செய்திகள் :

முலாயம் சிங் யாதவ் மகன் பிரதீக் யாதவ் 38 வயதில் மர்ம மரணம்! - போலீஸ் விசாரணை

post image

சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ் தற்போது கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். முலாயம் சிங் யாதவின் மற்றொரு மகனான பிரதீக் யாதவ்(38) அரசியலில் ஈடுபடாமல் தொழில் செய்து வந்தார்.

லண்டனில் எம்.பி.ஏ முடித்துவிட்டு லக்னோவில் பில்டராக இருந்து வந்தார். இது தவிர சொந்தமாக பல்வேறு இடங்களில் ஜிம் நடத்தி வருகிறார். இன்று காலை பிரதீக் யாதவை அவரது குடும்பத்தினர் லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவரை டாக்டர்கள் சோதித்து பார்த்தபோது அவர் இறந்திருந்தார். அவரது உடலில் எந்த வித காயமும் தென்படவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் தான் பிரதீக் யாதவ் இறந்ததற்கான காரணம் தெரிய வரும். பிரதீக் யாதவ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும்போது பா.ஜ.க நிர்வாகியும், பிரதீக் மனைவியுமான அபர்னா யாதவ் வரவில்லை.

பிரதீக் யாதவிற்கு நீண்ட நாட்களாக நுரையீரல் பிரச்னை இருந்து வந்தது. நுரையீரலில் ரத்த கட்டி இருந்தது. அதற்காக அவர் சிகிச்சையும் எடுத்து வந்தார். அதன் காரணமாக இறந்தாரா என்று தெரியவில்லை. இது குறித்து போலீஸாரும் விசாரித்து வருகின்றனர்.

பிரதீக் யாதவ் முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவி சத்னாவிற்கு பிறந்தவர் ஆவார். பிரதீக் யாதவ் கடந்த 2017ம் ஆண்டு உலகின் மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படும் லம்போர்கினி (Lamborghini) காரை ரூ.5 கோடிக்கு வாங்கியது சர்ச்சைக்குள்ளானது. ஆனால் தான் முறைப்படி வருமான வரி கட்டுவதாகவும், கடனில் கார் வாங்கி இருப்பதாகவும் பிரதீக் யாதவ் விளக்கமளித்து இருந்தார்.

பிரதீக் யாதவும் அவரது மனைவி அபர்னா யாதவும் எட்டு ஆண்டுகள் காதலித்து 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். ஆனால் கடந்த ஜனவரி மாதம் தனது மனைவியை விவாகரத்து செய்ய மனுத்தாக்கல் செய்து இருப்பதாக பிரதீக் யாதவ் குறிப்பிட்டார். அபர்னா புகழை விரும்பக்கூடியவர் என்றும், குடும்பத்தை சீரழித்துவிட்டதாகவும் பிரதீக் குறிப்பிட்டு இருந்தார். பிரதீக் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார்.

முலாயம் குடும்ப பின்னணி

முலாயம் சிங் யாதவ் முதல் மனைவி மாலதி தேவி அகிலேஷ் பிறந்தவுடன் பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். அதன் பிறகு மாலதி 2003ம் ஆண்டு இறந்துபோனார். அடுத்த சில மாதங்களில் முலாயம் சிங் சத்னாவை திருமணம் செய்து கொண்டார். சத்னா ஏற்கனவே சந்திர பிரகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் மகன் பிரதீக் பிறந்த ஒரு ஆண்டில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். அதன் பிறகுதான் முலாயம் சிங் யாதவை திருமணம் செய்தார்.

பெரும்பான்மை நிரூபித்த தவெக: "ஆம் இது சிறுபான்மை அரசு தான்!" - முதல்வர் விஜய் பேச்சு

தமிழக வெற்றிக் கழகம் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான 'நம்பிக்கை வாக்கெடுப்பு' இன்று (மே. 13) நடைபெற்றது. இதில் 144 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று முதல்வர் விஜய்யின் தவெக பெரும்பான்மையை நிரூப... மேலும் பார்க்க

"கூவத்தூரையே மிஞ்சுகிறது உங்கள் கூத்து; புஷ்பா படப்பாணியில்.!" - தவெகவை கடுமையாக சாடிய உதயநிதி

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளும் கட்சியாக படியேறியுள்ளது. 59 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக எதிர்க்கட்சியாக பொறுப்... மேலும் பார்க்க

Vijay : '171 பேரில் 144 ஆதரவு வாக்குகள்' நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற தவெக! - அதிமுக ஆதரவு.?

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் பெரும்பாலான தொகுதிகளை வழங்கியிருந்தாலும், பெரும்பான்மையை வழங்கவில்லை. அதனால், தவெக இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கை... மேலும் பார்க்க

பதவியேற்பு விழாவில் கையெழுத்து போட மறுத்த முதல்வர் ரங்கசாமி! - 120 விநாடிகள் காத்திருந்தது ஏன்?

ஜோதிடர் குறித்துக் கொடுத்த `மேஜிக்’ டைம்..!புதுச்சேரி 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. என்.ஆர்.காங்கிரஸ் 12 தொகுதியிலும், பா.ஜ.க 4 தொகுத... மேலும் பார்க்க

'I will Rethink about it..!' - பிரேமலதாவின் `ராஜகுரு' பேச்சுக்கு விஜய் சொன்ன பதில்!

தமிழக முதலமைச்சர் விஜய்யின்சிறப்பு அரசியல் செயலாளர்என்கிற பதவிக்கு த.வெ.க-வின் செய்தி தொடர்பாளரும், விஜயின் ஆஸ்தான ஜோதிடருமான ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசின் முதன்ம... மேலும் பார்க்க

`முதல்வர் ஒரு தரப்பிற்கு ஆதரவளிப்பது என்ன நியாயம்?' - சட்டசபையில் பழனிசாமி vs வேலுமணி தரப்பு!

தவெக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடந்தது. தற்போது அதிமுகவில் பழனிசாமி அணி, வேலுமணி அணி என்... மேலும் பார்க்க