செய்திகள் :

`உங்களுக்கு வேண்டாம் என்று தோன்றினால்.!' - `கருப்பு' படத்தில் காட்சிகள் நீக்கப்பட்டது குறித்து ஆர்யா

post image

தமிழ் - மலையாளம் பைலிங்குவல் திரைப்படமாக, ஆர்யா நடிப்பில் உருவாகியிருக்கிறது 'அனந்தன் காடு' திரைப்படம்.

இந்தப் படம் ஜூன் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கடைசியாக ஆர்யா நடிப்பில் 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம் வெளியாகியிருந்தது.

இதனைத் தாண்டி, சூர்யாவின் 'கருப்பு' படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்திலும் ஆர்யா நடித்திருந்தார்.

Ananthan Kaadu
Ananthan Kaadu

ஆனால், அக்காட்சிகள் படத்திற்குப் பொருந்தாததால் அவை படத்திலிருந்து நீக்கப்பட்டன.

'அனந்தன் காடு' படத்தின் புரொமோஷன் நிகழ்வு நேற்று கேரளாவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 'கருப்பு' படத்தில் கேமியோ செய்தது தொடர்பாக ஆர்யா பேசியிருக்கிறார்.

அவர், "'கருப்பு' படத்தில் ஒரு சிறிய பகுதியில் நடித்திருந்தேன். ஆனால் ஃபைனல் எடிட்டிங் செய்யும்போது, அது சரியாகப் படத்திற்குப் பொருந்தவில்லை. அதனால்தான் அது நீக்கப்பட்டது.

ஆனால், அதை நீக்குவதற்கு முன்பே இயக்குநர் பாலாஜி எனக்குப் போன் செய்து இதைப் பற்றிப் பேசினார். 'இதை நாம் வைக்க வேண்டாம். அடுத்த முறை வேறு வகையில் நாம் முயற்சித்துப்பார்க்கலாம்' என்றார்.

Karuppu Movie - Arya Cameo
Karuppu Movie - Arya Cameo

அந்தப் படத்தில் நாங்கள் ஒரு சிறிய எக்ஸ்பெரிமெண்டல் விஷயத்தைச் செய்திருந்தோம். எனவே, ஒரு முழுப் படமாகப் பார்க்கும்போது அது அந்தளவுக்குச் சரியாக வரவில்லை என்று அவர் கூறினார்.

அதற்கு நான், 'சரி, பரவாயில்லை. உங்களுக்கு அது வேண்டாம் என்று தோன்றினால் எனக்கொன்றும் பிரச்சினையில்லை' என்று சொன்னேன். அவ்வளவுதான்." எனக் கூறியிருக்கிறார்.

Love Oh Love: "பவிஷூடைய குரல் சில சமயங்களில் தனுஷ் குரல் மாதிரியே இருக்கும்" - கே.எஸ். ரவிக்குமார்

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷின் சகோதரி மகனான பவிஷ் நாயகனாக 'லவ் ஓ லவ்' என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியானது. படத்தி... மேலும் பார்க்க

Love Oh Love: "செல்வா சார் வீட்டுல பாசமாதானே இருப்பாரு எதுக்கு பயப்படுறாஙகனு நினைச்சேன்!" - பவிஷ்

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திற்குப் பிறகு நடிகர் தனுஷின் சகோதரி மகனான பவிஷ் நாயகனாக 'லவ் ஓ லவ்' என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியானது. படத்தி... மேலும் பார்க்க

"முடிவில்லாத ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருந்தேன்; ஆனால் இப்போது..." - நடிகை சமந்தா உருக்கம்

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா நடிப்பில், நந்தினி ரெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மா இண்டி பங்காரம்' திரைப்படம் ஜூன் 19 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை ராஜ் ந... மேலும் பார்க்க

`அதே அரவணைப்பு, எளிமை...' - முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சிம்ரன் நெகிழ்ச்சி

தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்-யை, பிரபல நடிகை சிம்ரன் தனது குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நடிகர் விஜய்யுடன் இணைந்து பல திரைப்படங்களில் கதா... மேலும் பார்க்க

சாருகேசி விமர்சனம்: ஒய்.ஜி நாடகத்தைப் படமாக அரங்கேற்றியிருக்கும் சுரேஷ் கிருஷ்ணா! கவனம் பெறுகிறதா?

பிரபலமான கர்னாடிக் சங்கீத வித்வானாக இருக்கும் சாருகேசி (ஒய்.ஜி. மகேந்திரன்) தனது மனைவி, மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார். தந்தையின் புகழ் தன்னுடைய தனித்துவத்தை மறைப்பதாக எண்ணும் சாருகேசியின் மகன் ... மேலும் பார்க்க

`எங்க வீட்டுல சோலார் செட்அப் இல்ல; பவர் கட் தொடர்பா நான் பேசினது தற்குறித்தனமா?'- மாஸ்டர் மகேந்திரன்

தமிழகம் கடந்த சில தினங்களாகச் சந்தித்து வரும் பவர்கட் பிரச்னை தொடர்பாக நடிகர் மாஸ்டர் மகேந்திரன் பேசிய சில வார்த்தைகள் சர்ச்சைக்குள்ளாக, சமூக ஊடகங்களில் பலரும் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.... மேலும் பார்க்க