திருவாரூர்: டேங்கில் இருந்து உப்பு கலந்து வரும் குடிநீர்; உயிரிழப்பு ஏற்படுவதாக ...
"இந்த டிசம்பரோடு நடிப்பதை நிறுத்தி விடலாமா என யோசிக்கிறேன்" - மிஷ்கின் சொல்லும் காரணம் என்ன?
பிரவீன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படம் நாளை (நவ. 20) வெளியாகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மிஷ்கின், "நடிகர்களை அவர்கள் போக்கில் நடிக்க விடுவதே எனக்கு வசதியாக இருக்கிறது. நடிகர்களுக்குச் சுதந்திரம் கொடுக்க வேண்டும்.

எனக்கு அப்படி ஒரு சுதந்திரம் இந்தப் படத்தில் கிடைத்தது. நடிகனாக இருப்பது கவலையாக இருக்கிறது. நேர மேலாண்மை செய்வதற்குக் கடினமாக இருக்கிறது. இந்த டிசம்பரோடு நடிப்பதை நிறுத்தி விடலாமா? என யோசிக்கிறேன்.
நடிகர்களைப் பாராட்ட வேண்டும். எனது மகள் போலவே கீர்த்தி சுரேஷ் இருக்கிறார். 'டோரதி' படம் வெளிவந்த போது நான் வெளிநாட்டில் இருந்தேன். விமர்சனங்கள் கடுமையாக வந்த போது அன்று இரவு படம் பார்த்தேன். கீர்த்தி சுரேஷ் நடித்து நான் பார்த்த முதல் படம் 'டோரதி'.

உலக சினிமாவின் ஐகானிக்காக 'டோரதி' படத்தைப் பார்க்கிறேன். ஆண் பெண்ணாக மாறும் பொழுது அவள் கொடுத்த அந்தக் கருணை முக்கியமானது. அந்தப் படத்தில் நடித்ததற்கு நன்றி" என்று கூறிய மிஷ்கின், கீர்த்தி சுரேஷிற்கு மோதிரத்தைப் பரிசாக வழங்கினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...



















