Rs.100 CUT MOTION; மேட்டூர், தஞ்சாவூருக்கானது: மெட்ராஸ் மாகாண கவுன்சில் - விவாதங...
"தமிழ்நாட்டில் தங்க நாணயம் விற்பனை இல்லை; நகை சீட்டும் கிடையாது" - நகை வியாபாரிகள் சங்கம் முடிவு
'ஓராண்டிற்கு தங்கம் வாங்காதீர்கள்' என்று இந்த வாரத்தின் தொடக்கத்தில் இந்திய பிரதமர் மோடி எச்சரித்திருந்தார். அடுத்ததாக, தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 6 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், தங்கம் விலை பவுனுக்கு நேற்றே கிட்டத்தட்ட ரூ.5,360 உயர்ந்தது. இன்னும் தங்கம் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த நிலையில் தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சம்மேளன தலைவர் சபரிநாதன் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது...

"அந்நிய செலாவணியைப் பாதுகாக்க, மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை பாராட்டுதலுக்கு உரியது. இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய அரசுக்கு ஆதரவாக உறுதுணையாக இருக்கிறோம்.
அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 30,000 நகை வியாபாரிகள் தங்க நாணயங்களை விற்பதை நிறுத்த உள்ளனர். மேலும் தங்க சேமிப்பு சம்பந்தமான எந்தத் திட்டங்களையும் அவர்கள் ஊக்கப்படுத்தப் போவதில்லை.
தங்கம் நகை வர்த்தகத்தைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும்...
> தங்கத்தை உலோக வடிவில் வாங்கி சேமிக்கும் கோல்டு இ.டி.எஃப், டிஜிட்டல் கோல்டு ஆகியவற்றை உடனடியாக தடை செய்ய வேண்டும்.
> தங்கம் இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் புல்லியன் டீலர்கள், பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களுக்கு மட்டுமே தங்கத்தை விற்க வேண்டும்".



















