செய்திகள் :

`இணையுடன் சண்டை; மனிதனைப் போலவே கோபித்துக் கொள்ளும் ஆண் கொரில்லா' - இணையத்தை கவர்ந்த வீடியோ

post image

விளையாட்டாகவோ அல்லது கோபமாகவோ சண்டை போட்டுக் கொண்ட பிறகு மனிதர்கள் எப்படி முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்திருப்பார்களோ, அதேபோல் ஒரு கொரில்லா செய்திருக்கும் சுவாரசியமான செயல் இப்போது இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.

மனிதர்களின் உணர்ச்சிகளுக்கும் விலங்குகளின் உணர்ச்சிகளுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், தனது துணையுடன் ஏற்பட்ட சண்டைக்குப் பிறகு ஒரு ஆண் கொரில்லா மனிதரைப் போலவே காட்டிய எதிர்வினை தற்பொழுது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

ஜப்பானில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஹிகாஷியாமா மிருகக்காட்சிசாலையில் வசிக்கும் 'கியோமசா' என்ற கொரில்லாதான் தற்போது இணையத்தின் புதிய நட்சத்திரமாக மாறியுள்ளது.

மிருகக்காட்சிசாலைக்கு வந்த பார்வையாளர் ஒருவர் எடுத்த இந்த வீடியோவில், கியோமசா தனது பெண் துணையுடன் ஏதோ ஒரு விஷயத்திற்காகக் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போடுகிறது. சண்டை முடிந்த அடுத்த கணமே, மனிதர்கள் கோபித்துக் கொண்டு போவது போல, அது அங்கிருந்த ஒரு மரக்கட்டையின் மீது ஏறி அமர்ந்து கொள்கிறது.

பின்னர், தன் கைகளை நெஞ்சுக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு, அனிமேஷன் படங்களில் வரும் கோபக்காரக் கதாபாத்திரங்களைப் போல அச்சு அசலாக மனித பாணியில் அமர்ந்திருக்கிறது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் குவித்து வருகிறது. கியோமசாவின் இந்த மனிதத்தன்மையுள்ள கோப முகபாவனையைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை நகைச்சுவையாகப் பகிர்ந்து வருகின்றனர்.

"சண்டை என்று வந்துவிட்டால் மனிதர்களாக இருந்தாலும் கொரில்லாவாக இருந்தாலும் ஒரே மாதிரியாகத்தான் கோபித்துக் கொள்கிறார்கள்" என்று இணையவாசிகள் கமெண்ட் செய்து இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

மும்பை: `28,000 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள்' - அதானியைத் தொடர்ந்து களமிறங்கும் அம்பானி

மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு... மேலும் பார்க்க

குழந்தை பிறப்பு விகிதத்தைக் குறைக்கும் ஸ்மார்ட்போன்கள்; அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் சொல்வது என்ன?

இன்றைக்கு ஸ்மார்ட் போன்கள் இல்லாத நபர்களே கிடையாது. அதோடு இரவு 12 மணிக்குப் பிறகும் உறங்காமல் அதிகமானோர் ஸ்மார்ட் போன்களை நோண்டிக்கொண்டிருக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு போனில் கேம் விளையாட எதிர... மேலும் பார்க்க

`வயதென்பது தடையல்ல' - 50 வயதில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த ஜெமினி கணேசன் பேத்தி!

சென்னையைச் சேர்ந்த பிரபல மகப்பேறு மருத்துவர் பிரியா செல்வராஜ், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக ஏறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.இதன் மூலம், வெறும் 7 மாதங்களுக்குள் 8,000 மீட்டருக்கும... மேலும் பார்க்க

மகனை வாட்டிய உடல்நிலை; 36-வது மாடியிலிருந்து குதித்த இந்திய வம்சாவளி குடும்பம் - லண்டனில் சோகம்!

லண்டனில் உள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பின் 36-வது மாடியில் இருந்து கீழே குதித்து இந்தியத் தம்பதியினர் மற்றும் அவர்களின் 9 வயது மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட... மேலும் பார்க்க

`ரூ.90,000 வாடகை கொடுத்தும் தண்ணீர் பிரச்னை'- புலம்பும் மும்பை இளைஞர் | வைரலாகும் வீடியோ!

மும்பையில் இந்த ஆண்டு இன்னும் பருவ மழை தொடங்கவில்லை. மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இன்னும் சில நாள்களுக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் மும்பையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது.... மேலும் பார்க்க

``இது இட்லி அல்ல, 'இட்-ஸ்லைஸ்'!" - வைரல் இட்லியைத் தன் பாணியில் கலாய்த்த சசி தரூர்!

வட்ட வடிவ இட்லியைத் தட்டில் வைத்து, தொட்டுக் கொள்ளக் காரசாரமான சாம்பாரும் தேங்காய்ச் சட்னியும் பரிமாறப்படும் பாரம்பரியமான காலை உணவை நாம் அனைவரும் அறிவோம்.ஆனால், உலகளவில் பிரபலமான பிட்சா உணவின் பாணியில... மேலும் பார்க்க