செய்திகள் :

இன்ஸ்டாகிராமில் 'Unfollow'... மும்பை அணிக்கு துரோகமா? - ஹர்திக் மீது பாய்ந்த முன்னாள் வீரர்கள்!

post image

ஐபிஎல் 2026 தொடரில் ப்ளேஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. இந்தச் சோகம் ஒருபுறம் இருக்க, அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சமூக வலைதளத்தில் செய்ததாகக் கூறப்படும் ஒரு செயல், இப்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. காயம் காரணமாக கடைசி இரண்டு போட்டிகளில் ஆடாத நிலையில், ஹர்திக் மீதான விமர்சனங்கள் மேலும் வலுத்துள்ளன.

சர்ச்சையைக் கிளப்பிய 'Unfollow' நாடகம்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு, கேப்டன் ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தை 'அன்ஃபாலோ' (Unfollow) செய்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் காட்டுத்தீயாகப் பரவின.

பின்னர், மீண்டும் அவர் 'ஃபாலோ' (Follow) செய்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை என்றாலும், கடந்த சில நாட்களாக ரசிகர்கள் கொந்தளித்து வருகிறார்கள். தனது அதிருப்தியை வெளிக்காட்ட ஹர்திக் தேர்ந்தெடுத்த வழி இதுதானா என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ரோஹித்

"இது மாபெரும் அவமரியாதை!" - கொந்தளித்த முன்னாள் கேப்டன்கள்

'ஸ்டிக் டு கிரிக்கெட்' என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய இங்கிலாந்து முன்னாள் கேப்டன்களான மைக்கேல் வான் மற்றும் அலஸ்டர் குக், ஹர்திக் பாண்டியாவின் இந்தச் செயலைக் கடுமையாகச் சாடியுள்ளனர். ஹர்திக்கின் இந்த "நாடகம்" அணிக்குச் செய்யும் அப்பட்டமான அவமரியாதை என இருவரும் ஒரே குரலில் கூறியுள்ளனர். இது குறித்துப் பேசிய குக், "இந்த நவீன உலகில், ஒருவரை அன்ஃபாலோ செய்வது என்பது மிகப் பெரிய அவமதிப்பு, இல்லையா?" என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த மைக்கேல் வான், "இது மிகவும் கீழ்த்தரமான செயல்" என்று குறிப்பிட்டார்.

காயம் உண்மையா... திட்டமிட்ட புறக்கணிப்பா?

இந்த விவாதத்தின்போது, "ஹர்திக்கின் காயம் உண்மையிலேயே தீவிரமானதா?" என அலஸ்டர் குக் சந்தேகத்தை எழுப்பினார். அதற்கு மைக்கேல் வான், "அவருக்குக் காயம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், கடைசி பந்தில் பெங்களூருவிடம் தோற்ற பிறகு இப்படிச் செய்வது மன்னிக்க முடியாத அவமதிப்பு," என்று தெரிவித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து பெரும் விலைக்கு வாங்கப்பட்டு, மும்பை அணிக்குத் திரும்பிய ஹர்திக்கின் கேப்டன்சி மற்றும் செயல்பாடுகள் இந்த சீசனில் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளன.

ஹர்திக் பாண்டியா | Hardik Pandya

"வரலாற்றிலேயே இதுதான் மிக மோசமான செயல்பாடு!"

மைக்கேல் வான் மும்பை அணியின் செயல்பாட்டை மேலும் கடுமையாக விமர்சித்தார். "ஹர்திக் குஜராத் அணிக்குச் சென்று கோப்பையை வென்றார். மும்பை அவரை மீண்டும் வாங்கியது, ஆனால் இந்த சீசனில் அவர்கள் படுமோசமாகச் சொதப்பியுள்ளனர். இவ்வளவு திறமையான வீரர்களைக் கொண்ட ஒரு அணிக்கு, இது ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான செயல்பாடாக இருக்கலாம். சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஜாம்பவான்களைக் கொண்ட ஒரு அணி இதைவிட மோசமாகச் செயல்பட்டதை எங்காவது காட்ட முடியுமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார். இவர்களைத் தொடர்ந்து இங்கிலாந்தின் முன்னாள் வீரர்களான டேவிட் லாயிட் மற்றும் பில் டஃப்னெல் ஆகியோரும் ஹர்திக் மற்றும் மும்பை அணியின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளனர்.

IPL 2026: புள்ளிப்பட்டியலில் அதிரடி மாற்றங்கள்! - பிளே-ஆஃப் சுற்றை எட்டப்போகும் 4 அணிகள் எவை எவை?

ஐபிஎல் 2026 சீசன் அதன் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது! மைதானத்தில் பந்துகள் பறப்பதைக் காட்டிலும், புள்ளிப்பட்டியலில் அணிகள் முன்னும் பின்னும் நகருவதைப் பார்ப்பதுதான் ரசிகர்களுக்கு இப்போது பெரிய சுவாரச... மேலும் பார்க்க

CSK vs LSG: "'இப்படியே விளையாடு'ன்னு எங்க அப்பா சொன்னாரு" - அரைசதம் குறித்து உர்வில் உருக்கம்

நேற்று (மே. 11) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன் உர்வில் படேல் வெறும் 13 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். 13 பந்துகளில் அரைசதம் ... மேலும் பார்க்க

RCB vs MI: மைதானத்தில் தகாத வார்த்தைகளைப் பேசிய RCB பயிற்சியாளர்; பிசிசிஐ-யின் நடவடிக்கை என்ன?

ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவருக்கு பிசிசிஐ அபராதம் விதித்திருக்கிறது. நேற்று (மே.10) நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின. இதில் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்த... மேலும் பார்க்க

CSK vs LSG: "நம்மால் மீண்டும் போட்டிக்குள் வர முடியும் என அவர்தான் உத்வேகம் கொடுத்தார்" - ருதுராஜ்

ஐபிஎல் தொடரில் இன்று (மே 10) நடைபெற்ற சென்னை vs லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி, ஒரு த்ரில்லர் போட்டி என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு நெருக்கமாக விளையாடி ஒரு அபார வெற்றியைப் பெற்றுள்ளது சென்னை அணி. இந்... மேலும் பார்க்க

DC vs KKR: "அவர்களை போன்ற வீரர்கள் அணியில் இருப்பது எனக்கு அதிர்ஷ்டம்" - கேப்டன் ரஹானே

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (மே-8)நடைபெற்ற டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 143 என்ற இலக்கை 15வது ஓவரிலேயே எட்டி வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா அணி. இத... மேலும் பார்க்க

நடப்பு சாம்பியன் RCB-க்கு மறுக்கப்பட்ட உரிமை; அகமதாபாத்துக்கு மாறும் ஃபைனல்! - பினன்ணி என்ன?

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் (RCB) சொந்த மைதானத்தில் நடைபெறுவதற்குப் பதிலாக அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசிடமிருந்து அதிக அளவிலா... மேலும் பார்க்க