செய்திகள் :

``தலித் ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை" - திருமாவளவன் விளக்கம்

post image

விசிக மீதான விமர்சனம் குறித்து, விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசிய சில கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமாவளவன் தன் எக்ஸ் பக்கத்தில் தன் கருத்து குறித்து விளக்கமளித்திருக்கிறார். அவர் பதிவில், ``இன்று செய்தியாளர்கள் சிலர் என்னை சந்தித்தார்கள். அப்போது பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள்.

அப்போது, "தங்களை முதல்வராக்க நடந்த முயற்சியை காங்கிரஸ் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்களே" - என்று ஒருசெய்தியாளர் கேட்டார். அதற்கு நான், ' அப்படியொரு முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்தது' என்று பதிலளித்தேன்.

எனக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் என்னை அணுகி அதைப் பற்றி பேசினார்கள் என்பதையே கூறினேன். 'திமுகவோ அதிமுகவோ அதிகாரபூர்வமாக யாரும் என்னை அப்படி அணுகவில்லை. நானும் யாரிடமும் பேசவில்லை.

திருமாவளவன்
திருமாவளவன்

நேற்றும் இன்றும் இது குறித்து ஊடகங்களில் உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தான் அவ்வினாவுக்கு நான் விளக்கமளித்தேன். ஆனால், அதனை வேறு பொருள்படும்படி தலைப்பிட்டு செய்திகளைப் பரப்பி பரபரப்பை ஏற்படுத்துவது ஊடக அறமில்லை.

தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மையாகும்.

இந்தியாவில் உத்தரபிரதேசம், ஆந்திரா, மகாராஷ்ட்ரா, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலித்துகள் முதலமைச்சர்களாக ஆட்சி பீடத்தில் கோலோச்சிய வரலாறு நடந்தேறியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு நூறாண்டானாலும் அது கனவாகவே இருக்கும் என்பதை அறிந்தவன் நான்.

எனினும், இன்றைய அரசியல் சூழலில் அப்படியொரு பேச்சு நடந்ததாக சொல்லப்பட்டது. ஆகவே, 'எனக்கும் தகவல் கிட்டியது' என்று ஒரு ஊடகப் பணியாளரின் கேள்விக்கு நான் விடையளித்தேன்.

அதனைத் திரித்து 'பிறிதொரு பொருளைத்தரும் உள்நோக்கத்தோடு' ஒருசில ஊடகங்கள் செய்திகளைப் பரப்புவது வேதனையளிக்கிறது." ஏனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சி.வி சண்முகம் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த `முதல்வர்' விஜய் - எடப்பாடி பழனிசாமியை சந்திப்பாரா?

தமிழ்நாடு அரசியலில் தேர்தல் முடிவு வெளியான மே-4 க்குப் பிறகு பிரேக்கிங் நியூஸுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பாரா என்பதில் தொடங்கி தற்போது அ.தி.மு.க-வின் எம்.ஜி.ஆர் மாளி... மேலும் பார்க்க

தேனி: துடைத்தெறியபட்ட அதிமுக… கட்சிக்கு கஷ்ட காலத்தில் கைகொடுத்த மாவட்டத்தில் வீழ்ச்சி! என்ன காரணம்?

அ.தி.மு.க -வின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் களம் கண்டு வெற்றி பெற்ற மாவட்டம் தேனி. இங்கு உள்ள நான்கு தொகுதிகளிலும் கோலோச்சி வந்த அ.தி.மு.க, தற்போது நடந்... மேலும் பார்க்க

தகர்த்த செந்தில் பாலாஜி; கொடியேற்றிய விஜய்... `கோட்டை'யில் கோட்டைவிட்ட அதிமுக!

“கோவை என்றைக்கும் அண்ணா தி.மு.க கோட்டை. எனவே, கோவையில் அனைத்து தொகுதிகளிலும் என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்” என்று தேர்தலுக்கு முன்பு நம்பிக்கையோடு சொல்லி வந்த எஸ்.பி.வேலுமணியைத் தவி... மேலும் பார்க்க

'திமுக அமைச்சர்களின் பணியாளர்களை வேறு வேறு இடங்களுக்கு மாற்றுங்கள்.!' - முதல்வர் அலுவலகம் கறார்?

தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்று கோட்டைக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில், தலைமைச்செயலகத்தில் திமுக சார்பு பணியாளர்களையும் அதிகாரிகளையும் உடனடியாக வேறு வேறு இடங்களுக்கு மாற்றுமாறு முதல்வர் அலு... மேலும் பார்க்க

"பழையபடி +2 மதிப்பெண்களின்படி, MBBS இடங்கள் ஒதுக்கப்படணும்" - முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் வேண்டுகோள்

வினாத்தாள் கசிந்ததால், கடந்த 3-ம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுக த... மேலும் பார்க்க

துரைமுருகனின் அறையில் ஆனந்த்; கே.என்.நேரு அறையில் அருண்ராஜ்! - தலைமைச் செயலக சுவாரஸ்யங்கள்!

தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்று 3 நாட்கள் ஆகிறது. திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகள் ஆட்சி நடத்திய சட்டமன்றத்தில் இப்போது தவெகவின் ஆட்சி நடக்கிறது. தவெக-வினரின் வருகையால் சட்டமன்றமே ஒருவித புத... மேலும் பார்க்க