செய்திகள் :

அன்று எம்.ஜி.ஆர், இன்று விஜய்; ஆயிரம் விளக்கில் தவெக வென்றது எப்படி?

post image

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எப்போதுமே ஒரு வி.ஐ.பி தொகுதியாகவே பார்க்கப்படும்.

ஏனென்றால், முதல்வர் மு.க. ஸ்டாலின் நான்கு முறை வெற்றி கண்ட தொகுதி ஆயிரம் விளக்கு. திமுக-விற்கு செல்வாக்கு மிகுந்த ஒரு வலுவான தொகுதியாக இத்தனை காலம் இருந்து வந்திருக்கிறது.

எழிலன்
எழிலன்

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மருத்துவர் எழிலன் நாகநாதன் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

அப்போது, பா.ஜ.க சார்பில் களமிறங்கிய, நடிகை குஷ்புவை 32,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார். இம்முறையும் திமுக சார்பாக, ஆயிரம் விளக்கு தொகுதியில் அவரே களம் இறக்கப்பட்டார்.

திராவிட இயக்கத்தின் மூத்த சிந்தனையாளரான நாகநாதனின் மகன்தான் எழிலன். சட்டமன்ற உறுப்பினாரான பிறகு பரபரப்பான வேலைகளுக்கு மத்தியிலும் மருத்துவப் பணியைத் தொடர்ந்து வந்தவர் எழிலன்.

தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றி வந்தவர் அரசின் கொள்கை முடிவுகளில் தரவு சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதில் முக்கியமானவர்.

தொகுதியிலும் சரி, செயல்பாட்டளவிலும் சரி எழிலன் நாகநாதனுக்கு நல்ல பெயரையே நிலவி வந்தன. ஆனால், இத்தொகுதியில் அவர் தோல்வியைச் சந்தித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிமுக சார்பாக பா. வளர்மதி, தவெக சார்பாக ஜேசிடி பிரபாகர், நாதக சார்பாக களஞ்சியம் ஆகியோர் களமிறக்கப்பட்டனர். இவர்களில், தவெக சார்பாக களமிறக்கப்பட்ட ஜேசிடி பிரபாகர் 15141 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

விஜய் அரசியல் வருகை இத்தேர்தலில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது. அவரின் வருகை தமிழகமெங்கும் புதிய அலையை உருவாக்கியிருக்கிறது. அந்த ஃபேக்டரும் இத்தொகுதியில் பெருமளவு கைகொடுத்திருக்கிறது.

JCD Prabhakar
JCD Prabhakar

தவெக சார்பாக சென்னை ஆயிரம் விளக்கில் களமிறக்கப்பட்ட ஜேசிடி பிரபாகர் மூத்த அரசியல்வாதியாவார். ஜேசிடி பிரபாகர் இம்முறை தனது ஏழாவது சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்திருக்கிறார்.

1980-களிலேயே தனது அரசியல் வாழ்வைத் தொடங்கிய இவர், தமிழக அரசியலின் பல ஏற்ற இறக்கங்களைக் கண்டவர். அதிமுக சார்பாக ஆறு முறை சட்டமன்ற தேர்தலை சந்த்திருந்தவர் கடந்த 2023-ல் அதிமுகவிலிருந்து விலகினார். அதுமட்டுமல்ல, எம்.ஜி.ஆரின் நம்பிக்கையைப் பெற்றவரும் இவர்.

TVK: "பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது!" - மக்களுக்கு நன்றி சொன்ன விஜய்!

2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனிபெருங்கட்சியாக வெற்றியை பதித்திருக்கிறது. 233 தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சந்தித்த முதல் தேர்த... மேலும் பார்க்க

MK Stalin: "கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன்!" - மு.க.ஸ்டாலின் உருக்கம்

Tகொளத்தூரில் அவரை போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு 8000 வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். இன்று மாலை, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கொளத்தூர் சென்றார் ஸ்டாலின். MK S... மேலும் பார்க்க

TVK: "மக்களின் நல்வாழ்வே எங்களின் ஒரே இலக்கு!" - ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன விஜய்!

2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனிபெருங்கட்சியாக வெற்றியை பதித்திருக்கிறது. 233 தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சந்தித்த முதல் தேர்த... மேலும் பார்க்க

`கருணாநிதி முதல்வரான தொகுதி சைதாப்பேட்டை' - மா.சுப்ரமணியனை வீழ்த்திய தவெக வேட்பாளர்

சைதாப்பேட்டை என்பது நீண்டகாலமாகவே திமுகவின் வலுவான தொகுதிகளில் ஒன்றாக இருந்து வந்தது. குறிப்பாக, மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி,1967 மற்றும் 1971 ஆகிய தேர்தல்களில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி ... மேலும் பார்க்க

'இனி ஆதார் கார்டில் புகைப்படம், QR Code மட்டும் தானா?' - மத்திய அரசின் தெளிவான விளக்கம்

இனி ஆதார் கார்டில் புகைப்படம் மற்றும் கியூ.ஆர் கோடு மட்டும் தான் இடம்பெறும். இப்போது இருக்கும் பெர்சனல் தகவல்கள் இடம்பெறாது. தரவுகள் திருட்டு மற்றும் கசிவைத் தடுக்கவே இந்த முன்னெடுப்பு. இந்த ஆதார் கார... மேலும் பார்க்க

"சாவர்க்கர் ஆங்கிலேய அரசுக்கு கருணை மனுக்களை எழுதியது உண்மை; ஆனால்..." - சாவர்க்கரின் கொள்ளு பேரன்

லண்டனில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆற்றிய உரையில், சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், சாவர்கரின் கொள்ளுபேரனின் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.ரா... மேலும் பார்க்க