செய்திகள் :

கன்னியாகுமரி: விசாரணைக்கு சென்ற போலீஸை நாயை ஏவி கடிக்கவைத்த தம்பதி - மோசடி புகாரில் சிக்கிய பின்னணி!

post image

கன்னியாகுமரி மாவட்டம், சிராயன்விளையைச் சேர்ந்தவர் கிரேட் பிரின்ஸ்ராஜ் (31). ஐவுளிக்கடை உரிமையாளரான கிரேட் பிரின்ஸ்ராஜ் காதல் திருமணம் செய்துள்ளார். இவரது மனைவியின் பூர்வீக சொத்து சம்பந்தமாக பிரச்னை இருந்துவருகிறது. அந்த பிரச்னையை முடித்துவைத்து, சொத்தை பெற்றுத் தருவதாக, கிரேட் பிரின்ஸ்ராஜிடம் அவரது உறவினரான கிருஷ்ணவேணி என்பவர் கூறியுள்ளார். மேலும், தனது கணவர் நாகசுமன் வழக்கறிஞர் என பொய்யாகக் கூறிய கிருஷ்ணவேணி, சொத்தை மீட்பதற்காக கிரேட் பிரின்ஸ்ராஜிடம் ஆறு லட்சம் ரூபாய்  பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கிரேட் பிரின்ஸ்ராஜின் காரையும் கிருஷ்ணவேணி ஏமாற்றி வாங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், சொத்து பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுத்தாமல் இருந்துள்ளார் கிருஷ்ணவேணி. ஒருகட்டத்தில் சந்தேகம் அடைந்த கிரேட் பிரின்ஸ்ராஜ், அவர்கள் குறித்து விசாரித்துள்ளார். அதில், கிருஷ்ணவேணியின் கணவர் நாகசுமன் வழக்கறிஞர் இல்லை என்பதும் தன்னிடம் பொய் கூறி மோசடியில் ஈடுபட்டு இருப்பதையும் அறிந்துள்ளார். எனவே, பணத்தையும், காரையும் திருப்பித் தருமாறு கிரேட் பிரின்ஸ்ராஜ் கேட்டுள்ளார். கிருஷ்ணவேணி பணம், கார் ஆகியவற்றை திருப்பிக் கொடுக்கவில்லை. கிரேட் பிரின்ஸ்ராஜ் இது குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த நிலையில், கிருஷ்ணவேணியும் அவரது கணவர் நாகசுமனும் தலைமறைவாகிவிட்டனர்.

கைதுசெய்யப்பட்ட நாகசுமன்

இதற்கிடையே தோவாளை தேவர் நகர்ப் பகுதியில் உள்ள வீட்டில் கிருஷ்ணவேணியும், நாகசுமனும் தலைமறைவாக வசித்துவருவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதை அடுத்து ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் தலைமையில் போலீஸார் அங்கு சென்றனர். அப்போது வீட்டை உட்பக்கமாக பூட்டிவிட்டு இருந்த அவர்கள், வெளியே வர மறுத்துள்ளனர். வீட்டில் இருந்தபடியே கிருஷ்ணவேணியும், நாகசுமனும் போலீஸாரிடம் கடும் வாக்குவாதம் செய்துள்ளனர். மேலும், வீட்டில் இருந்த நாயை ஏவி விட்டு உதவி ஆய்வாளர் அனுஜனை கடிக்க வைத்துள்ளனர். அனுஜனின் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் நாய் கடித்துள்ளது.

நாய் கடித்ததால் காயம் அடைந்த உதவி ஆய்வாளர்

நாய்க்கடியால் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் அனுஜன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதே சமயம், வீட்டில் பதுங்கி இருந்த நாகசுமன்- கிருஷ்ணவேணி தம்பதியரை ஆரல்வாய்மொழி காவல் நிலைய போலீஸார் கைதுசெய்தனர். ஏற்கெனவே அவர்கள்மீது மோசடி வழக்கு பதிவுசெய்யப்பட்ட நிலையில், உதவி ஆய்வாளரை நாயை ஏவி விட்டு கடிக்க வைத்ததாக மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இப்போது இரண்டு வழக்குகளின் கீழ் தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 3 வயது சிறுமி உயிரிழப்பு; கொதித்தெழுந்த கிராம மக்கள்

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் வளாகத்தை ஒட்டியுள்ள சிறுபுழல்பேட்டை கிராமத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரின் மூன்று வ... மேலும் பார்க்க

ஈரோடு: மதுபோதையில் லாரியால் மோதிச் சென்ற ஓட்டுநர் - துரத்திச் சென்று பிடித்த துணிச்சல் பெண்!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒருவர், நேற்று மாலை ஸ்கூட்டியில் சென்றுள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா சந்திப்பு அருகில் சென்றுக் கொண்டிருக்கையில், பின்னால் வந்த லாரி ஒன்று பெண்ணின் ஸ்... மேலும் பார்க்க

திருவள்ளூரில் 3 வயது பெண் குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமை - பீகாரை சேர்ந்த ஒருவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ளது சிப்காட் பகுதி ஒன்று. அங்கு நேற்று மாலை ஒரு வட மாநிலத் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை காணாமல் சென்றுள்ளது. அந்தக் குழந்தையை சிப்காட் பகுதி முழுவதும் தே... மேலும் பார்க்க

சேலம்: பென்டிரைவ் முழுக்க பெண்களின் நிர்வாண வீடியோக்கள்; தவெக நிர்வாகி குறித்து அதிர்ச்சிப் பின்னணி

சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த த‌.வெ.க நிர்வாகி மணிகண்டன் என்பவர் 50-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ஏமாற்றிப் பழகி ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த அதிர்ச்சி சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங... மேலும் பார்க்க

மதுரையில் சிங்கப்பெண் சிறப்புப் படையின் முதல் வழக்கு; மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

மதுரை மாநகர் தெற்குவாசல் பகுதியில் நேற்று பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்குச் செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ... மேலும் பார்க்க

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க