செய்திகள் :

தஞ்சாவூர்: 'மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம்? மகளிர் அணிக்கு வாட்ச் பரிசு' - புது ரூட்டில் திமுக தலைமை

post image

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக தலைமை கட்சிக்குள் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார் என்கிறார்கள். தேர்தல் தோல்விக்கான காரணத்தை அறிய கள ஆய்வு குழுவை நியமித்தார் ஸ்டாலின்.

இதில் தோல்விக்கான காரணம் என்னவென்று தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் ஆலோசித்து கள ஆய்வு அறிக்கையை அக்குழுவினர் சமர்பித்தனர்.

மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் வாக்களிக்கவில்லை, விஜய் அலையைக் கவனிக்கத் தவறியது உள்ளிட்டவை தோல்விக்கான காரணங்களாகச் சொல்லப்பட்டுள்ளது என்கிறார்கள்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

இதே போல் கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலும் தோல்விக்கான காரணிகளில் ஒன்று. கள ஆய்வின் போதே இது பல தொகுதிகளில் வெடித்தது குறிப்பிடத்தக்கது. திமுக-வின் கோட்டைகளாக அறியப்பட்ட தஞ்சாவூர், கும்பகோணம் தொகுதிகளில் தோற்றதற்கு கோஷ்டி பூசல், உள்ளடி வேலை போன்றவை காரணம் என்று திமுக விசுவாசிகள் கூறி வருகின்றனர்.

தோல்வியால் துவண்டிருந்த திமுக-வினரை தலைமை எடுத்து வரும் முன்னெடுப்புகள் உற்சாகத்தைக் கொடுத்துள்ளன. அதிமுக-வில் பல மாவட்டங்களில் இருப்பது போல் இரண்டு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை நியமனம் செய்வதற்கான முயற்சியில் இருக்கிறார் ஸ்டாலின் என திமுக-வினரால் பரவலாகப் பேசப்படுகிறது.

திமுக-வில் கட்சி ரீதியாக தற்போது சுமார் 70 மாவட்டங்கள் உள்ள நிலையில் நூறுக்கு மேல் உயர்த்துவதற்கு ஸ்டாலின் முடிவெடுத்துள்ளார். இதில் வைத்திலிங்கத்திற்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைப்பதற்கு வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது.

இது குறித்து விபரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், ''திமுக எப்போதும் தோல்வியைக் கண்டு அஞ்சியதில்லை. அந்த வகையில் தற்போதைய தேர்தல் தோல்விகள் கொடுத்த பாடத்தை உரமாக்கி அடுத்த பாய்ச்சலுக்கு கட்சியினரைத் தயார் படுத்தி வருகிறார் தலைவர் ஸ்டாலின்.

கட்சியில் இளைஞர்கள், மகளிருக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளார்கள்.

முரசொலி
முரசொலி

மாவட்ட, ஒன்றிய அளவிலான மகளிர் அணி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் 3,000 மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் ஸ்டாலின், கனிமொழி இருவரும் பேசியுள்ளனர். இதில் கலந்து கொண்ட மகளிர் அணி நிர்வாகி ஒவ்வொருவருக்கும் வாட்ச் பரிசளித்துள்ளது தலைமை.

இதைவிட தங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தில் மெய்சிலிர்த்துள்ளனர் மகளிர் அணியினர். அடுத்த கட்டமாக கட்சிப் பணிகளில் சோர்வாக உள்ள நிர்வாகிகள், ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பவர்கள், கட்சியால் ஆதாயம் அடைத்தும் கட்சி வளர்சிக்காக செலவு செய்யாதவர்கள் மீது சாட்டையைச் சுழற்ற தயாராகி விட்டார் ஸ்டாலின்.

இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்பதை இப்போதைக்கு தலைமை அஸ்திரமாக எடுத்துள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற எளிதாத ஜெயிக்க கூடிய தொகுதிகளில் கோட்டை விட்டதற்கான காரணத்தை முன் வைத்து தலைமை இங்கு சில மாற்றங்களை நிகழ்த்த முடிவெடுத்துள்ளது.

தேர்தலுக்கு முன்பு திமுகவில் இணைந்த வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். அதிமுகவில் சோழமண்டல தளபதியாக வலம் வந்த வைத்திலிங்கத்திற்கு தஞ்சாவூர், ஒரத்தநாடு தொகுதிகளை உள்ளடக்கி மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.

துரை.சந்திரசேகரன், முரசொலி
துரை.சந்திரசேகரன், முரசொலி

தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளை உள்ளடக்கியது தற்போது மத்திய மாவட்டமாக உள்ளது. இதன் மாவட்ட செயலாளராக சீனியரான எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன் இருக்கிறார். இவர் மீது தலைமை அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

கட்சிக்கும், கட்சியினருக்கும் பெரிதாக செலவு செய்ய மாட்டார் என்கிற கருத்து இவர் மீது நிலவுவது குறிப்பிடத்தக்கது. சண்.இராமநாதனுக்கு எதிரான உள்ளடி வேலைகள் தெரிந்தும் தலைமைக்குக் கவனப்படுத்தவில்லை எனத் தலைமை கருதுகிறது. கட்சிக்கு விசுவாசமாக இருப்பது இவருக்கான இருப்பைத் தக்க வைக்கும் என்கிறார்கள். இவருடைய ஆதரவாளராக வலம் வரும் தஞ்சாவூர் எம்.பி முரசொலி ஆக்டீவாக இருக்கிறார். மாவட்டச் செயலாளர் பட்டியலில் இவரது பெயரும் அடிபடுகிறது.

அதிருப்தியில் இருக்கும் அதிமுக-வைச் சேர்ந்தவர்களை திமுக-வுக்கு வலை வீசி வருகிறாராம் முரசொலி. 'தலைமை தனக்கு முக்கியத்துவம் அளிக்க உள்ளது. நீங்கள் வாருங்கள். நான் உங்களைப் பார்த்துகொள்கிறேன்' என்கிறாராம். முன்பை விட சுறுசுறுப்பாக இருக்கும் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதி மக்களுக்கு நன்றி கூறும் போது, விஜய் தலைமையிலான ஆட்சி ஒரு மாயை. விரைவில் இந்த மாயை மறைந்து சூரியன் உதிக்கும் திமுக ஆட்சி அமையும் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றாராம்.

சண்.இராமநாதன்

களத்தில் வேலை செய்வதில் வைத்திலிங்கம் கில்லி. திருவையாறு, பாபநாசம் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளராக முரசொலியை நியமித்து விட்டு, மாவட்டத்தின் தலைநகரான தஞ்சாவூர், ஒரத்தநாடு மாவட்டச் செயலாளராக வைத்தியை அமர்த்தவும் முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

முரசொலியும் தலைநகரை மையமாக வைத்து அரசியல் செய்யவே விரும்புகிரார். இதில் எது நடக்கும் என்று தெரியவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கிறோம், ஆளும் கட்சிக்கு எதிரானவற்றில் அழுத்தமாகவும், கட்சிப் பணிகளில் ஆக்டீவாகவும் பசைக்கு தலைமையை எதிர்பார்க்காமல் இருப்பவர்களே மாவட்டச் செயலாளர் பதவியில் நியமிக்கபடுவார்கள் எனப் பேசப்படுவதாகத் தெரிவித்தனர். மற்றும் சிலரோ, இடைத்தேர்தலுக்குப் பிறகே இது போன்ற மாற்றங்கள் நிகழும்'' என்கின்றனர்.

"பாஜக - அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்" - தமாகா தலைவர் ஜி.கே. வாசன் சொல்லும் காரணம் என்ன?

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்திருக்கிறார்.சென்னை எழும்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

"அண்ணாமலை வருகை நல்லது; தவெகவினர் அம்புகுறிகள்; விரைவில் நான்..." - ராகவா லாரன்ஸ் பேசியது என்ன?

"நான் அரசியலுக்கு வரணுமா ? வேண்டாமா ? என்பதை மக்களே முடிவு செய்யட்டும். மக்கள் வருமாறு சொன்னால் நான் அரசியலுக்கு வருகிறேன். விரைவில் உங்கள் முடிவை சொல்லுங்கள். நான் ஆவலாகக் காத்துகொண்டு இருக்கின்றேன்"... மேலும் பார்க்க

முதல்வர் பாணியில் ஆபீஸில் மதிய சாப்பாடு; பவானிசாகர் எம்எல்ஏ ரீல்ஸ்! எதிர்க்கட்சியினர் சொல்வதென்ன?

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதியின் த.வெ.க வேட்பாளராகப் போட்டியிட்டவர் தமிழ்ச்செல்வி. தனக்கு எதிராக களத்தில் நின்ற தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர், அ.தி.மு.க வேட்பாளர் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: கடன்கள், ஏறும் டீசல் விலை... 60 நாட்களுக்குப் பிறகு பாயக் காத்திருக்கும் படகுகள்

"ஆழ்கடல் மீன்பிடி தடைக்காலம் முடிஞ்சாச்சு. இனி எப்படியாவது கடலுக்குப் போய் நம்ம வண்டியை ஓட்டணும். ஆனா, முன்ன மாதிரி இப்ப நிம்மதியா தொழில் பண்ண முடியலை" என்று பெருமூச்சுடன் கூறுகிறார் புதுக்கோட்டை மாவட... மேலும் பார்க்க

"தன் மகனை அரசியலுக்குள் கொண்டுவர எடப்பாடி பழனிசாமி டிராமா செய்கிறார்" - சி.வி.சண்முகம் தாக்கு

அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் இன்று (ஜூன்.14) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். ''அதிமுகவின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். நடந்து முடிந்த... மேலும் பார்க்க

சபரிமலை தங்கக் கொள்ளை: குற்றம்சாட்டப்பட்ட நிறுவனத்தின் வக்கீல் அரசு வழக்கறிஞரா? எதிர்ப்பால் ராஜிநாமா

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிலையில் 2019-ம் ஆண்டு தங்க முலாம் பூசியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தடினமாக இருந்த தங்கப் பூச்ச... மேலும் பார்க்க