செய்திகள் :

`இன்டர்னல் மார்க்கில் கைவைப்பேன்!' - மாணவிக்குப் பாலியல் தொல்லை; மருத்துவக் கல்லூரி அலுவலர் தலைமறைவு

post image

தென்மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், சென்னை புறநகர் பகுதியில் உள்ள பல் மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்து முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில்தான் மாணவிக்கு கல்லூரி நிர்வாகத்தில் முக்கிய பதவியிலிருக்கும் ராமமூர்த்தி என்பவர் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக மாணவி தரப்பில் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்ததன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து மாணவி தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ``கடந்த 2024-ம் ஆண்டு நடந்த மருத்துவ கலந்தாய்வில் இந்தக் கல்லூரியில் பல் மருத்துவத்தை மாணவி தேர்வு செய்தார். விடுதியில் தங்கியிருந்து படித்து வரும் மாணவிக்கு கல்வி உதவி தொகை வழங்குவதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மாணவி, தனக்கு எந்த உதவியும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் 18.12.2025-ம் தேதி இரவு விடுதியின் வார்டன் ஜான்சி என்பவர் கல்லூரியின் நிர்வாக அலுவலர் ராமமூர்த்தியை சந்திக்கும்படி மாணவியின் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அதன்படி 19-ம் தேதி காலையில் மாணவியும், நிர்வாக அலுவலர் ராமமூர்த்தியை சந்தித்து பேசியிருக்கிறார்.

டார்ச்சர்

அப்போது, கல்லூரியில் சிசிடிவி இல்லாத பகுதிக்கு மாணவியை அழைத்துச் சென்ற ராமமூர்த்தி, மாணவியின் வயதைக் கேட்டிருக்கிறார். பின்னர் மாணவியை ஆபாசமாக பார்த்ததோடு தன்னுடன் ரிலேசன்ஷிப்பில் இருந்தால் பெர்சனலாக உதவி செய்வதாக மாணவியிடம் கூறியிருக்கிறார். அதைக்கேட்டு மாணவி அதிர்ச்சியடைந்ததோடு அதற்கு மறுப்பும் தெரிவித்திருக்கிறார். உடனே `உன்னுடைய மதிப்பெண்ணை (internal mark) குறைத்துவிடுவேன்' என்று ராமமூர்த்தி மிரட்டியிருக்கிறார். இதையடுத்து ராமமூர்த்தி பேசியதை எங்களிடம் மாணவி தெரிவித்தார். உடனே கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தோம். உடனே மாணவியின் செல்போனை வாங்கிய வார்டன் ஜான்சி, தான் அனுப்பிய மெசேஜ்களை அழித்திருக்கிறார். அதோடு வெள்ளைத் தாளில் கையெழுத்தும் வாங்கியிருக்கிறார். இந்தத் தகவலை மாணவி, தன்னுடைய குடும்பத்தினரிடம் கூற, அவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருக்கிறார்கள். அங்கு எந்தவித பதிலும் சொல்லாததால் குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறோம்" என்றனர்.

இது குறித்து குன்றத்தூர் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``மாணவி கூறிய தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். மாணவி குற்றம்சாட்டும் வார்டன் ஜான்சி, நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களிடம் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

ஒரே லிங்க்.. ஒட்டு மொத்தமாக கொள்ளை; கோவை முதியவரை பதறவிட்ட குஜராத் சைபர் கொள்ளையர்கள்!

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் சந்திர போஸ் (71). அவரின் செல்போன் எண்ணிற்கு 2 மாதங்களுக்கு முன்பு ஆர்.டி.ஓ அலுவலகம் என்கிற பெயரில் ஒரு லிங்க் வந்துள்ளது.சைபர் கொள்ளைஅந்த லிங்கை திறந... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் கைதான காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கு DNA பரிசோதனை; கனடாவில் இருந்து திரும்பும் இளம்பெண்!

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த ராகுல் மாங்கூட்டத்தில் பாலக்காடு தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னா... மேலும் பார்க்க

சென்னை: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ரௌடி கொலை - அதிகாலையில் வந்த `ஹெல்மெட்' மர்ம நபர்கள் யார்?

சென்னை கொளத்தூர், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதி என்கிற ஆதிகேசவன் (23). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் ராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாள... மேலும் பார்க்க

தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 15 வயது சிறுமி; தாத்தா,தாய் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்கு பதிவு!

திருச்சி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல் காந்தி, குழந்தைகள் நலக் குழு தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்தார். அப்போதுதான், 15 வயது சிறுமிக்கு அவரது உறவினர்களே பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந... மேலும் பார்க்க

காதல் கணவனை கைவிட்டுவிட்டு வேறொருவருடன் திருமணம் - பழிவாங்க பெண் ஆட்டோ டிரைவரை சுட்டுக்கொன்ற காதலன்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி என்ற இடத்தில் அனிதா செளதரி என்ற பெண் கடந்த 4ம் தேதி இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவராக கருதப்பட்ட அனிதா இரவில் ஆட்டோ ஓட்டிச்சென்று கொண்... மேலும் பார்க்க

சென்னை: பிரபல மருத்துவக் கல்லூரியின் பெயரைச் சொல்லி ரூ.11 லட்சம் மோசடி; இன்ஜினீயர் சிக்கியது எப்படி?

சென்னை, பாலவாக்கம், கரீம் நகரைச் சேர்ந்தவர் உமா (50). இவரின் மகள், உயர்கல்வி படிக்க சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் விண்ணப்பித்திருந்தார். அப்போது உமாவுக்குத் தெரிந்த குடும்ப ... மேலும் பார்க்க