செய்திகள் :

DC vs CSK: "இப்போது எங்கள் அணியின் முதுகெலும்பு சஞ்சு சாம்சன்தான்" - கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

post image

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (மே.6) நடைபெற்ற சென்னை vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 10 புள்ளிகளுடன் தொடர்ந்து பிளே ஆஃப் ரேசில் நீடிக்கிறது சென்னை அணி.

இப்போட்டியில் 87 ரன்கள் எடுத்து போட்டியின் வெற்றிக்குக் காரணமாய் அமைந்த சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், "ஆரம்பத்தில் சில தோல்விகள் ஏற்பட்டாலும், நானும் பயிற்சியாளர் பிளெமிங்கும் பாஸிட்டிவாக இருந்தோம். கடந்த ஆண்டை விட இந்த முறை அணி பலமாக இருப்பதாகவே உணர்ந்தோம்.

sanju samson
sanju samson

சஞ்சு சாம்சனின் வருகை மற்றும் மிடில்-ஆர்டர் வரிசை எங்களை இன்னும் வலுப்படுத்தியது. டி20 கிரிக்கெட்டில் வெற்றிப் பாதையைத் தொடர ஒரு தருணம் தேவை, மூன்றாவது போட்டிக்குப் பிறகு கிடைத்த வெற்றிக்குப் பின் அது எங்களுக்குக் கிடைத்தது.

சஞ்சு சாம்சன் உலகக்கோப்பையில் காட்டிய அதே சிறப்பான ஆட்டத்தை இங்கேயும் தொடர்கிறார். அவர்தான் இப்போது அணியின் முதுகெலும்பு. பேட்டிங் ஒரு பக்கம் இருந்தாலும், பந்துவீச்சாளர்களே தொடர்களை வென்று தருவார்கள்.

மற்றவர்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த போதிலும், அகீல் மற்றும் ஜேமி போன்றோர் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்திச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். இது எனக்குப் பெரிய நம்பிக்கையை அளிக்கிறது.

அன்ஷுல் கம்போஜ் இன்று ரன்களை விட்டுக் கொடுத்தாலும், அவர் ஒரு புத்திசாலித்தனமான பந்துவீச்சாளர். அவர் விரைவில் மீண்டு வருவார்.

DC vs CSK
DC vs CSK

கார்த்திக் சர்மாவிடம் ஏற்கெனவே திறமை இருந்தது. ஆரம்பத்தில் பெரிய இலக்குகளைத் துரத்தியதால் அவருக்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை. கடந்த போட்டியில் சில பந்துகளை எதிர்கொண்ட பிறகு அவர் ஆட்டத்திற்குள் வந்துவிட்டார்.

அவர் வெறும் அதிரடி ஆட்டக்காரர் மட்டுமல்ல, மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை அடித்து நிதானமாக விளையாடத் தெரிந்தவர். இந்த வெற்றி அவருக்குத் தேவையான தன்னம்பிக்கையைத் தந்துள்ளதில் மகிழ்ச்சி" என்று பேசியிருக்கிறார்.

`சஞ்சு சாம்சன் தன்னை சஞ்சு `சாம்பியன்' என நிரூபிக்க... டெல்லியிலும் `விசில்' போட்டிருக்கிறது சிஎஸ்கே

ஏப்ரலில் சென்னையில் வைத்து டெல்லியை வீழ்த்தியது சிஎஸ்கே. அந்தப் போட்டியில் சதம் அடித்து அதற்கான முக்கிய காரணமாக சஞ்சு சாம்சன் இருந்தார். இந்தப் போட்டியிலும் சாம்சனின் அற்புதமான இன்னிங்க்ஸ்தான் வெற்றிக... மேலும் பார்க்க

`கை மாறுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி' - ரூ.15,660 கோடிக்கு வாங்கிய லட்சுமி மித்தல், பூனாவாலா!

சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிர்லா நிறுவனத்திற்கு ரூ.16,660 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் விற்பனை செய்ய அதன் உரிமையாளர் முடி... மேலும் பார்க்க

CSK vs MI: "அவங்களை அவுட் ஆக்க நெருப்புப் பந்துகளைத்தான் வீசியிருக்கணும் போல!" - ஹர்திக் ஆதங்கம்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.2) ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, ... மேலும் பார்க்க

CSK Vs MI: மும்பையை எலிமினேட் செய்த சென்னை! - சேப்பாக்க சம்பவத்தில் என்னென்ன நடந்தன?

நடப்பு சீசனில் மொத்தமே நான்கு வெற்றிகளை சிஎஸ்கே பதிவேற்றியுள்ளது, அதில் இரண்டு மும்பைக்கு எதிராக வந்தது என்பதுதான் கவனிக்கத்தக்கது..."உடைத்த உண்டியலில் கிடைத்தது வரை லாபம்" என மும்பை இந்தியன்ஸுக்கு எத... மேலும் பார்க்க

CSK Vs MI: "தவறுகள் நடக்கும்; ஆனால் ரசிகர்களுக்காகவும், CSK ஜெர்ஸிக்காகவும்..." - கேப்டன் ருதுராஜ்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.2) ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி 8 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு... மேலும் பார்க்க

ரஜத் பட்டிதருக்காக அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோலி! - நடந்தது என்ன?

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் குஜராத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. GT vs RCB Matc... மேலும் பார்க்க