செய்திகள் :

IAS அதிகாரிகள் அதிரடி மாற்றம்: நிதித்துறை, டாஸ்மாக் நிறுவனத்திற்கு புதிய மேலாண் இயக்குநர்கள் நியமனம்

post image

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்புகளில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி, நீண்ட விடுப்பில் இருந்த N.முருகானந்தம், IAS மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். அவர் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக (கூடுதல் தலைமைச் செயலாளர்) நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இப்பொறுப்பை பி. அமுதா, IAS கூடுதலாகக் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

M.A. சித்திக், IAS
M.A. சித்திக், IAS

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வந்த M.A. சித்திக், IAS மாற்றப்பட்டு, தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அந்தப் பதவியில் இருந்த த. உதயச்சந்திரன், IAS-க்கு பதிலாக இவர் இந்தப் பொறுப்பை ஏற்கிறார்.

சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறையின் புதிய முதன்மைச் செயலாளராக டாக்டர் S. சுவர்ணா, IAS நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்பு ராஷ்டிரிய உச்சதர் சிக்ஷா அபியான் (RUSA) திட்டத்தின் மாநில இயக்குநராகப் பணியாற்றி வந்தார். டாக்டர் கே. மணிவாசன், IAS கூடுதலாகக் கவனித்து வந்த இந்தப் பொறுப்பை டாக்டர் சுவர்ணா இனி முழுமையாகக் கவனிப்பார்.

அதேபோல், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளராகப் பணியாற்றி வந்த K. நந்தகுமார், IAS சேவைகள், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் டாஸ்மாக் நிறுவனத்தின் புதிய மேலாண்மை இயக்குநராகப் பொறுப்பேற்பார். டி. கிறிஸ்துராஜ், IAS-க்குப் பதிலாக இவர் இந்த முக்கியப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

`சிங்கப்பெண் அதிரடிப் படை' - முதல்வர் விஜய்யின் நேரடிக் கண்காணிப்பில்... முழு விவரம்!

சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், ஜோசப் விஜய்க்கு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவ... மேலும் பார்க்க

முதல்வர் விஜய்: முதல் சட்டமன்றக் கூட்டம்... எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி! |TN News Live Update

17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் முதல்வர் நாற்காலியில் விஜய்தமிழ்நாட்டின் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று (மே 11) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்வாகி இருக... மேலும் பார்க்க

TVK: "கலாம் ஐயா சொன்னதுபோல, இந்தக் கனவு என்பது பெரும் கனவு!" - பதவியேற்புக்கு பின் ராஜ்மோகன்!

சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, இடதுசாரிக் கட்சிகள், விசிக, ஐ.யு.எம்.எல், காங்கிரஸ் ஆகிய கட்ச... மேலும் பார்க்க

`சாதிவாரி சர்வே; மதுக்கடைகள் மூடல்...' - முதல்வர் விஜய்-ன் கவனத்துக்கு அன்புமணி முன்வைப்பவை!

சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, இடதுசாரிக் கட்சிகள், விசிக, ஐ.யு.எம்.எல், காங்கிரஸ் ஆகிய கட்ச... மேலும் பார்க்க

Vijay : "மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து.!" - முதல்வர் விஜய்க்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி

சட்டமன்றத் தேர்தலில், 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, இடதுசாரிக் கட்சிகள், விசிக, ஐ.யு.எம்.எல், காங்கிரஸ் ஆகிய கட்ச... மேலும் பார்க்க

“அமித் ஷாவுக்காக காத்திருக்கும் ஆளுநர்.!” - ரிப்போர்ட் ரெடி!

தமிழகத்தின் முதல்வராக விஜய் தேர்தெடுக்கபடுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்துவருகிறது. போதிய பெரும்பான்மை இல்லாமல் த.வெ.க அல்லோலப்பட்டு வரும் நிலையில், தமிழக ஆளுநர் அலுவலகத்திலிருந்து ரிப்போர்ட் ஒன்று ரெ... மேலும் பார்க்க