Vijay-ஐ புகழ்ந்த AMMK MLA காமராஜ், நெருக்கடி கொடுத்தாரா TTV Dhinakaran?
15%-ஆக உயர்ந்தது: தங்கம், வெள்ளியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வரி அதிகரிப்பு!
பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓர் ஆண்டுக்கு நிறுத்தும்படியும், எரிபொருள், உணவு ஆயில்களை பயன்படுத்துவதை குறைக்கும்படியும், வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யும்படியும், வீட்டில் இருந்து வேலை செய்யும்படியும் தொடர்ந்து கூறி வருகிறார். இதனால் பா.ஜ.க அமைச்சர்கள் இப்போது பொதுபோக்குவரத்திற்கு மாறி வருகின்றனர். அதோடு சில அமைச்சர்கள் தங்களது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் தனது பாதுகாப்பிற்கு வருபவர்களின் எண்ணிக்கையை குறைத்து இருக்கிறார். ஏர் இந்தியா 145 சர்வதே விமானங்களை ரத்து செய்து இருக்கிறது. நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அப்படி இருந்தும் உபரிப் பணத்தைச் சேமிப்பதற்காகப் பொதுமக்கள் நகைகளை பயன்படுத்துவதால், இந்தியக் குடும்பங்களிடையே தங்கம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், உலகளவில் தங்கம் வாங்குவதில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது.

இருப்பினும், அவ்வாறு வாங்கப்படும் தங்கம் பொதுவாகப் பாதுகாப்பு பெட்டகங்களிலேயே (vaults) முடங்கி விடுகிறது.
கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய பொருள் தங்கமாகும். கடந்த நிதியாண்டில் இதன் இறக்குமதி அளவு 5% குறைந்து 721 டன்களாக சரிந்து. தேவையில் ஓரளவுக்கு மந்தநிலை ஏற்பட்ட போதிலும், உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்ததால் இதன் இறக்குமதி மதிப்பு 24% அதிகரித்து 72 பில்லியன் டாலராக உயர்ந்தது. தற்போது திடீரென மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு தற்போது இருக்கும் 6 சதவீத வரியை 15 சதவீதமாக அதிகரித்து உத்தரவிட்டு இருக்கிறது.
இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக வெகுவாக சரிந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரிகளை மத்திய அரசு திடீரென 15 சதவீதமாக உயர்த்திய போதிலும், நாணயச் சந்தையில் ரூபாயின் சரிவைத் தடுக்க முடியவில்லை. அதேசமயம் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டு இருப்பதால் உள்ளூர் சந்தையில்,10 கிராம் தங்கத்தின் விலை ₹9,000-10,000 வரை உயர்ந்து, சுமார் ₹1.6 லட்சத்தை எட்டியுள்ளது. அதே நேரத்தில், வெள்ளியின் விலை கிலோவுக்கு ₹18,000-19,000 வரை அதிகரித்து, சுமார் ₹2.9 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியும் 6.4%-லிருந்து 15.4% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தங்கத்தின் தேவை குறையக்கூடும் என்பதை உணர்ந்துள்ள நகை வியாபாரிகள், தங்களது வியாபாரத்தைத் தொடர்ந்து தொய்வின்றி நடத்துவதற்காக, பழைய நகைகளை மாற்றிக் கொள்ளும் திட்டங்களை ஊக்குவிப்பது போன்ற புதிய வழிமுறைகளை வகுக்கத் தொடங்கியுள்ளனர்.

















