செய்திகள் :

புதிய முப்படை தளபதியாக நியமிக்கப்பட்ட தமிழர் - யார் இந்த ராஜா சுப்ரமணி?

post image

இந்தியாவின் முப்படை தளபதியாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நாட்டின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியை நியமித்து ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது.

புதிய முப்படை தளபதி - என்.எஸ். ராஜா சுப்ரமணி
புதிய முப்படை தளபதி - என்.எஸ். ராஜா சுப்ரமணி

தற்போதைய தலைமை தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

யார் இவர்?

லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்ரமணி இந்திய ராணுவத்தில் 37 ஆண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த சேவையாற்றியவர். தேசிய பாதுகாப்பு கல்விக்கழகம் (NDA) மற்றும் இந்திய ராணுவ கல்விக்கழகத்தில் (IMA) இளநிலைப் பட்டம் பெற்ற இவர், 1985 டிசம்பரில் கார்வால் ரைபிள்ஸ் படைப்பிரிவில் அதிகாரியாகத் தனது ராணுவப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார்.

கல்வியில் சிறந்து விளங்கிய இவர், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வில் எம்.பில் பட்டம் பெற்றதோடு, டெல்லி மற்றும் லண்டனிலும் உயர்கல்வி பயின்றிருக்கிறார்.

புதிய முப்படை தளபதி - என்.எஸ். ராஜா சுப்ரமணி
புதிய முப்படை தளபதி - என்.எஸ். ராஜா சுப்ரமணி

மேலும், டெல்லி தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் (NDC) முன்னாள் மாணவரான இவர், ராணுவத்தில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளைத் திறம்பட வகித்திருக்கிறார்.

மத்திய கட்டளைப் பிரிவின் தலைமைத் தளபதியாகவும், ராணுவத் தலைமைத் துணைத் தளபதியாகவும் பணியாற்றியிருக்கிறார். தற்போது, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகத் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். தனது பணிக்காக பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றிருக்கிறார்.

"பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும், ராஜ் பவனில் அல்ல!" - கமல்ஹாசன் காட்டம்

திமுக, அதிமுகவை விட, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆதரவு கோரி, தவெக, விசிக உள்ளிட்ட சில கட்சிகளுக்குக் கடிதமும் ... மேலும் பார்க்க

TVK: "பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது!" - மக்களுக்கு நன்றி சொன்ன விஜய்!

2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனிபெருங்கட்சியாக வெற்றியை பதித்திருக்கிறது. 233 தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சந்தித்த முதல் தேர்த... மேலும் பார்க்க

MK Stalin: "கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன்!" - மு.க.ஸ்டாலின் உருக்கம்

Tகொளத்தூரில் அவரை போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு 8000 வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். இன்று மாலை, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கொளத்தூர் சென்றார் ஸ்டாலின். MK S... மேலும் பார்க்க

TVK: "மக்களின் நல்வாழ்வே எங்களின் ஒரே இலக்கு!" - ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன விஜய்!

2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனிபெருங்கட்சியாக வெற்றியை பதித்திருக்கிறது. 233 தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சந்தித்த முதல் தேர்த... மேலும் பார்க்க

அன்று எம்.ஜி.ஆர், இன்று விஜய்; ஆயிரம் விளக்கில் தவெக வென்றது எப்படி?

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எப்போதுமே ஒரு வி.ஐ.பி தொகுதியாகவே பார்க்கப்படும். ஏனென்றால், முதல்வர் மு.க. ஸ்டாலின் நான்கு முறை வெற்றி கண்ட தொகுதி ஆயிரம் விளக்கு. திமுக-விற்கு செல்வாக்கு மிகுந்த ஒரு வலு... மேலும் பார்க்க

`கருணாநிதி முதல்வரான தொகுதி சைதாப்பேட்டை' - மா.சுப்ரமணியனை வீழ்த்திய தவெக வேட்பாளர்

சைதாப்பேட்டை என்பது நீண்டகாலமாகவே திமுகவின் வலுவான தொகுதிகளில் ஒன்றாக இருந்து வந்தது. குறிப்பாக, மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி,1967 மற்றும் 1971 ஆகிய தேர்தல்களில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி ... மேலும் பார்க்க