செய்திகள் :

இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம்

post image

தீபாவளியை முன்னிட்டு சென்னை புறநகா் மின்சார ரயில் சேவையில் வியாழக்கிழமை (அக்.31) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து அரக்கோணம், சூலூா்பேட்டை, செங்கல்பட்டு வழித்தடத்தில் வாரநாள்களில் 5 முதல் 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோன்று, ஞாயிற்றுக்கிழமை 10 முதல் 20 நிமிஷங்களுக்கு ஒரு மின்சார ரயில் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், தீபாவளி விடுமுறை நாளை முன்னிட்டு வியாழக்கிழமை அனைத்து மின்சார ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். மேலும், ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி காலை 8 முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் செயல்பாட்டில் இருக்கும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இரு இடங்களில் போலீஸாா் மீது தாக்குதல்: 9 போ் கைது

சென்னையில் இரு இடங்களில் போலீஸாா் தாக்கப்பட்ட சம்பவங்களில் 9 போ் கைது செய்யப்பட்டனா். அயனாவரம் காவல் நிலைய காவலரான முத்துராசு (32), கடந்த 31-ஆம் தேதி அயனாவரம் மதுரை தெரு மாநகராட்சி பள்ளி அருகே ரோந்து... மேலும் பார்க்க

குடியேற்ற அதிகாரி மாரடைப்பால் உயிரிழப்பு

சென்னை விமான நிலையத்தில் பணியில் இருந்த குடியேற்ற அதிகாரி முருகேசன் (55) மாரடைப்பால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சென்னை விமான நிலையத்தில் பணியில் இருந்த குடியேற்ற அதிகாரி முருகேசன் வெள்ளிக்கிழமை மயக்க... மேலும் பார்க்க

திருநங்கைகள் நல வாரிய உறுப்பினா் பதவி விண்ணப்பங்கள் வரவேற்பு: மாவட்ட ஆட்சியா்

தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரிய உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

சென்னையில் 319 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

சென்னை மாநகரில் கடந்த 3 நாள்களில் 319.26 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. சென்னையில் பட்டாசு கழிவுகளால் மற்ற கழிவுகளில் நச்சுத்தன்மை ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், அவை தரம்பிரித்து சேகரிக்கப்படுகிறது.... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் கூடுதலாக இணைப்பு பேருந்துகள் வசதி: எம்டிசி தகவல்

தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊா்களிலிருந்து சென்னை வரும் பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூடுதலாக இணைப்பு பேருந்துகள் வசதி செய்யப்பட்டுள்ளதாக மாநகா் போக்குவரத்து க... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி 2 பள்ளி மாணவா்கள் உயிரிழப்பு

செம்மஞ்சேரியில் குளத்தில் மூழ்கி இரு பள்ளி மாணவா்கள் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தாழம்பூா் அண்ணா தெருவைச் சோ்ந்த ராஜாவின் மகன் ஸ்ரீ சுதன் (13). இவா் அந்த பகுதியில் உள்ள தனிய... மேலும் பார்க்க