செய்திகள் :

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா...' - தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

post image

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர்.

இதை முதன் முதலில் தொடங்கி வைத்தவர்கள் அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏக்களான இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர்.

அதன்பின், தொடர்ந்து தவெகவில் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் இணைந்து வருகின்றனர்

இன்று பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் சிலர் தவெகவில் இணைந்தனர். அதில் முக்கியமான பிரமுகர்கள்...

விஜயதாரணி:

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு விளவங்கோடு தொகுதியில் நின்று மூன்று முறை எம்.எல்.ஏ-வாக வெற்றிப் பெற்றவர் இவர். ஆனால், 2024-ம் ஆண்டு பாஜகவிற்கு மாறினார்.

பச்சைமால்
பச்சைமால்

கையோடு தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார் விஜயதாரணி.

கடந்த தேர்தலில், விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டார் இவர். ஆனால், அந்தத் தொகுதியைத் தட்டி சென்றது காங்கிரஸ்.

தேர்தல் சமயத்தில் தன்னுடன் ஒத்துழைக்கவில்லை என்று பாஜக மீது அதிருப்தியில் இருந்த விஜயதாரணி, இன்று தவெகவில் இணைகிறார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால்,

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், வடசென்னை தெற்கு மாவட்டக் கழக செயலாளர் நா. பாலகங்கா,

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.வனரோஜா,

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் ஏ.இளவரசன்,

திருநெல்வேலி முன்னாள் மேயர் E.புவனேஸ்வரி,

இப்படி அதிமுக, திமுக, பாஜக சார்ந்த பிரமுகர்களும், வழக்கறிஞர்கள், தொழிற்சங்கத்தினரும் இன்று தவெகவில் இணைந்துள்ளனர்.

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" - பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட நாள்களுக்குப் பிறகு, இரண்டு நாள்களுக்கு முன், ஈரானும், அமெரிக்காவும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. தாக்குதலுக்குப் பிறகு, அ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக - அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக திமுக-அதிமுக உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நகர்மன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதேநேரம், இந்த... மேலும் பார்க்க

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க

"திமுக நம்முடன் இணைந்து செயல்படும்; பினராயி விஜயனை என்னால் கட்டிப்பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி

கடந்த திங்கட்கிழமை (ஜூன் 8), டெல்லியில் இந்தியாக் கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாக் கூட்டணி கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலை... மேலும் பார்க்க

கொல்லூரில் முதல்வர் விஜய்: "எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை" - கோயில் கமிட்டி தலைவர்

கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம் ஆகும். இக்கோயிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா பல முறை சென்று இருக்கிறார். இக்கோயிலுக்கு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வருக... மேலும் பார்க்க

ஓபன் 'பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்; செய்தி வெளியிட்ட விகடன் - எச்சரிக்கை விடுத்து ஆக்ஷன் எடுத்த போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் கடைவீதியிலேயே பேருந்துநிறுத்திற்கு அருகிலேயே மதுபானக்கடை கடை ஒன்று செயல்படுதையும், அதனால் மக்கள் பேருந்திற்கு மிகுந்த அச்சத்துடன் அமர்வதற்கு இடமின்றி நிறுத்ததில... மேலும் பார்க்க