செய்திகள் :

CSK vs LSG: "'இப்படியே விளையாடு'ன்னு எங்க அப்பா சொன்னாரு" - அரைசதம் குறித்து உர்வில் உருக்கம்

post image

நேற்று (மே. 11) லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்ஸ்மேன் உர்வில் படேல் வெறும் 13 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார்.

13 பந்துகளில் அரைசதம் அடித்தவுடன் உர்வில் தனது வெற்றியை வித்தியாசமான முறையில் கொண்டாடினார்.

தனது பாக்கெட்டிலிருந்து ஒரு காகிதத்தை வெளியே எடுத்து கேமராக்களுக்கு முன்பு காட்டினார்.

உர்வில் படேல்
உர்வில் படேல்

அந்தச் சிறிய காகிதத்தில், 'This is for you Papa' என்று எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய உர்வில் படேல், "முதல் அரைசதம் உணர்ச்சிப்பூர்வமானது.

அதனை எனது தந்தைக்குச் சமர்ப்பிக்கிறேன். முந்தைய போட்டிகளில் நல்ல தொடக்கங்கள் கிடைத்தும் அவுட் ஆகிவிட்டேன். 'நீ விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். நீ ரன் அடித்தாயா இல்லையா என்பது எனக்கு முக்கியமில்லை, இப்படியே விளையாடு' என என் தந்தை சொன்னார். நான் எப்போதும் என் அப்பாவுக்காக இதேபோன்று விளையாடுவேன்" என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.

RCB vs MI: மைதானத்தில் தகாத வார்த்தைகளைப் பேசிய RCB பயிற்சியாளர்; பிசிசிஐ-யின் நடவடிக்கை என்ன?

ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவருக்கு பிசிசிஐ அபராதம் விதித்திருக்கிறது. நேற்று (மே.10) நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு அணியும், மும்பை அணியும் மோதின. இதில் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்த... மேலும் பார்க்க

CSK vs LSG: "நம்மால் மீண்டும் போட்டிக்குள் வர முடியும் என அவர்தான் உத்வேகம் கொடுத்தார்" - ருதுராஜ்

ஐபிஎல் தொடரில் இன்று (மே 10) நடைபெற்ற சென்னை vs லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி, ஒரு த்ரில்லர் போட்டி என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு நெருக்கமாக விளையாடி ஒரு அபார வெற்றியைப் பெற்றுள்ளது சென்னை அணி. இந்... மேலும் பார்க்க

DC vs KKR: "அவர்களை போன்ற வீரர்கள் அணியில் இருப்பது எனக்கு அதிர்ஷ்டம்" - கேப்டன் ரஹானே

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (மே-8)நடைபெற்ற டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 143 என்ற இலக்கை 15வது ஓவரிலேயே எட்டி வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா அணி. இத... மேலும் பார்க்க

நடப்பு சாம்பியன் RCB-க்கு மறுக்கப்பட்ட உரிமை; அகமதாபாத்துக்கு மாறும் ஃபைனல்! - பினன்ணி என்ன?

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் (RCB) சொந்த மைதானத்தில் நடைபெறுவதற்குப் பதிலாக அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசிடமிருந்து அதிக அளவிலா... மேலும் பார்க்க

`டெஸ்ட் கிரிக்கெட்டே பிரதானம்!' நாட்டுக்காக விளையாட கம்மின்ஸுக்கு சுமார் 100 கோடியை கொட்டும் ஆஸி.,

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டி20 லீக் போட்டிகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், தங்கள் நாட்டு நட்சத்திர வீரர்களை தக்கவைத்துக் கொள்ள கிரிக்கெட் வாரியங்கள் புதிய உத்திகளை கையாண்டு வருகின்றன. இதன் ... மேலும் பார்க்க

DC vs CSK: "இப்போது எங்கள் அணியின் முதுகெலும்பு சஞ்சு சாம்சன்தான்" - கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (மே.6) நடைபெற்ற சென்னை vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 10 புள்ளிகளுடன் தொடர்ந்து பிளே ஆஃப் ரேசில் நீடிக்கிறது சென... மேலும் பார்க்க