செய்திகள் :

TVK: "பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது!" - மக்களுக்கு நன்றி சொன்ன விஜய்!

post image

2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனிபெருங்கட்சியாக வெற்றியை பதித்திருக்கிறது. 233 தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

சந்தித்த முதல் தேர்தலிலேயே இப்படியான சாதனை வெற்றியைப் பெற்றிருக்கும் விஜய்க்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சியினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இப்படியான பெரு வெற்றியை சாத்தியப்படுத்தியிருக்கும் விஜய் மக்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை சமூக வலைதளப் பக்கங்களில் போட்டிருக்கிறார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

"கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம். நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர். அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம்.

அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது. ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.

ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான்.

அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.

எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.

நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

MK Stalin: "கொளத்தூர் மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன்!" - மு.க.ஸ்டாலின் உருக்கம்

Tகொளத்தூரில் அவரை போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு 8000 வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார். இன்று மாலை, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கொளத்தூர் சென்றார் ஸ்டாலின். MK S... மேலும் பார்க்க

TVK: "மக்களின் நல்வாழ்வே எங்களின் ஒரே இலக்கு!" - ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன விஜய்!

2026 சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் தனிபெருங்கட்சியாக வெற்றியை பதித்திருக்கிறது. 233 தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சந்தித்த முதல் தேர்த... மேலும் பார்க்க

அன்று எம்.ஜி.ஆர், இன்று விஜய்; ஆயிரம் விளக்கில் தவெக வென்றது எப்படி?

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எப்போதுமே ஒரு வி.ஐ.பி தொகுதியாகவே பார்க்கப்படும். ஏனென்றால், முதல்வர் மு.க. ஸ்டாலின் நான்கு முறை வெற்றி கண்ட தொகுதி ஆயிரம் விளக்கு. திமுக-விற்கு செல்வாக்கு மிகுந்த ஒரு வலு... மேலும் பார்க்க

`கருணாநிதி முதல்வரான தொகுதி சைதாப்பேட்டை' - மா.சுப்ரமணியனை வீழ்த்திய தவெக வேட்பாளர்

சைதாப்பேட்டை என்பது நீண்டகாலமாகவே திமுகவின் வலுவான தொகுதிகளில் ஒன்றாக இருந்து வந்தது. குறிப்பாக, மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி,1967 மற்றும் 1971 ஆகிய தேர்தல்களில் இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி ... மேலும் பார்க்க

'இனி ஆதார் கார்டில் புகைப்படம், QR Code மட்டும் தானா?' - மத்திய அரசின் தெளிவான விளக்கம்

இனி ஆதார் கார்டில் புகைப்படம் மற்றும் கியூ.ஆர் கோடு மட்டும் தான் இடம்பெறும். இப்போது இருக்கும் பெர்சனல் தகவல்கள் இடம்பெறாது. தரவுகள் திருட்டு மற்றும் கசிவைத் தடுக்கவே இந்த முன்னெடுப்பு. இந்த ஆதார் கார... மேலும் பார்க்க

"சாவர்க்கர் ஆங்கிலேய அரசுக்கு கருணை மனுக்களை எழுதியது உண்மை; ஆனால்..." - சாவர்க்கரின் கொள்ளு பேரன்

லண்டனில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆற்றிய உரையில், சாவர்க்கர் குறித்து அவதூறாகப் பேசியதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், சாவர்கரின் கொள்ளுபேரனின் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.ரா... மேலும் பார்க்க