செய்திகள் :

விஜய் முதல்வர் அரியணையில் அமர திருமா ஆதரவு கொடுப்பாரா? | TN News Live Updates

post image

முதல்வர் அரியணையில் அமர்வாரா விஜய்?

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.

ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.

ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியது.

விசிக திருமாவளவன்
விசிக திருமாவளவன்

காங்கிரஸும் தவெகவுக்கு ஆதரவு அளித்து 5 இடங்களை வழங்கிவிட்டது. மீதம் தேவைப்படும் 6 இடங்களுக்காக விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக கோரிக்கை வைத்திருந்தது.

அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் தவெக விஜய்க்கு ஆதரவு அளித்திருப்பதால் விஜய்யிடம் 116 இடங்கள் இருக்கின்றன. இதனைத்தொடர்ந்து IUML கட்சி ஆதரவு அளிக்கிறோம் என தெரிவித்துவிட்டு பிறகு அந்த முடிவில் இருந்து பின் வாங்கிவிட்டதாக தகவல்கள் வெளியானது.

விசிக தலைவர் திருமா தவெகவுக்கு ஆதரவு அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் தற்போது மெளனம் காத்து வருகிறார். திருமா இன்று விஜய்க்கு ஆதரவு கொடுப்பாரா? விஜய் முதல்வர் அரியணையில் அமர்வாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

அப்டேட்டுகளைத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து இணைந்திருங்கள்...

'திமுக அதிமுக ஆதரவில் திருமாவளவன் முதல்வர்?' - மீண்டும் தொடங்கியதா திரை மறைவு காய் நகர்த்தல்கள்?

தவெக ஆட்சியமைக்க கம்யூனிஸ்டுகள் ஆதரவளித்திருக்கும் நிலையில், விசிகவின் ஆதரவும் தவெகவுக்கு கிடைக்குமா என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கம்யூனிஸ்டுகள் எடுக்கும் முடிவையே நாங்களும் பின்பற்றுவோம் என திரும... மேலும் பார்க்க

'தவெக குதிரை பேரம் நடத்துகிறது; எடப்பாடி ஆட்சியமைக்க வேண்டும்!' - ஆளுநரை சந்தித்த டிடிவி!

107 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு ஆட்சியமைக்க முடியாமல் ஆளுநரிடம் விஜய் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஒரே ஒரு எம்.எல்.ஏவை மட்டும் வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென அ... மேலும் பார்க்க

'அதிமுகவை ஆட்சியில் அமர்த்த திமுக ஆதரவு கேட்டது!' - உண்மையை போட்டுடைத்த பேபி!

அதிமுகவை வெளியில் இருந்து ஆதரித்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கும் திட்டத்துக்கு தங்களையும் ஆதரவு தெரிவிக்குமாறு திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அகில இந்திய பொது... மேலும் பார்க்க

'120 சீட்டுகள்' தவெக உடன் விசிக; விஜய்க்கு திருமாவளவன் ஆதரவு

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் 107 (108) சீட்டுகளை வழங்கியிருந்தனர். மீதி 11 சீட்டுகளுக்குத்தான் பிற கட்சிகளின் உதவியை நாடி வந்தது தவெக. தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது, ஆளுநர் கேட்ட... மேலும் பார்க்க

சோதித்த ஆளுநர்; சொல்லியடித்த தவெக விஜய் - நாளை முதல்வராகிறார்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை இல்லாததால் அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. பெரும்பான்மை எண்ணான 118 வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் ஸ்ட்ரிக்ட்டாக கூற... மேலும் பார்க்க

'ஜோசப் விஜய் எனும் நான்...' - ஆதரவு கொடுத்த விசிக, கம்யூக்கள், இ.யூ.எம்.எல்; முதல்வராகும் விஜய்!

தவெக தலைவர் விஜய் மூன்றாவது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார். இந்த முறை விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்தியன் முஸ்லீம் யூனியன் லீக் கட்சியின் ஆதரவோடு விஜய் ஆளு... மேலும் பார்க்க