செய்திகள் :

நாட்டில் குற்றச் சம்பவங்களின் சதவிகிதம் குறைந்தாலும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு!

post image

தேசிய குற்ற ஆவண காப்பக தரவவுகளின் அடிப்படையில் குழந்தைகள் உரிமை அமைப்பான 'க்ரை' (CRY) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் ஒட்டுமொத்த குற்றச்சம்பவஙகளின் எண்ணிக்கை 10.8 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த 2020 முதல் 66 லட்சம் குற்றங்கள பதிவான நிலையில் 2024 முதல் இது 58.86 லட்சமாக குறைந்துள்ளது.

சிறாருக்கு எதிரான இணையவழி குற்றம்

இதே காலக்கட்டத்தில் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் 46 சதவிகிதம் அதிரித்துள்ளன. 2020-ல் சிறார் குற்ற வழக்குகள் 1.28 லட்சமாக இருந்தது. அது 2023-ல் 1.77 லட்சமாகவும், 2024-ல் 1.87 லட்சமாகவும் கூடியுள்ளது.

சிறார்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களின் எண்ணிக்கை 1,238 ஆக பதிவாகியுள்ளது. அதில், சிறார்களை இணையத்தில் ஆபாசமாக சித்தரித்து பகிர்ந்தவர்கள் மீது 1099 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாநில அளவில் சிறார் குற்ற வழக்குகள் எண்ணிக்கையில் சத்தீஸ்கர் -266, ராஜஸ்தான்-174, டெல்லி-151, உ.பி-137, கேரளா-92 வழக்குகள் என முதல் ஐந்து இடஙகளில் இந்த மாநிலங்கள் உள்ளன.

கடந்த 2024 -ல் நாட்டில் பதிவான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 69,191 ஆகும். அதில், 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமியரின் எண்ணிக்கை 23,497 ஆகும்.

சிறாருக்கு எதிரான குற்றங்கள்

போக்சோ குற்றங்களில் ஈடுபட்ட நபர்களில் 99.6 சதவிகிதம் பேர் சிறுமியருக்கு முன்னரே அறிமுகமானவர்கள். அவர்களின் குடும்ப நண்பர்கள், அண்டை வீட்டினர், வீட்டுப் பணியாளர்கள் அடங்குவர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி: எரிந்த நிலையில் ராணுவ வீரர், அவர் தந்தை உடல்கள் - திருமணம் மீறிய உறவால் நடந்த பயங்கரம்

கிருஷ்ணகிரி அருகே இருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கொலையானது ராணுவ வீரரும் அவர் தந்தை என்பதும், திருமணம் மீறிய விவகாரத்தால் இக்கொலை நடந்துள்ளத... மேலும் பார்க்க

NEET : 30 நிமிடத்தில் கைமாறிய வினாத்தாள்:ரூ.10 லட்சத்துக்கு வாங்கி ரூ.15 லட்சத்தில் விற்ற மாணவர்

நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத்தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்ததை தொடர்ந்து ஒட்டுமொத்த தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆண்டு முழுவதும் படித்த மாண... மேலும் பார்க்க

போனுக்கு வந்த திருமண அழைப்பிதழ்; 5 லட்சத்தை இழந்த நபர்- புது வகை மோசடியிலிருந்து தப்பிப்பது எப்படி?

பெங்களூருவைச் சேர்ந்த நூர் நஹித் கான் என்ற 42 வயது தொழிலதிபரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், "எங்கள் திருமணத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். முழுமையான விவரங்களுக்குக் கீழே இ... மேலும் பார்க்க

மது போதையில் ஆம்னி பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள்; காட்டிக்கொடுத்த மூச்சு பரிசோதனை கருவி!

தூத்துக்குடி நகர போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீஸார் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் முன்பு இரவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இரு... மேலும் பார்க்க

"அவர் பக்கத்திலேயே என்னையும் அடக்கம் செய்யுங்கள்" - காதலன் இறந்ததால் பெண் எடுத்த விபரீத முடிவு

கேரளம் மாநிலம் காசர்கோடு மாவட்டம் கும்பளா அருகே உள்ள கிதூர் குண்டங்கேரடுக்கை பகுதியைச் சேர்ந்த ஜெயானந்தன் - தேவி தம்பதியினரின் மகள் பிரபுல்லா (26). பாலக்காட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக... மேலும் பார்க்க

சிவகாசி: மகளைக் காதலித்த 2 இளைஞர்களை அடுத்தடுத்து கொலை செய்த தந்தை; சிக்கியது எப்படி?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகிலுள்ள செவளூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். லாரி டிரைவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் 17 வயது மகளைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தெரிந்... மேலும் பார்க்க