செய்திகள் :

`ட்ரம்ப் பிறந்த நாளில் கூடாது' - அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை அறிவிக்க நள்ளிரவு வரை இழுத்தடித்த ஈரான்

post image

அமெரிக்கா, ஈரான் இடையேயான போர்நிறுத்த பேச்சுவார்த்தை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து கொண்டிருந்தது. எதாவது ஒரு பிரச்னையில் பேச்சுவார்த்தை தடைபட்டுக்கொண்டே இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென ஈரான் அமெரிக்க ஹெலிகாப்டரை சுட்டுவிழ்த்தியது. இதனால் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

அப்படி இருந்தும் இரு நாடுகளிடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கி தொடர்ந்து நடந்து வந்தது. கத்தார் மற்றும் பாகிஸ்தான் இதற்கான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் ஜெனிவாவில் கையெழுத்தாக இருக்கிறது. இந்த ஒப்பந்தம் குறித்து நேற்று அறிவிக்கப்பட இருந்தது.

ஆனால் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் ஜூன் 14 அன்று ஈரானில் அந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக நிறைவுபெறுவதை விரும்பவில்லை.

ஏனெனில், அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் 80-வது பிறந்தநாள் ஆகும். எனவே 14ம் தேதி கடந்த பிறகு, அதாவது நள்ளிரவு கடந்த பின்னரே அறிவிப்பு வெளியாக வேண்டும் என்று தெஹ்ரான் வலியுறுத்தியது. எனவே ஈரானில் அந்த ஒப்பந்தம் ஜூன் 15-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதே சமயம், தெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையே சுமார் 7.5 மணி நேர கால வித்தியாசம் இருந்ததால், இருநாடுகள் இடையேயான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட போது அமெரிக்காவில் அப்போது ஜூன் 14-ஆம் தேதியாகவே இருந்தது. இதன் மூலம் இரு தரப்பினரும் தாங்கள் விரும்பிய தேதியைப் பெற்றுக்கொண்டனர்.

இதனால், அமெரிக்காவில் இந்த ஒப்பந்தத்தைத் தனது பிறந்தநாள் சாதனையாக டிரம்ப் முன்னிறுத்த முடிந்த அதே வேளையில், ஈரானால் தனது நாட்டில் அவரது பிறந்தநாளன்று அதில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடுவதைத் தவிர்க்க முடிந்தது.

ஜூன் 14 அன்று அதாவது தனது பிறந்தநாளன்று ஈரானுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று டிரம்ப் பல நாட்களாகவே பகிரங்கமாகக் கூறிவந்தார். பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தம் வகித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும், அன்றைய தினமே மின்னணு முறையில் ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், ஈரான் அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கையான போக்கையே வெளிப்படுத்தினர். ஒப்பந்தம் "நாளை(ஞாயிறு)" கையெழுத்தாகும் என்று தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறிய ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், தீர்க்கப்படாத சிக்கல்களையும் சுட்டிக்காட்டினார்.

இது குறித்து அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில்,''ஈரானில் நள்ளிரவுக்கு முன்னதாகவே இந்த ஒப்பந்தம் குறித்த செய்திகள் வெளியிடப்படுவதை டெஹ்ரான் விரும்பவில்லை. டெஹ்ரானில் தேதி மாறிய சில நிமிடங்களிலேயே இறுதி அறிவிப்பு வெளியானது. இதனால், ஈரானில் திங்கட்கிழமையன்று அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்த இந்த ஒப்பந்தம், வாஷிங்டனைப் பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாதனையாகவே அமைந்த ஒரு விசித்திரமான சூழல் உருவானது.

நெதன்யாகு

ஒப்பந்தத்தை தாமதப்படுத்திய நெதன்யாகு

இந்த ஒப்பந்தம் குறித்து டொனால்டு ட்ரம்ப் அளித்த பேட்டியில்,''லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலால் ஈரான் உடனான அமைதி ஒப்பந்தம் கிட்டத்தட்ட சீர்குலைந்துபோகும் நிலைக்குச் சென்றது. இத்தாக்குதல் வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை தாமதப்படுத்தியது. பெஞ்சமின் நெதன்யாகு மிகவும் கடினமான நபர். ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவதைத் தடுத்து அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்காக இஸ்ரேல் அமெரிக்காவிற்கு மிகவும் நன்றியுள்ளதாக இருக்க வேண்டும்" என்றும் கூறினார்.

அதேசமயம் ஈரான் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் வளர்ச்சி மற்றும் பிராந்திய பாதுகாப்புச் சூழல் குறித்த தனது கவலைகளைத் அமெரிக்க அதிபரிடம் தெரிவிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முயன்று வருகிறார். இதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்பை அவசரமாக சந்தித்து பேச நேரம் ஒதுக்கும்படி நெதன்யாகு கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக லெபனான் விவகாரம் தொடர்பாக பேச இருக்கிறார் என்கிறார்கள்.

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் வசூல்! - 20 நாட்களில் 200 பணியாளர்கள் சஸ்பெண்ட்

டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 கூடுதலாக வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.மதுபான பாட்டில்களுக்க... மேலும் பார்க்க

மிதுன் விவகாரம்: “எங்கே பேசப்பட்டிருந்தாலும் தவறுதான்” - அதிமுக ராஜ் சத்யன்

`அதிமுக இளைஞரணி அல்லது தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனை கொண்டு வர வேண்டும்' என்ற கோரிக்கை கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெ... மேலும் பார்க்க

மம்தா கட்சி அதிருப்தி எம்.பி.க்கள் `தேசியவாத மக்கள் கட்சி' எனும் கட்சியில் இணைய முடிவு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவராக 60 எம்.எ... மேலும் பார்க்க

'வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதல்வர் இன்று.!' - உதயநிதி காட்டம்

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் குரல் கொடுத்து வரு... மேலும் பார்க்க

ஈரான் அமைதி ஒப்பந்தம் முடிவாகிறதே... ஹார்முஸ் நீர்ச்சந்தி எப்போது திறக்கப்படும்? சுங்க வரி உள்ளதா?

ஈரானில் போர் தொடங்கியது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், உலக நாடுகளை நேரடியாகப் பாதித்த ஒன்று - ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல். இதனால், எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் கச்ச... மேலும் பார்க்க

ஓமனில் உயிரிழந்த தமிழக மாலுமி நிஷாந்த் - உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை தீவிரம்

ஓமன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் உடல்நல குறைவால் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மாலுமி நிஷாந்தின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு... மேலும் பார்க்க