செய்திகள் :

விருதுநகர்: கண்களில் மிளகாய்பொடி தூவி கொலை செய்யப்பட்ட வி.சி.க முன்னாள் நிர்வாகி - நடந்தது என்ன?

post image

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள குரண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுரு. இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காரியாபட்டி ஒன்றியத்தின் முன்னாள் துணைச் செயலாளராக இருந்தவர்.  இவர், குரண்டி கண்மாய் பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள முட்புதரில் மறைந்திருந்த மர்ம நபர்கள் அவரது கண்களில் மிளகாய்ப்பொடியை தூவினர். அப்போது நிலைகுலைந்த அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில், முகம் சிதைந்த நிலையில் உயிரிழந்தார்.

உயிரிழந்த விஜயகுரு

வீட்டிலிருந்து கிளம்பிய விஜயகுரு, நீண்டநேரம் ஆகியும் அவரை காணவில்லை என பல இடங்களிலும் தேடினர். இறுதியில் கண்மாய் பகுதிக்கு சென்ற நிலையில்தான் விஜயகுரு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.  தகவலறிந்த ஆவியூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குரண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வந்த சமூக விரோத செயல்கள் குறித்து அவ்வப்போது காவல்துறைக்கு தொடர்ந்து தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வைத்ததாக கூறப்படுகிறது.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், “ , கடந்த ஏப்ரல் 28-ம் தேதி விஜயகுருவின் உறவினரான சக்திவேல் என்பவர்,  சிவகங்கை மாவட்டம், பூவந்தி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார்.  இந்த உயிரிழப்புக்கு விஜயகுரு தான் காரணம் என சந்தேகித்து சக்திவேலின் உறவினர்கள் அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  இருப்பினும், சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கொலை நடைபெற்றதா?

போலீஸார் விசாரணை

அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி, உயிரிழந்த விஜயகுருவின் வீட்டின் அருகே மது அருந்திய நபர்களை தட்டிக்கேட்ட அவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் கஞ்சா போதை ஆசாமிகள் கொடூரத் தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது விஜயகுரு கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் குரண்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: `அவசரத் தேவை' எனக் கூறி மோசடி; வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் சிக்கியது எப்படி?

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சத்தியராஜ் (31). இவர், சென்னை, பூந்தமல்லி பகுதியில் தங்கியிருந்து கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். 04.05.2026-ம் தேதி அண்ணாநகர், வள்ளியம்மாள் கல்லூரி பகுதியில்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட பிரபல ரெளடி மரிய அந்தோணி யார்? - பகீர் பின்னணி

தூத்துக்குடி, மினிசகாயபுரத்தைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி ஆக்னல். இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பெட்ரோ... மேலும் பார்க்க

சென்னை: வீட்டில் தனியாக இருந்த நர்ஸுக்குப் பாலியல் தொல்லை; இளைஞர் கைது; என்ன நடந்தது?

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வருகிறார். இவர், தண்டையார்பேட்டை பகுதியில் தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கியிருக்கிறார். இவரின் ... மேலும் பார்க்க

TVK: பாத்திரக்கடை உரிமையாளரைத் தாக்கி ரூ.68,000 பறிப்பு; தவெக நிர்வாகி மீது வழக்கு; ஒருவர் கைது

கும்பகோணம், ஆடுதுறை கிருஷ்ணன் கோவில் தோப்பு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன்(63). பாத்திரக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு பாத்திர கடையை மூடிவிட்டு கோடீஸ்வரன், அவரது மகன் பாலசுப்பிரமணியன்(38), க... மேலும் பார்க்க

சென்னை: குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்; தானே பிடித்து போலீஸில் ஒப்படைத்த இளம் பெண்!

கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், சென்னை, கிண்டி பகுதியில் தோழிகளுடன் வாடகைக்கு தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 06.05.2026-ம் தேதி அதிகாலையில் அந்தப் பெண், வீட்டின... மேலும் பார்க்க

தூத்துக்குடி: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு; தப்ப முயன்ற ரெளடியைச் சுட்டுப் பிடித்த போலீஸார்!

தூத்துக்குடி, மினி சகாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மரிய அந்தோணி. இவர் மீது கொலை, கொலை முயற்சி மற்றும் கொள்ளை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. ஒரு சரித்... மேலும் பார்க்க