித்த விசாரணை தொடர்ந்து வருகிறது. ​சபரிமலை கருவறை மற்றும் அதன் இருபுறமும் ... மேலும் பார்க்க