கோயிலில் வைத்து மருத்துவம்; பூட்டி கிடக்கும் சுகாதார நிலையம் - அலட்சியத்தில் கூத...
Love Oh Love: "செல்வா சார் வீட்டுல பாசமாதானே இருப்பாரு எதுக்கு பயப்படுறாஙகனு நினைச்சேன்!" - பவிஷ்
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷின் சகோதரி மகனான பவிஷ் நாயகனாக 'லவ் ஓ லவ்' என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியானது. படத்தின் டீசர் வெளியீட்டு விழாவும் நேற்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய பவிஷ், "நான் என்னோட முதல் நன்றியே என்னோட அம்மாவுக்குத்தான் சொல்லணும். இந்த படத்துக்காக என் அம்மா எனக்கு ரொம்ப துணையாக இருந்திருக்காங்க.
என்னோட ஸ்ட்ரெஸ் எல்லாம் புரிஞ்சுகிட்டு எனக்கு சப்போர்ட் பண்ணினதுக்கு அம்மாவுக்கு முதல் நன்றி. பிறகு, எப்போதுமே என்னோட குருவாக இருக்கிற தனுஷ் சாருக்கு இந்த மேடையில மட்டும் இல்ல நான் ஏறப்போகும் எல்லா மேடையிலும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன். இந்த கதையை எனக்கு எடுத்துட்டு வந்தது இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தினேஷ் சார்தான்.
இந்த படத்தின் இயக்குனரான மகேஷ் ராஜேந்திரன் ரொம்ப உழைப்பு போட்டிருக்காரு. அவருக்கு ஈடு செய்யற மாதிரி இந்த படத்தோட கேமராமேனும் அவருக்கு இணையான உழைப்பைக் கொடுத்திருக்கார். மகேஷ் சாரும் கேமராமேனும் எந்த நேரத்திலயும் முழு எனர்ஜியோடு இருப்பாங்க.
இந்த விழாவுல எல்லாரும் என்ன பத்தி பெருமையா பேசினாங்க. இதுக்கெல்லாம் நான் உகந்தவனாங்கிறது எனக்கு தெரியல. ஆனா, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த படத்தோட கதாநாயகியான நாகதுர்காவுக்கு முதல் படமா இருந்தாலும் ரொம்ப ஒத்துழைப்பு கொடுத்தாங்க.
அவங்க நடிப்பு ரொம்ப இயல்பா இருந்தது. நடிகை வனிதா மேம் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த அன்னைக்குத்தான் செல்வராகவன் சாரும் வந்தாரு. அந்த ஸ்ட்ரெஸ்ல இருந்த என்னோட சூழ்நிலையை ரொம்ப இயல்பானதா மாத்தினாங்க.

அதோடு அவங்க கூட எனக்கு காம்பினேஷன் நடிக்க இருந்த மூணு நாள் ஷூட்டிங்கையும், கம்ஃபர்ட்டபுளா மாத்திட்டாங்க. இந்த படத்துல ரெண்டு லெஜெண்டரி இயக்குநர்களோட பயணம் செய்திருக்கிறது எனக்கு மிகவும் மகிழ்ச்சியா இருக்கு.
முதல்ல, கே.எஸ். ரவிக்குமார் சார். இவர்கிட்ட கத்துக்கிட்ட பல விஷயங்கள் இந்த படத்தில் மட்டுமில்ல இனி வர என்னுடைய எல்லா படங்களிலும் நான் கண்டிப்பா பயன்படுத்துவேன்.
பொதுவாக கலகலன்னு இருக்கும் படப்பிடிப்பு தளம், செல்வராகவன் சார் வந்ததும் ரொம்ப அமைதியா மாறிடுச்சு. செல்வா சார் வீட்டுல ரொம்ப பாசமாக இருப்பாரு எதுக்கு எல்லோரும் அவரை பார்த்து பயப்படுறாங்கனு நினைச்சேன்.
அவரை முதல் முறையாக போலீஸ் காஸ்டியூம்ல பார்த்ததும் நானும் பயந்துட்டேன். ஷாட்லையே அவர் என்னை அடிக்கிற மாதிரி சீன் இருந்தது. அவர்கிட்ட இருந்தும் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன்." என்றார்.
















