செய்திகள் :

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

post image

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

அதேநேரம், இந்த விவகாரம் மக்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

துணைத் தலைவர் சாவித்திரி
துணைத் தலைவர் சாவித்திரி

கிருஷ்ணகிரி நகர்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் துணைத் தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்ட அரங்கில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் படம் நகராட்சி நிர்வாகத்தினரால் ஏற்கனவே அங்கு வைக்கப்பட்டிருந்தது.

அப்போது கூட்டத்திற்கு வந்த திமுக உறுப்பினர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் மு.கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் படங்களையும் மன்றத்தில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

நகர்மன்றத் துணைத் தலைவர் சாவித்திரி, படங்களை வைக்க அனுமதி அளித்தார்.

திமுகவினர் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தை வைத்ததைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் உடனடியாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படத்தை எடுத்து வந்து வாழ்க கோஷமிட்டபடி சுவரில் மாட்டினர்.

இரு கட்சியினரும் போட்டிப் போட்டுக் கொண்டு தலைவர்களின் படங்களை மாட்டியதால் நகர்மன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பும், பதற்றமும் நிலவின.

அதற்குப் பின்புதான் வார்டுகளில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க ஆரம்பித்தனர்.

நகராட்சி அலுவலகம்
நகராட்சி அலுவலகம்

இந்தச் சம்பவத்தைப் பார்த்து, "நகராட்சியின் ஒவ்வொரு வார்டிலும் குப்பைகள் குவிந்து நாற்றமடிக்கிறது. கழிவு நீர் வீதியில் ஓடி நோய் பரப்புகிறது. தெரு விளக்குகள் எரியாததால் பல தெருக்களில் இரவில் நடமாடவே அச்சமாக உள்ளது.

சாலைகளில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி அலுவலர்கள் அமைதியாக உள்ளனர்.

கேள்வி எழுப்பி தீர்வு காண வேண்டிய நகர்மன்ற உறுப்பினர்கள் தங்கள் தலைவர்களின் படஙகளை வைப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்" என்று கிருஷ்ணகிரி மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க

"திமுக நம்முடன் இணைந்து செயல்படும்; பினராயி விஜயனை என்னால் கட்டிப்பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி

கடந்த திங்கட்கிழமை (ஜூன் 8), டெல்லியில் இந்தியாக் கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாக் கூட்டணி கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலை... மேலும் பார்க்க

கொல்லூரில் முதல்வர் விஜய்: "எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை" - கோயில் கமிட்டி தலைவர்

கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம் ஆகும். இக்கோயிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா பல முறை சென்று இருக்கிறார். இக்கோயிலுக்கு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வருக... மேலும் பார்க்க

ஓபன் 'பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்; செய்தி வெளியிட்ட விகடன் - எச்சரிக்கை விடுத்து ஆக்ஷன் எடுத்த போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் கடைவீதியிலேயே பேருந்துநிறுத்திற்கு அருகிலேயே மதுபானக்கடை கடை ஒன்று செயல்படுதையும், அதனால் மக்கள் பேருந்திற்கு மிகுந்த அச்சத்துடன் அமர்வதற்கு இடமின்றி நிறுத்ததில... மேலும் பார்க்க