செய்திகள் :

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

post image

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன.

தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ''இந்த வார இறுதிக்குள் போர் நிறுத்தம் ஏற்படலாம். பேச்சுவார்த்தையின் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டோம்'' என்று தெரிவித்திருந்தார்.

நேற்று, ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் பக்கத்தில்...

ஷெபாஸ் ஷெரீப் - அப்பாஸ் அராக்சி
ஷெபாஸ் ஷெரீப் - அப்பாஸ் அராக்சி

"இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் (Islamabad MoU) இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.

இது முழுமையாக இறுதி செய்யப்படும் வரை, இதன் உள்ளடக்கங்கள் குறித்து ஊடகங்கள் எந்தவொரு ஊகங்களையும், வதந்திகளையும் வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

எங்களது பொறுப்பான மற்றும் வெளிப்படையான அணுகுமுறையின்படி, இந்த ஒப்பந்தத்தின் அனைத்து விவரங்களும் உரிய நேரத்தில் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்" என்று பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவை தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில் ட்ரம்பும் ஷேர் செய்திருந்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது எக்ஸ் பக்கத்தில் நல்ல செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்...

"நாம் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக நெருக்கமாக அமைதி ஒப்பந்தத்தை எட்டியுள்ளோம்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் இது முழுமையாக இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், ஒப்பந்தம் முடிந்த உடனேயே மின்னணு முறையில் அதில் கையெழுத்திட பாகிஸ்தான் தயாராகி வருகிறது.

இதைத் தொடர்ந்து அடுத்த வாரம் தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.

ஷெபாஸ் ஷெரீப் பதிவு
ஷெபாஸ் ஷெரீப் பதிவு

இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது தொடர்ந்து தங்களது பங்களிப்பை வழங்கி வந்த அமெரிக்காவிற்கும், ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், தங்களது ஆதரவை வழங்கிய இந்தப் பிராந்தியத்திலுள்ள எங்களது சகோதர நாடுகளுக்கும் எங்களது நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம், ஒரு நிலையான அமைதிக்கான வலுவான அடித்தளமாக அமையும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்".

ஆக, விரைவில் போர் நிறுத்தம் என்பது பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க

"திமுக நம்முடன் இணைந்து செயல்படும்; பினராயி விஜயனை என்னால் கட்டிப்பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி

கடந்த திங்கட்கிழமை (ஜூன் 8), டெல்லியில் இந்தியாக் கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாக் கூட்டணி கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலை... மேலும் பார்க்க

கொல்லூரில் முதல்வர் விஜய்: "எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை" - கோயில் கமிட்டி தலைவர்

கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம் ஆகும். இக்கோயிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா பல முறை சென்று இருக்கிறார். இக்கோயிலுக்கு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வருக... மேலும் பார்க்க

ஓபன் 'பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்; செய்தி வெளியிட்ட விகடன் - எச்சரிக்கை விடுத்து ஆக்ஷன் எடுத்த போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் கடைவீதியிலேயே பேருந்துநிறுத்திற்கு அருகிலேயே மதுபானக்கடை கடை ஒன்று செயல்படுதையும், அதனால் மக்கள் பேருந்திற்கு மிகுந்த அச்சத்துடன் அமர்வதற்கு இடமின்றி நிறுத்ததில... மேலும் பார்க்க