செய்திகள் :

'ஒல்லி இளைஞனா, தீர்க்கமான கண்களோட சிவாஜி நடிப்பு ஈர்த்தது' - விகடன் 'தடம்' இதழில் பாரதிராஜா நினைவு!

post image

2018-ம் ஆண்டு விகடனின் 'தடம்' இதழுக்கு பேட்டி கொடுத்திருந்தார் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா.

அந்தப் பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று - "உங்களுடைய கலை ஊடகம் சினிமாதான் என்று எப்போது முடிவு செய்தீர்கள்?"

இந்தக் கேள்விக்கு பாரதிராஜாவின் பதில்...

"பெரும்பாலும் சம்ஸ்கிருதம் கலந்த தமிழில் வசனங்களும் பாடல்களும் வெளிவந்துகொண்டிருந்த சமயம், ஒரு புயல்போல ‘பராசக்தி’ வெளியானது.

தமிழன் அதுவரை திரையில் கேட்டிராத தமிழ், சிம்மக் குரலோன் சிவாஜியின் கம்பீரக்குரல் பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்குது. ஒல்லி இளைஞனா, தீர்க்கமான கண்களோட சிவாஜியோட நடிப்பு ஈர்க்குது.

பாரதிராஜா
பாரதிராஜா

சடங்கு வீடு, கல்யாண வீடுனு மைக்கைக் கெஞ்சிக் கேட்டு வாங்கி, ‘நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்திருக்கிறது...’னு பேசித் திரிஞ்சோம்.

ஒரு நடிகனாக சிவாஜி என்னை ரொம்பவே பாதிச்சார். அப்புறம், சினிமா பார்க்கிறது ஒரு கனவு உலகத்துக்குள்ள போறது மாதிரி இருந்தது.

அரண்மனைகள், சண்டைக் காட்சிகள், மேகங்களில் மிதக்கிற தேவதைப் பெண்கள்னு, சினிமா கொஞ்சம் கொஞ்சமாக எனக்குள் ஒரு கனவு உலகை உருவாக்குச்சு.

நாடகம் போடும்போதே, சேலைகளை அசைத்து புகைமூட்டம் போட்டு இந்த எஃபெக்ட்ஸையெல்லாம் முயற்சி பண்ணியிருக்கேன். ஒருநாள் ஷூட்டிங் பார்க்கணும்னு சொல்லி, எங்க ஊர்க்காரர் விக் மேக்கர் கந்தசாமி மூலமா, ‘விக்ரம் ஸ்டூடியோ’ போனேன். ‘விஜயபுரி வீரன்’ ஷூட்டிங்.

எங்கிருந்தோ சத்தமா குரல், ‘லைட்ஸ்!’ அவ்வளவுதான், நூறு சூரியன்கள் பிரகாசிக்குது. என்னடா ஒளி இதுனு பிரமிச்சுப்போய் நின்னேன்.

அந்த ஒளி எனக்குள்ள ஓர் இனம்புரியாத சந்தோஷத்தைக் கடத்துச்சு. ‘ஆக்‌ஷன்’ சொன்னதும் சி.எல்.ஆனந்தன் கத்தியைச் சுழட்டி சுழட்டி சண்டை போடுறார். இதுதான்... இதுதான்... நம்மோட இடம்னு மனசு அன்னிக்கே முடிவு பண்ணிடுச்சு". என்றிருக்கிறார்.

Bharathiraja: `` `எங்கய்யா புடிச்சீங்க இவனை'ன்னு பாரதிராஜா கேட்டார்" - 16 வயதினிலே டாக்டர் சத்யஜித்

இயக்குநர் இமயம் பாரதிராஜா இந்த மண்ணை விட்டுப் பிரிந்து விட்டார். தமிழ்த் திரையுலகம் கண்ணீரில் தத்தளித்தபடி, அந்தக் கிராமத்து நாயகனுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறது.தமிழ் சினிமாவின் இரு துருவங்களான ரஜினி ... மேலும் பார்க்க

``ஈழப் பிரச்னை பத்தி நான் ஒரு படம் பண்ணனும்னு பிரபாகரன் ஆசைப்பட்டாரு" - 'தடம்' பேட்டியில் பாரதிராஜா

2008-ம் ஆண்டு விகடனின் 'தடம்' இதழில் இயக்குநர் பாரதிராஜாவின் பேட்டி இடம்பெற்றிருந்தது. அந்தப் பேட்டியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தது குறித்து, "எவ்வளவு பெரிய தலைவன் பிரபாகரன். ஈழம்... மேலும் பார்க்க

Bharathiraja : "வாட்சை வித்து, ஊர் வந்து சேர்ந்தேன்!" - ராணுவப் பயிற்சி பற்றி பாரதிராஜா

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலமானார். ஸ்டுடியோக்களில் அடைபட்டிருந்த சினிமாவை கிராமங்களுக்கு அழைத்துச் சென்ற பெருமை இவருக்கு உண்டு. நடிகராக வேண்டும் என்கிற கனவோடுதான் சொந்த ஊரிலிருந்து மெட்ராஸுக்க... மேலும் பார்க்க

'Really I am Proud be a Director!' - ஹீரோ ஆசையில் இருந்து இயக்குநராக மாறிய பாரதிராஜாவின் பகிர்வு

"தொடக்கத்துல நடிகனாகத்தான் முயற்சி பண்ணேன். ஒரு சீனுக்கு ரெண்டு சீனுக்கு கூப்பிடுவாங்க. ‘டாக்டரா வர்றியா’னு கூப்பிடுவாங்க. ‘என்னடா இது ஹீரோவாகணும்னு வந்தா, சூழல் இந்த மாதிரி இருக்கே’னு ஒரே குழப்பம்" -... மேலும் பார்க்க

"பைத்தியம் மாதிரி டிராமா போட்டேன்; அடை மழையில் அம்மாவின் கண்ணீர்!" - பாரதிராஜா சினிமாவுக்கு வந்த கதை

இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று காலமானார். ஸ்டுடியோக்களில் அடைபட்டிருந்த சினிமாவை கிராமங்களுக்கு அழைத்துச் சென்ற பெருமை இவருக்கு உண்டு. நடிகராக வேண்டும் என்கிற கனவோடுதான் சொந்த ஊரிலிருந்து மெட்ராஸுக்க... மேலும் பார்க்க

ராதிகா, ரேவதி, ரேகா, ராதா! - பாரதிராஜா அறிமுகம் செய்த நடிகைகளின் 'ர' சென்டிமென்ட்!

தமிழ், தெலுங்கு, இந்தி என கிட்டத்தட்ட 40 திரைப்படங்களை இயக்கி உள்ளார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. கோலிவுட்டில் '16 வயதினிலே' மூலம் என்ட்ரி கொடுத்து கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்... மேலும் பார்க்க