செய்திகள் :

TVK: "மக்களின் நல்வாழ்வே எங்களின் ஒரே இலக்கு!" - ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன விஜய்!

post image

2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனிபெருங்கட்சியாக வெற்றியை பதித்திருக்கிறது. 233 தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

சந்தித்த முதல் தேர்தலிலேயே இப்படியான சாதனை வெற்றியைப் பெற்றிருக்கும் விஜய்க்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

நேற்றைய தினம் ராகுல் காந்தியும், பிரதமர் நரேந்திர மோடியும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்கள்.

அவர்களுக்கு நன்றி தெரிவித்து விஜய் எக்ஸ் பக்கத்தில் தற்போது பதிவிட்டிருக்கிறார்.

ராகுல் காந்தி வாழ்த்துக்கு நன்றி சொன்ன விஜய், "மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் அழைப்பிற்கும், அன்பு மக்களின் நல்வாழ்வே எங்களின் ஒரே இலக்கு. அனைவரது வாழ்த்துகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

பொதுச் சேவையில் மிகச்சிறந்து விளங்குவதிலும், நமது மாநிலத்தின் கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பதிலும் நாம் என்றும் உறுதியுடன் இருப்போம். அதற்கு அனைவரின் கூட்டு ஒத்துழைப்பும் அவசியமானது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கே நாம் முன்னுரிமை அளிப்போம்." எனப் பதிவிட்டிருக்கிறார்.

பிரதமர் மோடி வாழ்த்து பதிவுக்கு, "கௌரவத்திற்குரிய பிரதமர் மோடி அவர்களே, தங்களின் வாழ்த்துகளுக்கு நன்றிகள். நமது மக்களின் நல்வாழ்வே எங்களின் ஒரே இலக்கு.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலனில் நாங்கள் கவனம் செலுத்துவோம். இந்த முயற்சியில் ஒன்றிய அரசின் ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

TVK: "பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது!" - மக்களுக்கு நன்றி சொன்ன விஜய்!

2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனிபெருங்கட்சியாக வெற்றியை பதித்திருக்கிறது. 233 தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சந்தித்த முதல் தேர்த... மேலும் பார்க்க

MK Stalin: "கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன்!" - மு.க.ஸ்டாலின் உருக்கம்

Tகொளத்தூரில் அவரை போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு 8000 வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். இன்று மாலை, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கொளத்தூர் சென்றார் ஸ்டாலின். MK S... மேலும் பார்க்க

அன்று எம்.ஜி.ஆர், இன்று விஜய்; ஆயிரம் விளக்கில் தவெக வென்றது எப்படி?

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எப்போதுமே ஒரு வி.ஐ.பி தொகுதியாகவே பார்க்கப்படும். ஏனென்றால், முதல்வர் மு.க. ஸ்டாலின் நான்கு முறை வெற்றி கண்ட தொகுதி ஆயிரம் விளக்கு. திமுக-விற்கு செல்வாக்கு மிகுந்த ஒரு வலு... மேலும் பார்க்க

`கருணாநிதி முதல்வரான தொகுதி சைதாப்பேட்டை' - மா.சுப்ரமணியனை வீழ்த்திய தவெக வேட்பாளர்

சைதாப்பேட்டை என்பது நீண்டகாலமாகவே திமுகவின் வலுவான தொகுதிகளில் ஒன்றாக இருந்து வந்தது. குறிப்பாக, மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி,1967 மற்றும் 1971 ஆகிய தேர்தல்களில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி ... மேலும் பார்க்க

'இனி ஆதார் கார்டில் புகைப்படம், QR Code மட்டும் தானா?' - மத்திய அரசின் தெளிவான விளக்கம்

இனி ஆதார் கார்டில் புகைப்படம் மற்றும் கியூ.ஆர் கோடு மட்டும் தான் இடம்பெறும். இப்போது இருக்கும் பெர்சனல் தகவல்கள் இடம்பெறாது. தரவுகள் திருட்டு மற்றும் கசிவைத் தடுக்கவே இந்த முன்னெடுப்பு. இந்த ஆதார் கார... மேலும் பார்க்க

"சாவர்க்கர் ஆங்கிலேய அரசுக்கு கருணை மனுக்களை எழுதியது உண்மை; ஆனால்..." - சாவர்க்கரின் கொள்ளு பேரன்

லண்டனில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆற்றிய உரையில், சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், சாவர்கரின் கொள்ளுபேரனின் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.ரா... மேலும் பார்க்க