செய்திகள் :

`ஒரே இடத்தில் 364 ரௌடிகள்; இனிமேல் எந்த குற்றத்திலும் ஈடுபடக்கூடாது' - திருச்சி எஸ்.பி வார்னிங்

post image

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 364 பேரை திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் வரவழைத்தனர். அவர்கள் அனைவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் முன்பு ஆஜர்படுத்தினர்.

அவர்கள் அனைவரின் தனிப்பட்ட விவரங்கள், குடும்ப சூழ்நிலை உள்ளிட்டவை குறித்து மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் கேட்டறிந்தார். தொடர்ந்து, அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். குறிப்பாக, 'இனிமேல் எந்த விதமான குற்ற செயல்களிலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்தார்.

sp advice

எஸ்.பி-யின் எச்சரிக்கை கலந்த அறிவுரைக்கு பின், 'இனிமேல் குற்ற செயல்களில் ஈடுபட மாட்டோம்' என்கிற நிலைப்பாட்டோடு சரித்திர பதிவேடு குற்றவாளிகள் அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

திருச்சி மாவட்டத்தில் இது போன்ற நிகழ்வு இதுவே முதல் முறையாக நடத்தப்பட்டது என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரே இடத்தில நூற்றுக்கணக்கான ரௌடிகளை வரவழைத்து எஸ்.பி அறிவுரை வழங்கிய சம்பவம், மாவட்ட அளவில் பேசுபொருளாகி இருக்கிறது.

சிவகாசி: மகளைக் காதலித்த 2 இளைஞர்களை அடுத்தடுத்து கொலை செய்த தந்தை; சிக்கியது எப்படி?

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகிலுள்ள செவளூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். லாரி டிரைவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் 17 வயது மகளைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தெரிந்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `சரியாக பூட்டப்படாத கைதி அறை; கண்ணயர்ந்த போலீஸார்' - கைதி தப்பியோடிது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள பன்னம்பாறையைச் சேர்ந்தவர் தமிழரசன். இவர் மீது அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த அடிதடி வழக்க... மேலும் பார்க்க

கம்போடியாவில் இருந்து மும்பை பெண்ணை டிஜிட்டலில் கைது என்று சொல்லி ரூ.60 லட்சம் பறிப்பு: 4 பேர் கைது

பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த சம்பவங்களில் ஏராளமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். புதிதாக மும்பையை சேர்... மேலும் பார்க்க

மலேசியா டு திருச்சி: நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றிய நான்கு பேர்! - போலீஸார் விசாரணை

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முதர் மைதீன் (63). இவர், என்.எஸ்.பி பகுதியில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவரது சகோதரியின் மகன் சாதிக் பாஷா. இவர், மலேசியாவில் வேலை செய்து வருகிற... மேலும் பார்க்க

சென்னை: வாட்ஸ்அப் காலில் ஆபாச செயல்; ஆதாரத்துடன் புகாரளித்த பெண்ணால் சிக்கிய ஐடி ஊழியர்

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் திருமணமாகி பெண் குழந்தையுடன் சென்னை, எழும்பூரில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். 03.05.2026-ம் தேதி மாலை அந்தப் பெண் வீட்டிலிருந்தபோது, அவர... மேலும் பார்க்க

விருதுநகர்: கண்களில் மிளகாய்பொடி தூவி கொலை செய்யப்பட்ட வி.சி.க முன்னாள் நிர்வாகி - நடந்தது என்ன?

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள குரண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுரு. இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காரியாபட்டி ஒன்றியத்தின் முன்னாள் துணைச் செயலாளராக இருந்தவர். இவர், குரண்டி க... மேலும் பார்க்க