செய்திகள் :

நிதி ஆயோக் கூட்டம்: "திமுக-வின் சாதனைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது சோபா மாடல்" - உதயநிதி சாடல்

post image

நிதி ஆயோக் கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகள் மீது முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது சோபா மாடல் அரசு என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யைக் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "தேர்தல் பிரசாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.

முதல்வர் விஜய் - பிரதமர் மோடி
முதல்வர் விஜய் - பிரதமர் மோடி

இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.

இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.

தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும்தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.

டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக் கட்சியிடமோ மேகதாது பிரச்னை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்

மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!

பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

`ஊழல் செய்பவர்கள் 6 மாதத்திற்குள் வழிக்கு கொண்டுவரப்படுவார்கள்' - நிர்வாகிகளிடம் ஜான் ஆரோக்கியசாமி

தவெகவின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்மட்ட அரசு துற... மேலும் பார்க்க

பிரிந்தவர்கள் இணைவார்களா? மம்தா, சரத் பவார் கட்சிகளை இணைக்கும் பேச்சு - அகண்ட காங்கிரஸ் சாத்தியமா?

மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (SP) கட்சிகள் மீண்டும் தாய் கட்சியான காங்கிரஸில் இணையுமா? திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குள் நெருக்கடி முற்றிவரும் நிலையில்... மேலும் பார்க்க

Vijay: "கர்நாடகம் சென்ற விஜய் காவிரி நீரைக் கொண்டு வருவாரா?" - தவெக அரசுக்கு திமுக கேள்வி

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுப்படிக்காக கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் இந்தாண்டு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதற்கு அரசியல் தலைவ... மேலும் பார்க்க

கவின் ஆணவப் படுகொலை: கொலையாளி சுர்ஜித்தின் தந்தைக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம்!

நெல்லையில் ஐடி பொறியாளர் கவின் கடந்த வருடம் ஆணவக் கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கவின் காதலித்த பெண்ணின் அண்ணன் சுர்ஜித், தந்தை சரவணன், அம்மா கிருஷ்ணகுமாரி ... மேலும் பார்க்க

தொடர் மின்வெட்டு: ``விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது" - பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

தமிழ்நாட்டில் தவெக அரசு அமைந்ததிலிருந்து கடும் விமர்சனத்துக்குள்ளான விஷயம் மின்வெட்டு. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டுப் பிரச்னை தீவிரமாகியிருக்கிறது. குறிப்பாக நட்சத்திர வேட்பாளர்களின் தொ... மேலும் பார்க்க

`மேட்டூர் அணையை திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை!' - சிறப்புத் தொகுப்பு அறிவித்த முதல்வர் விஜய்

காவிரி டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் “குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் – 2026” செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு ... மேலும் பார்க்க