செய்திகள் :

தொடர் மின்வெட்டு: ``விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது" - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

post image

தமிழ்நாட்டில் தவெக அரசு அமைந்ததிலிருந்து கடும் விமர்சனத்துக்குள்ளான விஷயம் மின்வெட்டு. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டுப் பிரச்னை தீவிரமாகியிருக்கிறது.

குறிப்பாக நட்சத்திர வேட்பாளர்களின் தொகுதியிலும் மின்வெட்டு பிரச்னை இருப்பதாக எழும் குற்றச்சாட்டுகள் விவாதமாகியிருக்கிறது. இந்த நிலையில், விருத்தாச்சலம் தொகுதி எம்.எல்.ஏ-வும், தே.மு.தி.க கட்சித் தலைவருமான பிரேமலதா விஜயகாந்த் மின்வெட்டு தொடர்பாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில், ``கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்குப் போதிய நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு
மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு

இதன் விளைவாக பயிர்கள் வாடியதால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பையும் வேதனையையும் சந்தித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட கடன் தள்ளுபடி முழுமையாகச் செயல்படுத்தப்படாதது ஒரு புறம்; மின்வெட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவது மறுபுறம்.

"உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி" என்பதுபோல் விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது. எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

`மேட்டூர் அணையை திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை!' - சிறப்புத் தொகுப்பு அறிவித்த முதல்வர் விஜய்

காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் “குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் – 2026” செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு ... மேலும் பார்க்க

92 உலகக் கலைஞர்களுடன் சிம்போனி சாதனை! - லிடியன் நாதஸ்வரத்துக்கு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு!

இளமைப் பருவத்திலேயே உலக அரங்கில் முத்திரை பதித்து வரும் இளம் இசை மேதை லிடியன் நாதஸ்வரம், லண்டன் சிம்பனி ஆர்கெஸ்ட்ராவின் (London Symphony Orchestra) 92 உலகத்தரம் வாய்ந்த இசைக்கலைஞர்கள் மற்றும் அவர்களது... மேலும் பார்க்க

"நான் அரசியலில் நுழையத் தயாராக இருக்கிறேன்; எப்போது மற்றும் யாருடன்.!"- ராகவா லாரன்ஸ் அதிரடி

நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதளப்பக்கத்தில், ``நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அரசியலுக்கு வருவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை. அரசியலில் ஈடுபட வேண்டிய ... மேலும் பார்க்க

சர்ச்சை வீடியோ: ``அது மனிதர்களால் ஏற்பட்ட பிழை அல்ல; AI தொழில்நுட்பத்தால்..." - அமைச்சர் ராஜ் மோகன்

கோவையில் தமிழக அரசின் சார்பில் பிரமாண்ட அரசு பொருட்காட்சி தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பொருட்காட்சியின் தொடக்கவிழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ் மோகன் கலந்துகொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களை... மேலும் பார்க்க

அண்ணாமலையை நோக்கி நடிகர் ராகவா லாரன்ஸ்?

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ், தனது பொது வாழ்க்கை தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இயக்குநர் பாரதிராஜா மறைவைத் தொடர்ந்து அறிவிப்பை ஒத்திவைத்திருந்த அவர் தனது அடு... மேலும் பார்க்க