செய்திகள் :

'ஏழை மக்கள் பயன்படுத்தும் ஆவின் பச்சைப் பால் விற்பனை விரைவில் ரத்தா?' - அன்புமணி கண்டனம்

post image

ஆவின் பால் நிறுவனத்தில் பச்சை நிறப் பால் பாக்கெட் விற்பனையைக் குறைத்துள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கை...

"பற்றாக்குறை, நஷ்டத்தைக் காரணம் காட்டி ஆவின் பச்சைப் பால் விற்பனையை குறைப்பதா? தடையற்ற வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும்!

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 4.50% கொழுப்புச் சத்துக் கொண்ட ஆவின் பச்சை பால் விற்பனை பெருமளவில் குறைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் லிட்டருக்கு ரூ.24 வரை கூடுதல் விலை கொடுத்து தனியார் பாலை வாங்க வேண்டியிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன.

ஆவின் பச்சைப் பால்
ஆவின் பச்சைப் பால்

ஏழை மக்கள் பயன்படுத்தும் பாலின் விற்பனையை ஆவின் நிறுவனம் குறைத்திருப்பது நியாயமற்றது ஆகும்.

சென்னையில் ஆவின் நிறுவனத்தின் சார்பில் ஒரு நாளைக்கு 14 லட்சம் லிட்டர் வரை பால் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் அதிகபட்சமாக 7.5 லட்சம் லிட்டர் பச்சைப் பால் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், தற்போது ஆவின் பச்சைப் பால் விற்பனை 3.5 லட்சம் லிட்டராக குறைக்கப்பட்டு விட்டதாகவும், அடுத்த சில நாள்களின் ஆவின் பச்சைப்பால் விற்பனையை முற்றிலுமாக ரத்து செய்ய ஆவின் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தகவல்கள் உண்மையாக இருந்தால் அது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.

ஆவின் பச்சைப் பாலின் உற்பத்திச் செலவு லிட்டருக்கு ரூ.51 ஆவதாகவும், ஆனால் சந்தையில் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுவதால் ஒரு லிட்டர் பச்சைப் பால் விற்பனையில் லிட்டருக்கு ரூ.7 வரை இழப்பு ஏற்படுவதாகவும் இதை சமாளிக்க முடியாமல் தான் பச்சைப்பால் வணிகத்தை ஆவின் நிறுவனம் குறைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இழப்பைக் காரணம் காட்டி மக்களால் அதிகம் விரும்பப்படும் பாலின் வணிகத்தைக் குறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

தமிழ்நாட்டில் மிக அதிக மானியத்தில் விற்பனை செய்யப்படும் பால் ஆவின் பச்சைப் பால் தான்.

ஆவின் நிறுவனம்
ஆவின் நிறுவனம்

இந்த வகை பாலை தனியார் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.68 வரை விற்பனை செய்யும் நிலையில், ஆவின் நிறுவனம் ரூ.44க்கு விற்பனை செய்கிறது.

இதனால் ஏற்படும் இழப்பைத் தாங்க முடியாமல் தான் பச்சைப் பால் விற்பனையை முடிவுக்கு கொண்டு வர ஆவின் நிறுவனம் முயன்று வருகிறது.

திமுக ஆட்சிக் காலத்தில் 2023-ஆம் ஆண்டு முதலே ஆவின் பச்சைப் பால் விற்பனையை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த பாலின் விற்பனை விலை 900 மி.லி. ரூ. 50 ஆகும்.

கிரீன் மேஜிக் 500 மிலி உறைகளில் ரூ.22-க்கு விற்கப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 450 மிலி உறைகளில் ரூ.25-க்கு விற்கப்பட்டது.

அப்படிப் பார்த்தால் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை லிட்டர் ரூ.55 ஆகும். இது கிரீன் மேஜிக் பாலின் விலையை விட லிட்டருக்கு ரூ.11 அதிகம் ஆகும்.

இதற்கு எதிராக பாமக குரல் கொடுத்ததால் ஆவின் நிறுவனம் அப்போது அந்த முயற்சியை கைவிட்டது.

ஆனால், இப்போது பச்சைப்பால் விற்பனையை மீண்டும் நிறுத்தத் துடிக்கிறது.

ஆவின் நிறுவனம் லாப நோக்கம் இல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு தரமான குறைவான விலையில் விற்பதற்காக தொடங்கப்பட்டது ஆகும். இந்த நோக்கத்திற்கு எதிராக தமிழக அரசு செயல்படக்கூடாது.

ஆவின் பச்சைப் பால் விற்பனையை நிறுத்தும் திட்டத்தைக் கைவிட்டு, அதன் தடையற்ற வினியோகத்தை ஆவின் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும்".

"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தே... மேலும் பார்க்க

"திமுக நம்முடன் இணைந்து செயல்படும்; பினராயி விஜயனை என்னால் கட்டிப்பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி

கடந்த திங்கட்கிழமை (ஜூன் 8), டெல்லியில் இந்தியாக் கூட்டணி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாக் கூட்டணி கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலை... மேலும் பார்க்க

கொல்லூரில் முதல்வர் விஜய்: "எந்த விசேஷ கோரிக்கையும் அம்மனிடம் வைக்கவில்லை" - கோயில் கமிட்டி தலைவர்

கர்நாடகா மாநிலம் கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அம்மன் கோயில் மிகவும் பிரபலம் ஆகும். இக்கோயிலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா பல முறை சென்று இருக்கிறார். இக்கோயிலுக்கு தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வருக... மேலும் பார்க்க

ஓபன் 'பார்' ஆக மாறிய பஸ் ஸ்டாப்; செய்தி வெளியிட்ட விகடன் - எச்சரிக்கை விடுத்து ஆக்ஷன் எடுத்த போலீஸ்

மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில் கடைவீதியிலேயே பேருந்துநிறுத்திற்கு அருகிலேயே மதுபானக்கடை கடை ஒன்று செயல்படுதையும், அதனால் மக்கள் பேருந்திற்கு மிகுந்த அச்சத்துடன் அமர்வதற்கு இடமின்றி நிறுத்ததில... மேலும் பார்க்க

"70 ஆண்டுகளில் ஒரு முறை கூட வைகை அணை தூர்வாரப்படவில்லை; 2 மாதங்களில் நடக்கும்" - நிர்மல் குமார்

மமதுரையில் இன்று வைகை நதியை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் நிர்மல் குமார். ஆய்விற்குப் பிறகு, நிர்மல் குமார் பேசியதாவது..."வைகை அணை கட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு மேலாகிறது. அணை கட்டப்பட்டதிலிருந்து இதுவ... மேலும் பார்க்க

3 ஆண்டுகள் கோமா... 47 வயதில் காலமானார் தாய்லாந்து பட்டத்து இளவரசி பஜ்ரகிதியாபா!

தாய்லாந்து நாட்டின் பட்டத்து இளவரசி பஜ்ரகிதியாபா, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகக் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர், தனது 47-வது வயதில் காலமானார் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி உலகளவில் பெரும் ... மேலும் பார்க்க