செய்திகள் :

வினாத்தாள் கிடைத்ததும் பதிலளிக்க எப்படி ப்ளான் செய்ய வேண்டும்? - King Makers பூமிநாதன் விளக்கம்

post image

UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றன.

'நீங்களும் ஆகலாம் IAS' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற மே 17 ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் நடக்க இருக்கிறது. 

UPSC/TNPSC
UPSC/TNPSC

அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. இந்த நிகழ்வில் திருமதி பா.பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப., தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், திரு.E. சுந்தரவதனம் இ.கா.ப., தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சிறப்புரை ஆற்றவிருக்கின்றனர்.

அதே சமயம் திரு.ஆதில் பெய்க் (சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர் - King Makers IAS அகாடமி), King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்க உரையை ஆற்ற இருக்கிறார்கள்.

இந்நிலையில் தேர்வர்கள் வினாத்தாள் கையில் கிடைத்ததும் பதிலளிக்க எப்படி பிளான் செய்ய வேண்டும்? என்று King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் நம்மிடம் பகிர்ந்திருக்கிறார். இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், " வினாத்தாள் கையில் கிடைத்ததும் பதிலளிக்க எப்படி பிளான் செய்ய வேண்டும்? இந்த கேள்விக்கு உளவியல் கோணத்தில் தான் பிளான் செய்ய வேண்டும். யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் எக்ஸாமினேஷன் வருகிற மே 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன்
King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன்

அதேபோல செப்டம்பர் மாதம் டிஎன்பிஎஸ்சி நடத்தக்கூடிய குரூப் 1 தேர்வும் நடைபெற இருக்கிறது. இந்த யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ந்தெடுக்கக்கூடிய பணிகள் எத்தகைய பணிகள் என்பதை முதலில் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த வினாத்தாள்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொண்டு தான் தேர்வு அறைக்குச் செல்கிறோம். தேர்வு அறையில் விரைவான முடிவெடுப்பவரை தேர்ந்தெடுப்பதற்காகவும், ஒரு சிறந்த ஆளுமையை தேர்ந்தெடுப்பதற்காகவும், அதிக அளவில் படிப்பதற்கு ஆர்வமுள்ள ஒரு மனிதரை தேர்ந்தெடுப்பதற்காகவும், ஆழமான அறிவு இருப்பவர்களை தேர்ந்தெடுப்பதற்காகவும் ஏற்ப தான் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அந்தக் கேள்வி தாளில் எதிர்பாரத விதமாக நிறைய கேள்விகள் வரும். அந்த அழுத்தத்தை எப்படி சமாளிக்கிறோம் என்பதை அந்தத் தேர்வு நமக்கு கற்றுக்கொடுக்க முயற்சி செய்யும். இதை மனதில் வைத்துக்கொண்டு மிகவும் அமைதியாக ஒரு 20 நிமிடம் அந்த இடத்திலேயே ஒரு சின்ன தியானம் செய்துவிட்டு தேர்வு அறைக்குச் செல்ல வேண்டும். வினாத்தாள் கைக்கு வந்த உடன் எல்லாப் பக்கமும் சரியாக பிரிண்ட் செய்யப்பட்டிருக்கிறதா? என்று சரிபார்க்க வேண்டும்.

UPSC/TNPSC
UPSC/TNPSC

அதன்பிறகு பதிவு எண்ணை குறிக்க வேண்டும். வினாத்தாள் கிடைத்த உடன் விரைவாக வாசிக்க வேண்டும். அதேபோல வினாத்தாளை வாசித்துவிட்டு நமக்கு தெரிந்த கேள்விகளை எல்லாம் 'Yes' என்றும், தெரியாத கேள்விகளை 'No' என்றும் குறித்துக்கொள்ளலாம். கேள்விக்கான விடையை ஓஎம்ஆர் தாளில் சரியாக குறித்துக்கொள்வது முக்கியம். அதேபோல நம்முடைய ஓஎம்ஆர் தாளில் சரியாக நம்முடைய பதிவு எண்ணை குறிப்பிட வேண்டும். தவிர தெரிந்த கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும். யூபிஎஸ்சி தேர்வில் பொது அறிவியலில் 100 கேள்விகள் இருக்கும். 100 கேள்விகளை இரண்டு மணி நேரத்துக்குள் பதிலளித்து முடித்திருக்க வேண்டும்" என்றார்.

ஆனந்த விகடன், King Makers IAS அகடாமியுடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இது போன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம், எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் மேற்கொண்ட விண்ணப்பத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம்.

UPSC / TNPSC: தஞ்சாவூரில் இலவசப் பயிற்சி முகாம் - அனுமதி இலவசம்!

UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கின்ற... மேலும் பார்க்க

`IAS தேர்வுக்கு தயாராகுபவர்கள் அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை...' - விளக்கும் ரவி Ex., IPS

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறத... மேலும் பார்க்க

போட்டி தேர்வுகளுக்கு முழு போர்ஷனையும் படிக்க வேண்டுமா?- விளக்கும் King Makers IAS சத்யஶ்ரீ பூமிநாதன்

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறத... மேலும் பார்க்க

+2 முடித்தவங்களுக்கு Golden Chance; உயர்கல்வித் தேர்வுக்கு முழுமையான வழிகாட்டல்

இந்த,நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்யவும்https://forms.gle/mkX53JaTLuszofAt8கல்வி விகடனும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமும் இணைந்து வரும் 25.04.2026 சனிக்கிழமை, '+2-வுக... மேலும் பார்க்க

முதல் இரண்டு முயற்சிகளிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? - கல்வியாளர் விளக்கம்!

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறத... மேலும் பார்க்க