Vijay-ஐ புகழ்ந்த AMMK MLA காமராஜ், நெருக்கடி கொடுத்தாரா TTV Dhinakaran?
இந்தியாவில் இருந்து சர்க்கரை ஏற்றுமதி செய்ய 'நோ'- மத்திய அரசின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?
தற்காலிகமாக இந்தியாவில் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை செய்துள்ளது மத்திய வர்த்தக மற்றும் தொழிற்சாலை அமைச்சகம்.
அமைச்சகம் என்ன சொல்கிறது?
வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வரை இந்தியாவில் இருந்து சர்க்கரை (ரா சுகர், வெள்ளை சர்க்கரை, ரீஃபைண்டு சர்க்கரை) ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது.
இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
ஆனால், இந்தத் தடை, CXL மற்றும் TRQ கோட்டாப்படி, ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி தடை இல்லை.
ஏன் இந்த அறிவிப்பு?
உலக அளவில் பிரேசிலுக்கு அடுத்து சர்க்கரை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. பிரேசில், தாய்லாந்திற்கு அடுத்து இந்தியா மூன்றாவது சர்க்கரையை அதிகம் ஏற்றுமதி செய்து வருகிறது.
அப்படியிருக்கையில், இந்த அறிவிப்பு உலக அளவில் மிகவும் கவனமாக பார்க்கப்படுகிறது.
உலக அளவில் நிலவும் நிலையற்ற தன்மையால் பணவீக்கம், விலை உயர்வு போன்றவை நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன.
இதனால், உள்நாட்டில் சர்க்கரை மற்றும் சர்க்கரை சார்ந்த பொருள்களின் விலை உயர்ந்துவிடக் கூடாது என்பதற்காக இந்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
இன்னொரு பக்கம், இரண்டாவது வருடமாக, இந்த ஆண்டும் இந்தியாவில் கரும்பு உற்பத்தியும் குறைவாக இருக்கிறது. இதை கவனத்தில் கொண்டும் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

















