டாடா டியாகோவின் 10 ஆண்டுக்கால பயணம்: அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் டாடா மோட்டர்...
பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை; மும்பையில் அதிர்ச்சி!
இந்தி சின்னத்திரையில் குங்கும் பாக்யா மற்றும் வாக்லே கி துனியா போன்ற டிவி தொடர்கள் மூலம் பிரபலம் அடைந்தவர், நடிகை சஞ்சிதா உகாலே (30). இவர் மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள நாலாசோபாராவில் வசித்து வந்தார். அவருடன் அவரது பெற்றோர் மற்றும் சகோதரியும் வசித்து வந்தனர். அவரது பெற்றோர் மற்றும் சகோதரி வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தபோது சஞ்சிதாவின் படுக்கை அறை உள்பக்கமாக அடைக்கப்பட்டு இருந்தது. கதவைத் தட்டிய பிறகும் திறக்கப்படவில்லை.
இதனால் பக்கத்து வீட்டுக்காரர்கள் துணையோடு கதவை திறந்து பார்த்தபோது, உள்ளே சஞ்சிதா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதனையில் அவர் உயிர் பிரிந்தது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சஞ்சிதாவின் அறையைச் சோதித்துப் பார்த்தபோது, எந்த விதக் கடிதமும் சிக்கவில்லை. என்ன காரணத்திற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றன்றர்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தையை நாள்தான் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு ரீல்ஸ் காணொலி வெளியிட்டு இருந்தார். சஞ்சிதாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சஞ்சிதா தொலைக்காட்சி தவிர படங்களிலும் நடித்துள்ளார். அவர் விக்கி கௌஷல் நடித்த சாவாவில் தாராபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதோடு தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே நிகழ்ச்சியில் சுகூன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சஞ்சிதாவின் மரணம் அவரது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு சஞ்சிதா இளைய சமுதாயத்தினர் தற்கொலை செய்து கொள்வது குறித்து வருத்தம் தெரிவித்து இருந்தார். ஆனால் இப்போது அவரே அந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.





















