செய்திகள் :

'அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வடிவம்' - அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை குறித்து பாகிஸ்தான் பிரதமர்!

post image

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் திருப்புமுனை ஏற்பட்டிருக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையே இறுதி செய்யப்பட்ட அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் கத்தார் நாட்டுடன் இணைந்து பாகிஸ்தானும் செயல்பட்டு வருகிறது.

Pakistan PM - Shahbaz Sharif
Pakistan PM - Shahbaz Sharif

இது குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், "பாகிஸ்தானின் தீவிரமான முயற்சிகளுக்கு மத்தியில், இந்த அமைதி ஒப்பந்தத்தைக் கெடுக்க நினைப்பவர்களால் பரப்பப்படும் தொடர்ச்சியான வதந்திகள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்கள் குறித்து நாங்கள் முழுமையாக அறிவோம்.

அந்த தேவையற்றதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்தின் இறுதி வடிவம் எட்டப்பட்டுவிட்டதை எங்களால் உறுதிப்படுத்த முடியும்.

அடுத்தகட்ட நகர்வுகளை இறுதி செய்யப் பாகிஸ்தான் இப்போது இரு தரப்புடனும் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. அமைதி என்பது இதற்கு முன்பு எப்போதும் இந்த அளவுக்கு மிக அருகில் இருந்ததில்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "ஈரான் ஊடகங்கள் வெளியிடும் தகவல்களுக்கும், எழுத்துப்பூர்வமாக இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட நிபந்தனைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை." என்று பதிவிட்டிருக்கிறார்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இதனைத் தொடர்ந்து பேசிய ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, "அமைதி புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி நிலைக்கு மிக அருகில் வந்துவிட்டது.

அது இறுதி செய்யப்படும் வரை ஊடகங்கள் யூகங்களின் அடிப்படையில் செய்திகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும். பொறுப்பான முறையில் அனைத்து விவரங்களும் விரைவில் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்," என்று தெரிவித்துள்ளார்.

`சாதி மறுப்புத் திருமணங்களும், தொடரும் ஆணவக் கொலைகளும்!' - கர்நாடகாவைப் பின்பற்றுமா தமிழ்நாடு?

சாதியும் - திருமணமும்அண்ணல் அம்பேத்கர், 'சாதி மறுப்புச் சிந்தனை' (Annihilation of Caste) என்ற தனது நூலில், ``சொந்தச் சாதிக்குள்ளேயே திருமணம் முடித்துக்கொள்ளும் அமைப்புதான், இன்றளவும் 'சாதி' தப்பிப் பி... மேலும் பார்க்க

`மேட்டூர் அணை வரலாற்றில் ஏற்பட்டுள்ள 62-வது ஆண்டு காலதாமதம் இது!' - அதிகாரிகள் சொல்வதென்ன?

காவிரி ஆற்றுப்படுகை பாசனத்தின் அடிப்படை ஆதாரமாகப் பங்காற்றி வருகிறது மேட்டூர் அணை. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீரால் சுமார் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு மேல் குறுவை, சம்பா, தாளடி எ... மேலும் பார்க்க

சிங்கப்பெண் திட்ட வீடியோ சர்ச்சை: அமைச்சர் ராஜ் மோகன் சொல்லும் விளக்கம் என்ன?| Live Updates

லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்ற அமைச்சர் வன்னி அரசு!வன்னி அரசுசென்னை விமான நிலையத்தில் அமைச்சர் வன்னி அரசு. சிம்பொனி இசையமைத்து சாதனை நிகழ்த்திய இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரத்தை வரவேற்றார். அப்போது,``தமிழ... மேலும் பார்க்க

``கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும்..." - ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக் கோரி, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபனைச் சந்தித்து கோரிக்கை ம... மேலும் பார்க்க

ஈரோடு: பெண்கள், மாணவிகளைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! - Album

ஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில் சிங்கப்பெண் அதிரடி படைஈரோட்டில... மேலும் பார்க்க

மீண்டும் உயரும் அத்தியாவசியப் பொருள்களின் விலை; லாரி வாடகை உயர்வும் சங்கிலித் தொடரான சிக்கல்களும்!

World Inequality Lab அறிக்கையின் படி இந்தியாவில் 10 சதவிகிதப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே... இருக்கும் நிலையில், நடுத்தர வர்கத்தினரும், ஏழைகளும் தங்களின் அன்றாட வாழ்... மேலும் பார்க்க