கன்னியாகுமரி: விசாரணைக்கு சென்ற போலீஸை நாயை ஏவி கடிக்கவைத்த தம்பதி - மோசடி புகார...
``இது இட்லி அல்ல, 'இட்-ஸ்லைஸ்'!" - வைரல் இட்லியைத் தன் பாணியில் கலாய்த்த சசி தரூர்!
வட்ட வடிவ இட்லியைத் தட்டில் வைத்து, தொட்டுக் கொள்ளக் காரசாரமான சாம்பாரும் தேங்காய்ச் சட்னியும் பரிமாறப்படும் பாரம்பரியமான காலை உணவை நாம் அனைவரும் அறிவோம்.
ஆனால், உலகளவில் பிரபலமான பிட்சா உணவின் பாணியில் நம் ஊர் இட்லியை முற்றிலும் மாற்றி அமைத்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு விசித்திரமான ‘பிட்சா இட்லி’, உணவு பிரியர்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
எக்ஸ் தளத்தில் ஒருவர் இட்லியை பீட்சா போன்று வெட்டி என்னுடைய வெட்டும் திறன் எப்படி எனக் கேட்டிருந்தார்.
இந்த விநோதமான உணவு பரிசோதனையைப் பார்த்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், தனது (x) எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள நக்கலான பதிவு இப்போது சமூக வலைத்தளங்களில் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
வைரலாகி வரும் அந்த படத்தில், ஒரு பெரிய தட்டு வடிவ இட்லி, பிட்சா துண்டுகளைப் போல முக்கோண வடிவில் நேர்த்தியாக வெட்டப்பட்டு அடுக்கப்பட்டுள்ளது.

சசி தரூர் இந்த பதிவை மறுபதிவு செய்து, ஆங்கில வார்த்தைகளுடன் விளையாடித் தனது பாணியில் ஒரு கமெண்ட்டை தட்டியுள்ளார். "இது இட்லி (Idli), 'இட்-ஸ்லைஸ்' (Id-slice) அல்ல" என்று அவர் பதிவிட்டுள்ள இந்த நக்கல் வரிகள் இணையவாசிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளன.
மேலும், `ஒரு மென்பொருள் வல்லுநரை கிட்சன் பக்கம் வந்தால் இது தான் நடக்கும். இட்லியை இப்படி யாரும் சாப்பிட மாட்டார்கள். ஒருவேளை இத்தாலியராக இருந்தால் பீட்சா என நினைத்து இப்படி சாப்பிடலாம் (ஆனாலும் பீட்சாவுக்கு சாம்பாரை பயன்படுத்தாதீர்)' " என்றார்.
This is what happens when a software engineer gets into the kitchen and tries to partition the data! Hey @ravaldosa, it’s called ‘idli’, not ‘id-slice’. No one eats idlis this way, unless they’re Italian and mistake it for pizza. (But don’t try putting sambar on pizza, ok?) https://t.co/11l27zGHQg
— Shashi Tharoor (@ShashiTharoor) June 8, 2026
சிலர் இந்த புதிய முயற்சியைப் பாராட்டி வந்தாலும், சசி தரூரின் இந்த பதிவிற்குப் பிறகு பெரும்பாலான இணையவாசிகள் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். "உணவுகளில் புதுமை செய்யலாம், ஆனால் நம் ஊர் பாரம்பரிய இட்லியின் வடிவத்தோடு விளையாடக் கூடாது" என்று தரூரின் கருத்தை வழிமொழிந்து நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.



















