செய்திகள் :

மம்தா கட்சி அதிருப்தி எம்.பி.க்கள் `தேசியவாத மக்கள் கட்சி' எனும் கட்சியில் இணைய முடிவு!

post image

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவராக 60 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த ரிதப்ரதா அறிவிக்கப்பட்டுள்ளார். இப்போது மக்களவை எம்.பி.க்கள் 20 பேர் திரிணாமுல் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளனர். அதோடு திரிபுராவில் இருந்து பெயரளவுக்கு செயல்படும் இந்திய தேசியவாத மக்கள் கட்சியுடன் (என்சிபிஐ) இணைவதாக 20 திரிணாமுல் எம்பிக்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தெரிவித்துள்ளனர்.

அதோடு தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மக்களவையில் தனி இருக்கைகளை ஒதுக்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மம்தா பானர்ஜி

இதன் மூலம் மக்களவையில் என்சிபிஐ நான்காவது பெரிய கட்சியாக மாறி இருக்கிறது. ஹவுராவில் பதிவுசெய்யப்பட்ட என்சிபிஐ, இப்போது பாஜக (240), மற்றும் தெலுங்குதேசம்ம்(16) மற்றும் ஐக்கிய ஜனதா தளம் (12) ஆகியவற்றைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக மாறி இருக்கிறது.

எம்.பி.க்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தபோதிலும் அதிருப்தி கோஷ்டியினர் அடுத்த மாதம் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன், சட்டத் தடைகளைத் தவிர்ப்பதற்காக திரிணாமுல் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு உரிமை கோருவதற்குப் பதிலாக, மற்றொரு கட்சியுடன் இணைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்' என்ற பெயரையும் அதன் சின்னத்தையும் உரிமை கொண்டாடும் திட்டத்தை கைவிடவில்லை என்று அதிருப்தி கோஷ்டி தெரிவித்துள்ளது.

இது குறித்து மம்தா பானர்ஜிக்கு ஒரு காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த சுதீப் பந்தோபாத்யாய் கூறுகையில்,"மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் கட்சியில் இருந்து வெளியேறும் போது, ​​முதல் நாளே அந்தக் கட்சியின் பெயரைக் கோர முடியாது.

திரிணாமுல் கட்சியில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை எங்களுக்கு இருப்பதால், ஜூலையில், எங்களுக்கு திரிணாமுல் (பெயர்) மற்றும் சின்னத்தை வழங்க கோரிக்கை வைப்போம். பின்னர் நீதிமன்றம் முடிவு செய்யும்," கூறினார். அதிருப்தி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகரை சந்தித்து பேசுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கீர்த்தி ஆசாத் மற்றும் சகாரிகா கோஷ் ஆகியோர் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து கடிதம் ஒன்றை கொடுத்தனர்.

அதில் அதிருப்தி அணியின் தனி அணி கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் அதன் சொந்த சட்டதிட்டங்களின் படி செயல்படவில்லை என்று அதிருப்தி கோஷ்டியினர் தெரிவித்துள்ளனர். கட்சியின் விதிகளை மீறி பல முடிவுகளை மம்தா பானர்ஜியும் அபிஷேக் பானர்ஜியும் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறார்கள் என்று அவர்கள் குற்றம் சாட்டி இருக்கின்றனர்.

அதிருப்தி எம்.பி அருப் சக்ரவர்த்தி இது குறித்து கூறுகையில்,''முதல்முறை எம்.பியான சயோனி கோஷ் எங்கள் தலைவர். வங்காள முதல்வர் தலைமையில், எங்கள் இரட்டை எஞ்சின் அரசு தேசத்தின் நலனுக்காக உழைக்க விரும்புகிறது.... பாஜக எங்கள் உதவியைக் கேட்டால், நாங்கள் அவர்களுக்கு உதவுவோம். அவர்களின் உதவி தேவைப்பட்டால், நாங்கள் அதைக் கேட்போம்."என்று தெரிவித்தார்.

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், எல்ஜேபி ஆகிய கட்சிகளின் முன்மாதிரிகளை பின்பற்றி திரிணாமுல் கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கட்சியில் இணைந்த பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோருவது எந்த அளவில் சாத்தியமாக அமையும் என்று தெரியவில்லை. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் தனியாக வேறு எந்த கட்சியிலும் சேராமல் நேரடியாக கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு உரிமை கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் வசூல்! - 20 நாட்களில் 200 பணியாளர்கள் சஸ்பெண்ட்

டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 கூடுதலாக வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.மதுபான பாட்டில்களுக்க... மேலும் பார்க்க

மிதுன் விவகாரம்: “எங்கே பேசப்பட்டிருந்தாலும் தவறுதான்” - அதிமுக ராஜ் சத்யன்

`அதிமுக இளைஞரணி அல்லது தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளராக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனை கொண்டு வர வேண்டும்' என்ற கோரிக்கை கட்சிக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெ... மேலும் பார்க்க

`ட்ரம்ப் பிறந்த நாளில் கூடாது' - அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை அறிவிக்க நள்ளிரவு வரை இழுத்தடித்த ஈரான்

அமெரிக்கா, ஈரான் இடையேயான போர்நிறுத்த பேச்சுவார்த்தை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து கொண்டிருந்தது. எதாவது ஒரு பிரச்னையில் பேச்சுவார்த்தை தடைபட்டுக்கொண்டே இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு த... மேலும் பார்க்க

'வாக்குக்கேட்பதற்கான tool ஆக குழந்தைகளைப் பயன்படுத்திய முதல்வர் இன்று.!' - உதயநிதி காட்டம்

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் பலரும் குரல் கொடுத்து வரு... மேலும் பார்க்க

ஈரான் அமைதி ஒப்பந்தம் முடிவாகிறதே... ஹார்முஸ் நீர்ச்சந்தி எப்போது திறக்கப்படும்? சுங்க வரி உள்ளதா?

ஈரானில் போர் தொடங்கியது உலக நாடுகளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், உலக நாடுகளை நேரடியாகப் பாதித்த ஒன்று - ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல். இதனால், எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் கச்ச... மேலும் பார்க்க

ஓமனில் உயிரிழந்த தமிழக மாலுமி நிஷாந்த் - உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை தீவிரம்

ஓமன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் உடல்நல குறைவால் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மாலுமி நிஷாந்தின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு... மேலும் பார்க்க