செய்திகள் :

'இனி ரஷ்யா, ஈரான் எண்ணெய் வாங்கக் கூடாது' - Expiry ஆகும் அமெரிக்காவின் 'அனுமதி'

post image

ஈரான் போர், ஹார்முஸ் ஜலசந்தி மூடல் காரணமாக, அமெரிக்கா தற்காலிகமாக ரஷ்ய எண்ணெய் வாங்க இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு 'அனுமதி' கொடுத்திருந்தது.

அதேபோல, இறக்குமதிக்காக ஏற்கெனவே கப்பல்களில் இருக்கும் ஈரான் எண்ணெயையும் வாங்கிக் கொள்ளலாம் என்றும் சொல்லியிருந்தது அமெரிக்கா.

'அனுமதி' என்றால் என்ன?

ஒரு நாட்டில் இருந்து பொருள் வாங்க எந்தவொரு நாட்டிற்கும் அனுமதி தேவையில்லை தான். இங்கே அனுமதி என்று குறிப்பிடப்படுவது - ரஷ்யா மற்றும் ஈரான் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்து வந்தது அமெரிக்கா.

போர் நேரத்தில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அதை சமாளிக்க, ரஷ்யா மற்றும் ஈரான் எண்ணெயை வாங்கினால், அமெரிக்கா வரியோ அல்லது தடையோ விதிக்காது என்பது தான் மேலே சொல்லியிருக்கும் 'அனுமதி'க்கான பொருள்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்
இந்த அனுமதி தொடருமா என்பது குறித்து அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளதாவது...

"ரஷ்யா மற்றும் ஈரான் எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி மீண்டும் கொடுக்கப்படாது. கடந்த மார்ச் 11-க்கு முன், கப்பலில் ஏற்றப்பட்ட ரஷ்யா எண்ணெய்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.

அந்த அத்தனை எண்ணெயும் இப்போது வர்த்தகமாகிவிட்டது. அதனால், இனி இந்த அனுமதி புதுப்பிக்கப்படாது" என்று கூறியிருக்கிறார்.

ரஷ்ய எண்ணெயைப் பொறுத்த வரை மார்ச் 12-க்கு முன், கப்பலில் ஏற்றப்பட்ட எண்ணெய்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இந்த அனுமதி ஏப்ரல் 11-யோடு முடிந்துவிட்டது.

மார்ச் 20-க்கு முன் ஏற்றப்பட்ட ஈரான் எண்ணெய்க்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அது வரும் 19-ம் தேதியோடு முடிவடைகிறது.

அதாவது அந்தத் தேதிக்குள் ரஷ்யா மற்றும் ஈரான் எண்ணெயை வாங்கிக் கொள்ளலாம். அதன் பின், அனுமதி கிடையாது.

நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்; தொகுதி மறுவரையறைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (ஏப்ரல். 16) கூடியிருக்கிறது. தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான அரசமைப்பு திருத்த மசோதாக்களை நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் மத்திய அ... மேலும் பார்க்க

'தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்' - தொகுதி மறுவரையறையை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின் போராட்டம்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார். அந்தப் போராட்டம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..."#Delimitation: தமிழ்நாடெங்க... மேலும் பார்க்க