பிரிந்தவர்கள் இணைவார்களா? மம்தா, சரத் பவார் கட்சிகளை இணைக்கும் பேச்சு - அகண்ட கா...
மும்பை: அழகிப்போட்டியில் பங்கேற்ற பெண்ணிடம் ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்சா; விமான நிலையத்தில் கைது
மும்பையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் ஹன்சா சன்னி. இவர் கடந்த ஆண்டு அழகிப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் வந்தார். அவர் பாங்காக் சென்றுவிட்டு மும்பைக்குத் திரும்பினார்.
அதிகாலை 4 மணிக்கு மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்கியபோது அவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் தனது கையில் எந்தப் பொருளையும் வைத்திருக்கவில்லை. ஆனால் அவரது சாமான்களை ஆய்வு செய்தபோது, ஒரு டிராலி பேக்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 சீல் செய்யப்பட்ட பாக்கெட்டுகளை அதிகாரிகள் மீட்டனர்.
அந்தப் பாக்கெட்டுகளில் ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. கஞ்சா செடியின் பச்சை நிற பூக்கள் மற்றும் காய்க்கும் மேல் பகுதிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தடயவியல் ஆய்வில் அவை கஞ்சா என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பயணத்தின்போது தன்னுடன் நட்பாகப் பழகிய ஒரு நபர் தனது நம்பிக்கையைப் பெற்று, ஒரு பையை இந்தியாவுக்கு எடுத்துச் செல்லும்படி வற்புறுத்தி கொடுத்ததாக சுங்கத் அதிகாரிகளிடம் கூறினார். அவரைக் கைது செய்து அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
சன்னி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகர் திரிபாதி, பையில் என்ன இருந்தது என்பது குறித்து தனது மனுதாரருக்குத் தெரியாது என்று தெரிவித்தார். மேலும் ஒரு சந்தேகத்திற்கு இடமில்லாத பயணி ஒருவரை கடத்தல்காரர்கள் பயன்படுத்தி இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
அந்தப் பெண் சுற்றுலா, கலை மற்றும் மாடலிங் துறைகளில் தொழில் வாய்ப்புகளை ஆராய்வதற்காக பாங்காக் சென்றிருந்தார். பயணத்தின்போது அவருடன் நட்பாகப் பழகிய ஒருவர், இந்தியாவிற்கு ஒரு பையை எடுத்துச் செல்லும்படி வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். ஆனாலும் சன்னி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.


















