செய்திகள் :

`இன்றுடன் உண்ணாவிரதத்தை முடிக்கிறாரா சோனம் வாங்சுக்?' - அவர் கூறும் 3 நிபந்தனைகள் என்ன?

post image

இந்தியச் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் உண்ணாவிராதப் போராட்டத்தை தொடங்கி இன்றோடு 22 நாள்கள் ஆகின்றன.

அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், நேற்று முன்தினம் (ஜூலை 18, 2026), டெல்லி அரசு மருத்துவமனை ஆன சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை சோனம் வாங்சுக்கும், அவரது மனைவி கீதாஞ்சலியும் 'சட்டவிரோதக் காவல்' என்று குறிப்பிடுகிறார்கள்.

நீட், க்யூட் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று தான் சோனம் வாங்சுக் இந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

சோனம் வாங்சுக்
சோனம் வாங்சுக்

தான் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என்பதை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் சோனம் வாங்சுக். அவை...

``நான் எப்போது உண்ணாவிரதத்தை முடிப்பேன்..!

எனது உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், 'சன்சத் சலோ' (நாடாளுமன்றம் நோக்கிச் செல்வோம்) மார்ச் பேரணி முடியும் வரை எனது உண்ணாவிரதம் தொடரும். பின்வரும் சூழ்நிலைகளில் மட்டுமே அது கைவிடப்படும்…

அன்பான நண்பர்களே, ஆதரவாளர்களே,

உங்களில் பலர் நான் எப்போது உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்று கேட்டுள்ளீர்கள். ஏற்கனவே ஆதரவாளர்களிடம் குறிப்பிட்டது போல, வரும் ஜூலை 20 அன்று நான் எனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வேன்... ஆனால், அதற்கு இந்த நிபந்தனைகள் நிறைவேற வேண்டும்.

> சமீபகாலமாக கல்வி முறையில் ஏற்பட்டுள்ள தோல்விகள்—வினாத்தாள் கசிவு போன்றவற்றுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.

சோனம் வாங்சுக்
சோனம் வாங்சுக்

> நானும் சி.ஜே.பி அமைப்பின் தலைவர்களும் நாடாளுமன்றத்தின் வாசலைச் சென்றடையும் போது, அங்குள்ள மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இந்த விவகாரத்தை இப்போது நாடாளுமன்றத்தில் கையில் எடுப்போம் என்று எங்களிடம் உறுதியளிக்க வேண்டும்.

> ஒருவேளை எனது உடல்நிலை அல்லது இதர காரணங்கள் இதற்கு இடம் தராவிட்டால், மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நான் இருக்கும் இந்த மருத்துவமனைக்கு நேரில் வந்து மேற்கண்ட உறுதிமொழியை வழங்க வேண்டும்."

எனக் குறிப்பிட்டுள்ளார்.

``முதல்வர் விஜய் எனக்கு ப்ராமிஸ் செய்திருக்கிறார்; அந்நாளுக்காக காத்திருக்கிறோம்!" - நடிகர் பிரபு

'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமான நடிகர் திலகத்தின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மண... மேலும் பார்க்க

'எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு சபாநாயகரின் அனுமதி தேவையில்லை'-விதிகளை விளக்கிய ஜே.சி.டி. பிரபாகர்

விளாத்திகுளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின் முன் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெளிவுபடுத்திய... மேலும் பார்க்க

உக்ரைன் மீதான தாக்குதலில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு - பெயரை குறிப்பிடாமல் ரஷ்யாவுக்கு இந்தியா கண்டனம்

ரஷ்யா - உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய வெளியுறவு அமைச்சக... மேலும் பார்க்க

பழநி கோயில் நில மோசடி: `அமைச்சர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதில் உடன்பாடில்லை' - பெ.சண்முகம்

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் இன்று (ஜூலை. 21) செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாகக் கேள்வி எழ... மேலும் பார்க்க

'அமைச்சருக்கும் எங்களுக்கு தொடர்பில்லை' - அறக்கட்டளை நிர்​வாகி முரு​க​தாஸின் மனைவி லீலா பேட்டி

பழநி​யில் உள்ள மடத்​துக்குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள நிலத்​தை, முறை​கே​டாக தனிநபர்​களுக்கு பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​டது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட பதிவாளர் சசிகலா, சார்பதிவாளர் ஜஸ்... மேலும் பார்க்க

`சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இதே நாளில்தான்.!' - ஜெகதீப் தன்கர் ராஜினாமா குறித்து ஜெயராம் ரமேஷ்

முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்து ஓராண்டு ஆகிறது என்பதை நினைவுகூர்ந்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ். இது குறித்து அவர் வெளியிட்டு... மேலும் பார்க்க