யானை - மனித எதிர்கொள்ளல்: 5 நாள்களில் பறிபோன 3 உயிர்கள் - நீலகிரியில் தொடரும் சோ...
தங்கம் வாங்குவதற்கு புது செக்: தங்கம், வெள்ளி இறக்குமதி வரி 15% ஆக உயர்வு; 15% - Breakdown
அந்நிய செலாவணியைத் தங்கம் இறக்குமதியில் செலவு செய்யாமல் இருக்க, ஓராண்டிற்கு தங்கம் வாங்குவதைக் குறையுங்கள் என்று மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தார் இந்திய பிரதமர் மோடி.
இப்போது தங்கம் வாங்குவதற்கும், தங்கம் இறக்குமதி செய்வதற்கும் புதிய செக் வைத்துள்ளது மத்திய அரசு.
விலை உயர்ந்த உலோகங்களை இறக்குமதி செய்வதற்கான சுங்க வரியை 2024-ம் ஆண்டு கடைசியாக மாற்றி இருந்தது மத்திய அரசு. அப்போது தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 6 சதவிகிதம் ஆகும்.
இந்த 6 சதவிகிதம் இப்போது 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது.

வரி Breakdown: 15 சதவிகிதம் என்பதில் 10 சதவிகிதம் அடிப்படை சுங்க வரி, 5 சதவிகிதம் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரி என்கிற செஸ் வரி.
இறக்குமதி வரி உயரும் போது, கடைகளுக்கு சென்று தங்க நகைகளை நாம் வாங்கும்போது இந்த வரி உயர்வு விலையில் பிரதிபலிக்கும். இதனால், கோல்டு இ.டி.எஃப் மற்றும் சில்வர் இ.டி.எஃப்களின் விலையும் உயரும்.
இந்த வரி உயர்வால் தங்கம் மற்றும் வெள்ளி கடத்தல் அதிகமாகும் என்கிற அச்சமும் தற்போது எழுந்துள்ளது. இதனை தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.















