செய்திகள் :

CSK Vs MI: "தவறுகள் நடக்கும்; ஆனால் ரசிகர்களுக்காகவும், CSK ஜெர்ஸிக்காகவும்..." - கேப்டன் ருதுராஜ்

post image

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.2) ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது.

இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணி 8 புள்ளிகளுடன் ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இந்தப் போட்டியில் 48 பந்துகளை எதிர்கொண்டு 67 ரன்கள் எடுத்த சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச்சென்றார்.

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்
சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்

போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ருதுராஜ், "இந்தப் போட்டியை நாங்கள் நல்ல முறையில் ஆரம்பித்தோம். அதனால் கிடைத்த உத்வேகத்தைத் தொடர்ந்து முன்னேறி கொண்டு சென்றோம்.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தது நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் எப்போதும் சொல்வது போல, நான் நல்ல ஃபார்மிலும் தன்னம்பிக்கையுடனுமே இருந்தேன்.

டி20 கிரிக்கெட்டில் சில நாள்கள் இப்படித்தான் நடக்கும், நீங்கள் ஒரு நல்ல ஷாட் அடிப்பீர்கள், அது நேராக ஃபீல்டர் கைக்கே செல்லும். சில நேரங்களில் அதே ஷாட் சிக்ஸராகவோ பவுண்டரியாகவோ மாறும்.

நான் மனதளவில் தெளிவாக இருக்கிறேன் இதற்கு என் மனைவி, சக வீரர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் என்னை எப்போதும் பாஸிட்டிவாக வைத்துக்கொள்கிறார்கள்.

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்
சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்

வீரர்கள் அனைவரும் திட்டங்களை சிம்பிளாக வைத்துக் கொள்ள வேண்டும். தவறுகள் நிச்சயம் நடக்கும். ஆனால் ரசிகர்களுக்காகவும், இந்தச் சிஎஸ்கே ஜெர்ஸிக்காகவும் நாம் அனைத்தையும் கொடுக்க வேண்டும்" என்று கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.

DC vs CSK: "இப்போது எங்கள் அணியின் முதுகெலும்பு சஞ்சு சாம்சன்தான்" - கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (மே.6) நடைபெற்ற சென்னை vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 10 புள்ளிகளுடன் தொடர்ந்து பிளே ஆஃப் ரேசில் நீடிக்கிறது சென... மேலும் பார்க்க

`சஞ்சு சாம்சன் தன்னை சஞ்சு `சாம்பியன்' என நிரூபிக்க... டெல்லியிலும் `விசில்' போட்டிருக்கிறது சிஎஸ்கே

ஏப்ரலில் சென்னையில் வைத்து டெல்லியை வீழ்த்தியது சிஎஸ்கே. அந்தப் போட்டியில் சதம் அடித்து அதற்கான முக்கிய காரணமாக சஞ்சு சாம்சன் இருந்தார். இந்தப் போட்டியிலும் சாம்சனின் அற்புதமான இன்னிங்க்ஸ்தான் வெற்றிக... மேலும் பார்க்க

`கை மாறுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி' - ரூ.15,660 கோடிக்கு வாங்கிய லட்சுமி மித்தல், பூனாவாலா!

சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிர்லா நிறுவனத்திற்கு ரூ.16,660 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் விற்பனை செய்ய அதன் உரிமையாளர் முடி... மேலும் பார்க்க

CSK vs MI: "அவங்களை அவுட் ஆக்க நெருப்புப் பந்துகளைத்தான் வீசியிருக்கணும் போல!" - ஹர்திக் ஆதங்கம்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மே.2) ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில் அணியின் தோல்வி குறித்து பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, ... மேலும் பார்க்க

CSK Vs MI: மும்பையை எலிமினேட் செய்த சென்னை! - சேப்பாக்க சம்பவத்தில் என்னென்ன நடந்தன?

நடப்பு சீசனில் மொத்தமே நான்கு வெற்றிகளை சிஎஸ்கே பதிவேற்றியுள்ளது, அதில் இரண்டு மும்பைக்கு எதிராக வந்தது என்பதுதான் கவனிக்கத்தக்கது..."உடைத்த உண்டியலில் கிடைத்தது வரை லாபம்" என மும்பை இந்தியன்ஸுக்கு எத... மேலும் பார்க்க

ரஜத் பட்டிதருக்காக அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோலி! - நடந்தது என்ன?

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றைய ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் குஜராத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. GT vs RCB Matc... மேலும் பார்க்க