செய்திகள் :

கவின் ஆணவப் படுகொலை: கொலையாளி சுர்ஜித்தின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம்!

post image

நெல்லையில் ஐடி பொறியாளர் கவின் கடந்த வருடம் ஆணவக் கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கவின் காதலித்த பெண்ணின் அண்ணன் சுர்ஜித், தந்தை சரவணன், அம்மா கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

இதில் மற்ற மூவரும் கைதான நிலையில் கிருஷ்ணகுமாரி கடந்த 10 மாதங்களாக தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு தான் போலீஸாரல் அவரும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் சரவணன், நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மதுரை உயர் நீ்திமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.

சி.பி.சி.ஐ.டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தரப்பில், ’சரவணனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால் வழக்கின் விசாரணை பாதிக்கும்’ என ஆட்சேபனை தெரிவித்தார்.

சரவணன்

சரவணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த், “வழக்குக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் சாட்சியங்களை கலைக்க மாட்டோம்; நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட தயாராக இருக்கிறோம்” தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி வழங்கிய தீர்ப்பில், ‘மனுதாரர் இந்த வழக்கின் சாட்சியங்களை சந்திக்கவும் கலைப்பதற்கான முயற்சியோ செய்யக்கூடாது. மனுதாரர் மறு உத்தரவு வரும் வரை கோயம்புத்தூரில் தங்கி காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்து இடவேண்டும். ஒரு லட்சம் மதிப்பில் பிணை பத்திரம் வழங்க வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை வழங்கி மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

பிரிந்தவர்கள் இணைவார்களா? மம்தா, சரத் பவார் கட்சிகளை இணைக்கும் பேச்சு - அகண்ட காங்கிரஸ் சாத்தியமா?

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (SP) கட்சிகள் மீண்டும் தாய் கட்சியான காங்கிரஸில் இணையுமா? திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடி முற்றிவரும் நிலையில்... மேலும் பார்க்க

நிதி ஆயோக் கூட்டம்: "திமுக-வின் சாதனைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது சோபா மாடல்" - உதயநிதி சாடல்

நிதி ஆயோக் கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகள் மீது முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது சோபா மாடல் அரசு என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்... மேலும் பார்க்க

Vijay: "கர்நாடகம் சென்ற விஜய் காவிரி நீரைக் கொண்டு வருவாரா?" - தவெக அரசுக்கு திமுக கேள்வி

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுப்படிக்காக கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் இந்தாண்டு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதற்கு அரசியல் தலைவ... மேலும் பார்க்க

தொடர் மின்வெட்டு: ``விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது" - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

தமிழ்நாட்டில் தவெக அரசு அமைந்ததிலிருந்து கடும் விமர்சனத்துக்குள்ளான விஷயம் மின்வெட்டு. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டுப் பிரச்னை தீவிரமாகியிருக்கிறது. குறிப்பாக நட்சத்திர வேட்பாளர்களின் தொ... மேலும் பார்க்க

`மேட்டூர் அணையை திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை!' - சிறப்புத் தொகுப்பு அறிவித்த முதல்வர் விஜய்

காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் “குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் – 2026” செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு ... மேலும் பார்க்க