செய்திகள் :

சபரிமலை: தடிமனாகப் பூசிய தங்கத்தைத் திருடிவிட்டு மெலிதாகப் பூசி மோசடி; ஆய்வக சோதனையில் அதிர்ச்சி

post image

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிற்பம் மற்றும் கருவறை திருக்கதவுகள் ஆகியவற்றில் தங்கம் பதித்ததில் நடந்த மோசடி குறித்த விசாரணை தொடர்ந்து வருகிறது. ​

சபரிமலை கருவறை மற்றும் அதன் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளுக்கு தங்க முலாம் பூசுவதற்கான தங்கத்தை தொழிலதிபர் விஜய் மல்லையா 1998-ம் ஆண்டு காணிக்கையாக வழங்கியிருந்தார்.

துவாரபாலகர்கள் சிற்பத்தில் தங்கம் நிறம் மங்கியதாகக் கூறி, மீண்டும் தங்கம் பூசுவதற்காக உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு சென்னைக்கு எடுத்துச் சென்றார். அப்போது தங்கம் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து கடந்த ஆண்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது. அந்த வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றி, தேவசம்போர்டு முன்னாள் தலைவர்கள், கமிஷனர் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த பிப்ரவரி மாதம், இந்த வழக்கில் அதிநவீன அறிவியல் பரிசோதனை அவசியம் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் ​சந்தேகத்திற்குரிய சிற்பங்களில் இருந்து எடுக்கப்பட்ட 8 மாதிரிகள் ஜம்ஷத்பூர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன.

அங்கு அதிநவீன தொழில்நுட்பத்துடன் நடத்தப்பட்ட பரிசோதனையில் பல உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. விஜய் மல்லையா தடிமனாக தங்கம் பூசியிருந்த நிலையில், அயோடைடு செயல்முறை மூலம் ரசாயன ரீதியாக தங்கத்தைப் பிரித்துத் திருடியுள்ளனர்.

தங்கத்தை கொள்ளையடித்த பிறகு, திருட்டு வெளியே தெரியாமல் இருக்க, மிக மெல்லிய அளவில் நேர்த்தியான முறையில் மீண்டும் தங்கம் பூசி திருவிதாங்கூர் தேவசம் போர்டிடம் ஒப்படைத்துள்ளனர்.

சபரிமலை கருவறை முன் உள்ள துவார பாலகர்கள்
சபரிமலை

துவாரபாலகர்கள் சிற்பத்தில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது நிரூபணமாகி உள்ளது. அதே சமயம் பி.எஸ்.பிரசாந்த் தலைவராக இருந்த தேவசம் போர்டு கமிட்டியின் காலத்தில், பராமரிப்புப் பணிகளுக்காகச் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்ட தங்கம் பொதியப்பட்ட கதவுகளில் இருந்து தங்கம் திருடப்படவில்லை என்பதும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ​

இந்த அறிவியல்பூர்வமான அறிக்கை, சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. ஜம்ஷத்பூரில் உள்ள புகழ்பெற்ற தேசிய உலோகவியல் ஆய்வகம் நடத்திய சோதனையின் முடிவுகள், இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சபரிமலை

ஆய்வக முடிவுகளை அடிப்படையாகக்கொண்டு திருடப்பட்ட தங்கத்தின் துல்லியமான அளவு எவ்வளவு என்பதைக் கணக்கிடும் பணியில் புலனாய்வுக் குழுவினர் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

இந்த அளவு தெரிந்தவுடன் நீதிமன்றத்தில் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.பிரசாந்தின் காலத்தில் தங்கம் திருடப்படவில்லை என்று கூறப்பட்டாலும், முழுமையான உண்மைத்தன்மையை அறிய மீதமுள்ள அனைத்து தங்க கவசங்களையும் பரிசோதிக்கப் புலனாய்வுக் குழு முடிவு செய்துள்ளது.

இதற்காக, மேலும் சில மாதிரிகளைச் சேகரிக்க உயர் நீதிமன்றத்தின் அனுமதியை நாடப் போவதாகப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

டி.எஸ்.பி உடையில் அலறவிட்ட பெண்; ஆண் நண்பரை `இம்ப்ரஸ்’ செய்ய தில்லாலங்கடி! - சிக்கியது எப்படி?

வேலூர் கோட்டை வளாகத்தில், நேற்று முன்தினம் மாலை வடக்கு காவல் நிலையப் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மதில்சுவர் நடைபாதை பகுதியில் `டி.எஸ்.பி சீருடை’யில் பெண் ஒருவர் பிறந்த நாள் கேக்... மேலும் பார்க்க

"இன்ஸ்டா காதலை கைவிட மறுத்த தங்கை; கொலை செய்த அண்ணன்" – ஆணவக் கொலையா? - போலீஸாரின் விளக்கம் என்ன?

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகிலுள்ள தெற்குமயிலோடை அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி எஸ்தர் பாலின். இவர்களுக்கு சிவஞானம் என்ற மகனும், அபிசெல்வி என்ற மகளும் உள்ளனர். இதில், பள... மேலும் பார்க்க

இளம்பெண் கூட்டு பாலியல் கொடுமை வழக்கு; `எம்.எல்.ஏ சரவணனை ஏன் கைது செய்யவில்லை?' - வலுக்கும் கண்டனம்!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர், பாலமுருகன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ளார். அவரது நண்பர் ராமநா... மேலும் பார்க்க

`என் மகள் இறந்த மாதிரியே, நானும் சாகப் போகிறேன்!’ - ஆட்டோ ஓட்டுநரின் விபரீத முடிவு; பகீர் பின்னணி!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகேயுள்ள சக்கரகுப்பம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரஜினி (வயது 41). இவரின் மனைவி கோமதி. இவர்களின் 15 வயது மகள் தர்ஷினி, கடந்த ஏப்ரல் மாதம் ... மேலும் பார்க்க

சென்னை: "ஐயா, என் மனைவிய கொன்னுட்டேன்" - 54 வயது பெண்மணியைக் கொடூரமாகக் கொன்ற 68 வயது முதியவர்

சென்னை அண்ணாநகர் கிழக்கு சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் (68). இவரின் மனைவி சாந்தி (54). கடந்த 2010-ம் ஆண்டு ஏகாம்பரம் தற்கொலை செய்து கொண்டார். அதனால் சாந்தி, 2016-ம் ஆண்டு முதல் அதே பகுதியை... மேலும் பார்க்க

விழுப்புரம்: சிறுமியை மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை; கதறிய குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் பெற்றோரை இழந்த 14 வயது சிறுமி ஒருவர், தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்ற நபர், அந்தச் சிறுமி... மேலும் பார்க்க